Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:21:59 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 46
#KOTWART0146
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 9, 2013
சவூதி இளவரசர் அல்வலித் ஸகாத் கொடுக்கிறார்!
இந்த பக்கம் 2577 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அது ஞாயிற்றுகிழமை இரவு மணி 11.30. படை அணி போல் வரிசையாக நின்ற மினி வேன்கள், சில கார்கள், அவற்றிற்கு மத்தியில் ராஜயானைபோல் கம்பீரமாக நின்ற கறுப்பு நிற பெரிய Hundai SUV வாகனம் ஆகியன மாளிகையின் கதவு திறந்ததும் சீறிப்பாய்ந்து கொண்டு வெளிக்கிளம்பின.

இளவரசரின் செயலாளர் ஒருவர் சுமார் 200 கடித உறைகள் வைத்திருந்தார். அவற்றின் பெறுமதி இரண்டரை லட்சம் அமெரிக்க டொலர்கள் ஆகும். ரியாத் நகரத்திற்கு சற்று வெளியே, வறியவர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அந்த வாகனக் கூட்டம் நின்றது. பல வீடுகளில் வெளிச்சம் இருந்தது. ஜனங்கள் விழித்திருந்தனர். ஆனால் ஒருவரும் வாகனச் சத்தத்தை கவனிக்கவில்லை, வெளியே வந்து பார்க்கவும் இல்லை.

வீதியில் நடமாடிய ஒரு சிலர் அச்ச உணர்வோடு இந்த வாகனக் கூட்டத்தைப் பார்த்தனர். அதில் இருந்து இறங்கிய மனிதர்கள், அவர்களின் தோற்றம், அந்த வறிய மக்களின் பகுதியில் வருவோர் போவோரைச் சற்றுக் குழப்பியது.

அந்த பெரிய காரில் இருந்து அவர் இறங்கினார். அவரது மெய்க்காப்பாளர்கள் உடனடியாக அவர் அருகில் வந்து நின்றனர். மூன்று உதவியாளர்களுக்கு அவர் சைகைகாட்டினார். அவர்கள் ஒவ்வொருவராகப் பிரிந்து பக்கத்தில் உள்ள வீடுகளில் கதவைத் தட்டினர். அவை மிகவும் ஏழ்மையான வசதிகள் அற்றவர்களின் வீடுகள்.

ஒரு வீடு திறந்தது. உதவியாளர் இளவரசருக்கு வரும்படி தனது சைகையால் காட்டினார். மெலிந்த தோற்றம் உள்ள முதியவர் ஒருவர் வாசலில் நின்று என்ன என்பது போல் கண்களால் கேட்டார். அவசரமாக உள்ளே நுழைந்த இளவரசரையும் அவரது கூட்டத்தையும் கண்டதும் அவர் மனதில் ஏதோ அரசாங்க சோதனையோ என்று கூட எண்ணத் தூண்டியது. ஆனால் புன்னகை தவழும் முகத்தோடு தன் முன் நிற்கும் இந்த மனிதர், ஏதோ நல்ல செய்தி சொல்லப் போகிறார் என்ற நினைப்பும் அவருக்கு வந்தது.

“இந்த வீட்டின் தலைமையாளர் யார்” முதியவரின் பதிலுக்காகக் காத்திராது தனது கண்களை அந்த வீட்டின் பகுதிகளில் அலையவிட்டார் இளவரசர். அந்த வீட்டின் சூழல், அலங்கோலமாக அசுத்தமாக இருந்த முன் அறை, பாத்திரங்கள் ஆகியன அவர் மனதைத் தாக்கின.

“இங்கே பாருங்கள். இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?” தனது கூட்டத்தினரைப் பார்த்து இளவரசர் சொன்னார். முன் அறையின் ஒரு பகுதி சமையலறையாகத்தான் இருந்தது. அது மறைக்கப்பட்டிருந்தது. செங்கற்களால் சிறிய இரண்டு அடுப்புகளைக் கொண்ட ஸ்டவ் ஒன்று இருந்தது. பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன. சில சுத்தப்படுத்தப்படவில்லை.காலியாக்கப்பட்ட டின்கள், அட்டைப் பெட்டிகள் அங்கும் இங்குமாகக் கிடந்தன. சுத்தம் கிலோ என்ன விலை என்று அந்த சமையலறைக் கேட்டது?

“இது மிகவும் மோசமான நிலை. மக்கள் இப்படி வசிக்கக் கூடாது” என்ற இளவரசர் தனது கையிலிருந்த ஒரு கடித உறையை எடுத்து அங்கு கூடி விட்ட குடும்பத்தாரிடம் காட்டினார். பருமனான கறுப்பு புர்கா அணிந்த பெண் ஒருவர் வந்தார். மெலிந்த அந்த முதியவரின் முன் வந்து நின்று நான்தான் இந்த வீட்டின் தலைமையாளர் என்பது போல் காட்டினார். முதியவர் மறுக்கவில்லை. எதிர்க்கவில்லை.

இளவரசர் கடித உறையை அந்த பெண்ணின் கையில் திணிப்பதற்கு முன்பதாகவே அப் பெண் அதனை இடையிலேயே பறிப்பது போல் அல்லது மரத்தில் இருந்து காய் பிடுங்குவதுபோல் பிடுங்கிக் கொண்டார். கொடிது கொடிது வறுமை கொடிது! அப்பெண்ணின் மார்பில் அந்த கடித உறை அடைக்கலமாகிவிட்டது.

இளவரசர் திரும்பி கதவை நோக்கி நடந்தார். அப்பெண் அவரைப் பின் தொடர்ந்தார். இளவரசரின் கொடைக்கு நன்றி கூறி அல்லாஹ் அவருக்கு நிறைய பறக்கத்தையும் சுகமான வாழ்வையும் கொடுக்கும் படி பிரார்த்தனை செய்தார்.

வெளியே வந்த இளவரசர் பக்கத்தில் இருந்த வீட்டிற்கு சென்றார். கதவு ஏற்கனவே திறந்து இருந்தது. அவரது உதவியாளர்களும் வாசலில் நின்றனர். ஆகவே இளவரசர் உடனடியாக வீட்டினுள் சென்றார். அவரது கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன. முந்தைய வீட்டிற்கும் இதற்கும் அமைப்பில் வித்தியாசம் இல்லை.

ஆனால் இங்கு குடும்பம் வசிக்கவில்லை. எந்த தளபாடமும் இல்லை. அதனுடைய தோற்றம் ஆறு அல்லது ஏழு ஆண்கள் வசிக்கும் இடம் போல் காட்சியளித்தது. சிறு சிறு தடுப்புகளால் சில அறைகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

இந்த குடியிருப்பு பகுதியின் பல பகுதிகளில் ஏறி இறங்கிய இளவரசருக்கு அம் மக்களின் ஏழ்மையான வாழ்வை புரிந்து கொள்ள முடிந்தது. தெருக்கள் தூசு நிறைந்தவையாகவும் சுத்தம் குறைவாகவும் இருந்தன. பல கட்டடங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் தோற்றமளித்தன.

நிற்க சில வீடுகள் மிகவும் நேர்த்தியாக இருந்தன. “இதோ பாருங்கள் சில மக்கள் தாங்கள் ஏழைகளாக இருந்தாலும் எப்படி தங்கள் வாழ்விடத்தை ஒழுங்காக அமைந்திருக்கிறார்கள்” என்று பாராட்டினார். இப்போது வந்திருப்பது யார், அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பது அப்பகுதி மக்களுக்கு புரிந்து விட்டது.

பல குடும்பங்களில் எட்டு உறுப்பினர்கள் வரை இருந்தார்கள். அதன் உறுதியை இளவரசரிடம் காட்டி தங்களுக்கு கூடுதல் உதவி வேண்டுமெனக் கேட்டனர். இளவரசரின் ஒவ்வொரு கடித உறைக்குள்ளும் சுமார் 5,000 சவூதி ரியால் இருந்தன. அதாவது சுமார் 81,000 ரூபாய்கள்.

ஒரு வீட்டின் சுவர் வர்ணம் பூசப்பட்டிருந்தது. தரையில் விரிப்புகள் போட்டு தரை தெரியாதவாறு மறைத்து அழகு படுத்தப்பட்டிருந்தது. இளவரசரை அந்த ஒழுங்கு முறை கவர்ந்தது. தன் குழுவினரிடம் அவர்களைப் பாராட்டினார். “பலர் இதில் அக்கறை காட்டுவதில்லை” என்றார் அவர்.

உண்மை சில வீடுகள் சொல்லும் தரம் இருக்கவில்லை. ஒரு வீட்டில் தெருவில் வீசிஎறியும் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அட்டைப் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. உணவுப் பொருட்களும் கூட அதில் இருந்தன. ஒரு வீட்டில் பழைய சப்பாத்து, செருப்பு போன்றவை அட்டைப்பெட்டியில் போட்டு வாசல் கதவுக்குப் பக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய கழிவுப் பொருட்களின் அட்டைப்பெட்டிகள் சில வீடுகளில் பெரும் பகுதியை அடைத்தவாறு இருந்தன.

மற்றொரு வீடு மிகவும் அழகாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது. இளவரசர் புன்முறுவல் பூத்தார். பழைய தொலைகாட்சி பெட்டி ஒன்று இருந்தது. போதிய அளவு தளபாடங்கள் நாற்காலிகள் மேசை போன்றவை இருந்தன. ஏழ்மையிலும் வசதி என்பது போல் அது காட்டியது. உயரமான கறுப்பு மனிதர் ஒருவர் இருந்தார். தான் நைஜீரியாவில் இருந்து வந்தவர் என்றார் அவர்.

இளவரசர் சற்று தயங்கினார். அவர் சவூதி பிரசைகளுக்கு தனது ஸகாத் பணத்தை கொடுப்பது வழக்கம். எதிர்பாராது சவூதி மக்கள் வசிக்கும் பகுதியில் வேறு ஒருவர் இருக்கிறார். தனது நிலையை அவரிடம் விளக்கிய இளவரசர் நீங்கள் இந்த விசயத்தை உங்கள் ஆட்களிடம் கூறக் கூடாது என்று சொல்லி ஒரு கடித உறையை அவர்கையில் திணித்தார். அந்த மனிதர் தனது வெள்ளைப் பற்களைக் காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வெளியேறிய இளவரசர் தனது உதவியாளரிடம் கூறினார்” நான் ஒரு மனிதனின் வீட்டில் நுழைந்த பிறகு, இல்லை - இல்லை உனக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி வெளியேற முடியாது. நான் ஏதாவது கொடுக்க வேண்டும்” என்றார். அவர் தனது உதவியாளர்களிடம் ஏழை சவூதி பிரஜைகளின் வீடுகளையே தெரிவு செய்யும் படி சொல்வது வழக்கம்.

இப்போது அந்த வட்டத்தில் மிகவும் வேகமாகச் செய்தி பரவி விட்டது, ஒரு மனிதர் வீடுகளுக்கு பணம் கொடுக்கிறார் என்று. ஆகவே பலரும் தங்கள் வாசலிலேயே காத்து நின்றனர். அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி, வந்திருப்பது இளவரசர் அல்வாலித் பின் தலால் என்பதை அறிந்து அவரைப் புகழ்ந்து பாடியடியே அவரைப் பின் தொடரலானாள்.

கறுப்பு புர்கா அணிந்த பெண்களின் கூட்டம் இளவரசரின் பின்னால் சென்றது. சத்தம் அதிகமாகியது. ஆகவே பின்னால் நிற்பவர் ஒவ்வொருவருக்கும், ஒரு கடித உறையை அவர் மடமடவென பகிர்ந்து கொடுத்தார். ஆனால் அது கூட்டத்தைப் பெருக்கியதே தவிர குறைக்கவில்லை. அத்தோடு குறுகிய அந்த சந்துகளில் வெளிச்சம் அதிகம் இல்லாத நிலையில் ஆட்களை அடையாளம் காண முடியவில்லை. ஆனால் வாங்கிய பெண்களில் சிலர் மீண்டும் வாங்குகின்றார்கள் என்பது மட்டும் புரிந்தது.

இப்போது அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. முன்னும் பின்னும் கறுப்பு அங்கி அணிந்த பெண்கள் கூட்டம் அவரைச் சிறை பிடிப்பது போல் சூழ்ந்து விட்டனர். கைகள் பல திசைகளில் இருந்து அவரை நோக்கி நீட்டப்பட்டன. இருந்தாலும் இளவரசர் அங்கும் இங்குமாக நுழைந்து அக் கூட்டத்தினரைத் தாண்டி வேறு சில வீடுகளுக்கும் சென்றார். பாதுகாப்பு அதிகாரிகள் இப்போது சற்று கவலைப்பட ஆரம்பித்தனர். ஆகவே அவர்கள் வளையம் அமைத்து பெண்கள் தொடராதவாறு பாதுகாத்தாலும் எப்படியோ சில பெண்கள் நுழையவே செய்தனர்.

இளவரசர் வீட்டு வாசலில் நின்றவர்களோடு பேசியபடி விரைவாக ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டு வந்தார். இப்போது சில கடித உறைகள் மாத்திரம் அவரிடம் இருந்தன. வெளியில் கூட்டம் கட்டுக்கு அடங்காத மாதிரி இருந்தது. தனது உதவியாளரிடம் கொடுத்து இதுவரை பெறாதவருக்கு கொடுக்கும்படி அவர் சொன்னார். வாகனம் நிறுத்தப்பட்ட திசையில் அவர் நடக்கலானார். பாதை தவறியது. கூட்டம் பின் தொடர்ந்தது.

இவர் வேகமாக நடக்க, இல்லை; ஓட கூட்டம் துரத்தியது. சர்ரென்று வந்து நின்றது அவரது கறுப்பு ஹுண்டாய் தப்பி பறந்து விட்டார் அவர். இளவரசர் அல்வலித் பின் தலா அவர்கள் உலக கோடீஸ்வரன்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சொல்ல முனைவது என்ன...?
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 10 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29349

அன்பிற்கினிய சகோதரர் துரை ஷாஜஹான் அவர்களே! இக்கட்டுரை மூலம் தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்? ஜகாத் கொடுத்து தவறா இல்லை கொடுக்கப்பட்ட விதம் தவறா?

முழுக்க முழுக்க தம் உடலை மறைத்து கண்கள் மட்டுமே தெரியும் அளவிற்கு புர்க்கா அணிந்து இருப்பார்கள் சவூதிப் பெண்கள். இதில் வயதான பழமை வாய்ந்த ஏழைப் பெண்கள் ஆடவர் கொடுப்பதை தொட்டு விடாமல் மிக கவனமாக தம் இரு விரல்களால் பெற்றுக்கொள்வர்.

தாருங்கள் என்று எந்த மிஸ்கீன்களும் அங்கு கையேந்த மாட்டார்கள். பள்ளிவாசல்களில் பிரதான வாசலில் கூட ஓர் மூலையில் அமர்ந்து கொண்டு நாம் தொழுகையில் அத்தஹிய்யத்தில் இருப்பது போல தம் ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி யாசகம் செய்கின்றேன் என்பதை நமக்கு சைகை மூலம் உணர்த்தும் அந்நாட்டு ஏழைகளை கொச்சைப்படுத்துவது போல அமைந்திருக்கும் கட்டுரையின் வாசகங்கள் இதோ...

தட்டிப்பறித்து பிடுங்கிக் கொண்டு அப்பெண்ணின் மார்புக்குள் கடித உறை தஞ்சமடைந்து விட்டதாக தாங்கள் பதிவு செய்துள்ள வரிகள் மனதை வெகுவாக அழுத்தியது.

இன்னும் ஜகாத் அல்லது சதக்கா கொடுக்கும்போது தம் நாட்டுக் குடிமக்கள் பிறநாட்டவர் என்று அவர்கள் பாகுபாடு பார்த்ததாக எனது இருபத்தி மூன்று ஆண்டுகால சவூதி வாழக்கையில் நான் பார்த்ததேயில்ல்லை. ஜித்தா, மக்கா, மதீனா, அல்கோபர், ரியாத் போன்ற நகரங்களில் ரமழான் காலத்தில் தனது வாகனத்தை நிறுத்தி வருவோர் போவோருக்கு பணத்தையும் உணவுப் பொருட்களையும் அள்ளி வழங்கும் நிறைய சவூதிகளை நான் பார்த்திருக்கின்றேன். ஈகை குணம் படைத்த செல்வ சீமாட்டிகளும் இதற்கு விதி விலக்கல்ல!

செல்வம் கொழிக்கும் அந்நாட்டிலும் ஏழைகள் இல்லாமல் இல்லை. அரசாங்கமே அவர்களுக்கு மானியமும் தொகையும் வழங்கி வருகின்றது. இப்போது பெருவாரியாக வேலை வாய்ப்புக்களையும் வழங்கி பிற நாட்டவர்களை கட்டாய ஆட்குறைப்பு நடத்தி தமது குடிமக்கள் நிலையை உயர்த்தி வருகின்றது. தாங்கள் சவூதி குறித்து ஏதேனும் ஆக்கங்களை இலங்கையில் வெளியாகும் சிங்கள ஊடகங்கள் மூலம் தொகுத்திருப்பின் சற்று அலசி ஆராய்ந்து பதிவு செய்யும் படி மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) on 10 August 2013
IP: 180.*.*.* India | Comment Reference Number: 29355

கட்டுரையாளரின் தொடர்ச்சியான கட்டுரைகளில் ஸவூதி ஆதரவு பரப்புரை வலுவாக இருக்கின்றது.

குடிமக்களின் துயரை துடைப்பது ஒரு நாட்டை ஆளும் அரசின் அடிப்படை கடமையாகும். அதில் விளம்பரப்படுத்துவதற்கு என்ன இருக்கின்றது ?

அது சரி ! இத்தனை வறுமையோடு சேரி பகுதிகளில் வாடும் மக்களின் துயர் இவ்வளவு நாட்கள் நீடிப்பதற்கு யார் காரணம் ? ஸவூதி அரசு என்ன செய்து கொண்டிருந்தது ? ஸவூதி இளவரசருக்கு இப்போதுதான் வசதி வந்ததா ? 81000 ரூபாய்கள் மதிப்புள்ள ரியாலை கொடுத்தால் அவர்களின் மொத்த பிரச்சினையும் தீர்ந்து விடுமா ?

முஸ்லிம் நாடுகளில் ஜகாத்தை முறையான அரசு பொறி முறை மூலம் வினியோகிப்பதுதான் முறை. அதை தனி ஆள் வினியோகித்து அதுவே ஊடகங்கள் மூலம் விளம்பரம் பண்ணப்படுவது எந்த வகையில் சேரும் என தெரியவில்லை.

தமிழக ஆட்சியாளர்கள் அள்ளித்தெளிக்கும் இலவசங்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக படவில்லை.

தங்களின் அமெரிக்க யூத விசுவாசம் , சொகுசான கேளிக்கை மிக்க மன்னராட்சி , சன நாயக மறுப்பு , சர்வாதிகாரம் , மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த தொழிலாளிகளை சுரண்டுவது போன்ற அபத்தங்களை மறைக்க இம்மாதிரி விளம்பர உத்திகள் அவர்களுக்கு தேவைப்படுகின்றது.

எகிப்தின் இஸ்லாமிய ஆட்சியாளரான முர்ஸீ அவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை கண்டித்து பேசிய உலமா ஒருவருக்கு 06 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதும் இதே ஸவூதியில்தான்.

அரபு நாடுகளை உலுக்கி வரும் அரபு வசந்தம் என்ற புரட்சி ஸவூதியிலும் பற்றி படராமல் இருக்க இது போன்ற சலுகைகள் அள்ளித் தெளிக்கப் படுகின்றன.

கியூபா, வெனிசுவேலா போன்ற மக்களாட்சி நாடுகளில் கல்வி , பொது சுகாதாரம் போன்ற பல விடயங்கள் முற்றிலும் இலவசமாக மக்களுக்கு விளம்பரமின்றி வழங்கப்படுகின்றன.

மறைந்த வெனிசுவேலா அதிபர் சாவேஸ் நாட்டின் எண்ணெய் வளத்தில் கிடைக்கும் லாபத்தின் பெரும் விகிதத்தை கொள்ளைக்கார கார்ப்பரேட்டுகளிடமிருந்து பிடுங்கி மக்களுக்கே கிடைக்க வழி வகை செய்தார். தன் இறுதி மூச்சு வரை அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் வாழ்ந்தார்.

இஸ்லாமிய சட்டங்களின் ஆள்வதாக பீற்றிக் கொள்ளும் ஸவூதி போன்ற முடியாட்சி நாட்டில் இவை கனவில் கூட சாத்தியமாகுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: zakariya (chennai) on 10 August 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29363

சகோதரர் சாஜஹான் அவர்களின் கட்டுரை மிக அருமை.

மேலும் சவூதி இளவரசர் எப்படி சிகரெட் பிடித்தார் எவ்வாறு கார் வோட்டினர் எவ்வாறு ஷாப்பிங் சென்றார் எத்தனை கல்யாணம் பண்ணினார் என்பதை பற்றி எழுதினால் இன்னும் நன்றாஹ இருக்கும்.

அடுத்த கட்டுரையை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. கற்பனை
posted by: Abu Rushda (Chennai) on 10 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29372

இந்த கட்டுரை ஆசிரியரின் கற்பனை திறனை காட்டுகிறதே அல்லாமல் உண்மை நிலையை அல்ல.

வலீத் ஹயுண்டாய் suv இல் பயணம் செய்ததே ஒரு அதீத கற்பன்ய்தான். சாமான்ய சவுதி கூட கொரியா வாகனதை விரும்புவது இல்லை அங்கு. ஜப்பானிய வஹனம் கூட லோ க்ரடே தான். அதிலும் வலீத் மாதிரி மிதமிஞ்சிய கோடீஸ்வரன் ஹயுண்டாய் SUV ல வந்தது நம்பும்படி இல்லை.

அடுத்து சாகத். சவுதி அரேபியால சாகத் வசூலிக்க தனியாக ஒரு டெபர்ட்மெண்ட இருக்கிறது ( DZIT ). அங்கு யாரும் மக்களை வருசையில் விட்டு அருசியோ பணமோ கொடுபதில்லை. அரசு பணத்தை வசூல் செய்கிறது, அரசு முறைபடி பிரித்து அளிக்கிறது. அசிர்யரின் கட்டுரை சுவாரசியம் கருதி வேணும் என்றல் படிக்கலாமே தவிர உண்மையை தேடி அல்ல.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. சவூதி?!
posted by: khatheeb (Doha) on 12 August 2013
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 29418

நான் எழுத நினைத்தை பஷீர் அவர்கள் அழகாக எழுதி விட்டார்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 12 August 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29434

Dear All, Assalamu Alaikum

Writing this type of un worthable Essays are not writers mistakes this is mistake by the Publisher.

Kayal Web Sites want to be careful about this types Of article before posting to Online.

Because our Kayal Web Site have its own respect and dignity not only within Kayal People, also respected by various other Communities in Globally for its own authentic and Quality .

Thanks & regards
U. Ahamed Sulaiman

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved