Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:30:30 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 19
#KOTWART0219
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 24, 2013
குருதி பூஜை!
இந்த பக்கம் 1172 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மணமாலை வாடாத
புதுமாப்பிள்ளை ஒருவன்
பிணமாகிக் கிடக்கின்றான்.!

கர்ப்பிணி மனைவிக்கு
மருந்து வாங்க வந்த
கணவன் ஒருவன்

கலவரத்தில் சிக்கி..
காவல்துறை சுட்டதில்
துப்பாக்கி தோட்டாவின்
விஷ மருந்து துளைத்து வீழ்ந்து கிடக்கின்றான்..!

சாதிகளின் கெளரவம்
வன்முறைகளின்
வழியாகவே
வழிமொழியப் படுகிறது..!

கொன்று தீர்க்கப்பட்ட
குருதியின் சுவை..
அதிகாரத்தின் விருந்திற்கு
அவசியப்படுகிறது..!

நாற்காலிகளை நம்பும்
கருங்காலிகளின் அரசியல்
எப்போதும் நம்மை..

வாக்காளர் பட்டியலிலும்
சாதிச்சங்கத்திலும்
விடுபட்டு விடாமல்
பார்த்துக் கொள்கிறது..!

ஆடுகளையும்
கோழிகளையும்
படையல் இட்ட..

குலசாமி கோயில்களின்
முன்னோர் வழிபாடு
முறைமாறி இப்போது
ஆட்களை பலியிட்டு
ஆவேசமடைகிறது..!

சமாதிக்கு
போகிற வழியில்
சந்ததிகள் பலரும்
சமாதிகள் ஆகின்றனர்

குருபூஜை இப்போது
குருதிகளின் பூஜையானது..!

ஒரு சாதி -
இன்னொரு சாதிக்கு
எதிராக நிற்கும் போது
மனித சாதி அங்கே
மரிக்காமல்..
என்ன செய்யும்?

சேதப்படுத்துவதால்
சேரிகளை எரிப்பதால்
உண்டாகும்..
ஜோதிகளில் மட்டுமே
சாமிக்கு தீபராதனைகள்..!

இல்லாத சாமிக்கும்
பொல்லாத சாதிக்கும்
எப்போதும் தேவைப்படுகிறது
கட்டுப்படுத்த முடியாத..
வெறியூட்டும் கலவரங்கள்..!

கருணையற்ற கடவுள்களால்
கைவிடப்பட்ட குழந்தைகள்
தேம்பி யழும் தேசத்தில்
தெய்வங்கள் ஏதுமில்லை..!

வழியும்..
நம் வியர்வையின்
வரலாற்றை..
எவரோ எழுதும் வரை
இந்த இழிவுகள் தொடரும்..!

நம்மை எரிப்பதற்கு
வழிகாட்டும் அக்ரஹாரம்
எப்போதும் எரிவதில்லை..!

எந்நாளும் ஒளிர்கிறது..!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 25 December 2013
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32179

அஸ்ஸலாமு அழைக்கும் ,..........

கருத்து , சொற்கள் , நடை , சொல்லும் பாங்கு மிக அருமை அதோடு , இறைவசனத்தை துணை கொண்டு மானிடர்கள் எல்லாம் சகோதரர்கள் ஒரு தாய் தந்தை மூலம்தான் வந்தவர்கள் என்ற சகோதரத்துவ கருத்தை பதித்திருந்தால் இன்னும் நன்றாக் இருந்திருக்கும் . இவைகள் ஒற்றுமைக்கு உதவும் . ஆரீய அக்ரஹாரம் என்பது யூதர்ககளின் வழித்தோன்றல்கள் எனவே அதன் புத்திகள் அதன் போகில்தான் இருக்கும் . இவர்கள் இந்த மண்ணுக்கு சொந்தகாரகள் அல்ல .

ஆனால் ஆர்ய பரப்பான பனியா கூடங்கள் ஆர் . எஸ் .எஸ் மற்றும் துவேச ஹிந்துத்துவ வடமாநில கும்பலோடு இணைந்து மக்களிடம் பாகுபாட்டை வளர்க பாடுபடுகீறார்கள் நாம் இதில் ஒற்றுமையாக இருந்து ஹிக்மதாக செயல்படனும் . நடுனிலை இந்து சகோதரர்கள் , தாழ்த்தபட்ட சகோதரர்கள் , கிறிஸ்தவ மக்கள் எல்லாம் ஒன்றாக களம் காணணும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved