Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:57:38 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 60
#KOTWART0160
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 17, 2014
தமிழக அரசியல்: தளபதியார் அறியாரோ அம்மாவால் வரும் ஆபத்தை?
இந்த பக்கம் 2615 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கொப்ப சென்ற வாரம் தமிழக அரசியலில் புதிதாக முளைத்த பரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சமில்லை. கூட்டணி அமைப்பதில் தஞ்சாவூர் பொம்மை போல இரு புறமும் ஆடிக் கொண்டிருக்கும் மதுரைக்காரரை மையப்படுத்தி நிறைய தகவல்கள் வெளிவந்தன. அதில் பிரதானமானது, மத்தியை ஆளும் கட்சியை, விவாகரத்து பெற்ற தமிழகக் கட்சியோடு மணப்பந்தலில் மீண்டும் அமர வைக்கும் முயற்சிக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரராகச் செயல்படும் அந்த கேப்டன் பற்றிய செய்திகள்தான்.

பெண்ணின் தந்தை சம்மதித்தாலும், அவளது சகோதரரோ - வெட்டியது வெட்டியதுதான்... இனி அந்த உறவு வேண்டவேண்டாம் என்று சண்டை பிடிப்பதாகவும், அப்படியே அந்தத் திருமணம் நடந்தால், நான் அதில் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் பிடிவாதம் பிடித்து நிற்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்த தம்பதிகளுக்கிடையே இது எத்தனாவது பிரிவு - உறவு என்று எண்ணிச் சொல்லி விட முடியாது. எலியும், பூனையுமாக ஆரம்பத்தில் எதிரணியில் நின்றவர்கள் 1971இல் ஒரே மேடையில் வாக்கு கேட்டார்கள். அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் பலமுறை சேர்ந்தார்கள் - பிரிந்தார்கள். போற்றினார்கள் - பின்பு தூற்றினார்கள்.

பெட்டி படுக்கையோடு அம்மா வீட்டிற்கு ஓடிய மனைவி, தான் திருந்திவிட்டேன் என்றோ, கணவன் திருந்தி விட்டார் என்றோ திரும்பி வந்ததுண்டு. அதற்கும் மேல், இடையில் வேறு சில திருமணங்கள் செய்தும் கஜானா காலியானதும், ‘மீண்டும் கோகிலா’ பாணியில் அவள் வந்ததுமுண்டு.

ஆனால் இப்பொது சகோதரரோ கொள்கை அடிப்படையில் - கூடா நட்பு என்றும் தந்தை வர்ணித்த உறவை, மீண்டும் புதுப்பித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கேட்கிறாராம். பொதுக்குழுவில் போட்ட தீர்மானங்களுக்கும் என்ன மதிப்பு என்று கொதிக்கிறாராம் – குதிக்கிறாராம்.

பொதுக்குழு, அது என்ன பொதுக்குழு? வடை, பொங்கல், காபி சாப்பிட்டு தலைவர் சொல்வதற்கு ஆமாம் சாமி என்று கோரஸ் பாட அமைக்கப்பட்டது தானே பொதுக்குழு. கொள்கையாவது, மண்ணாங்கட்டியாவது! அப்படி ஒன்று இருந்திருந்தால், இத்தனை கொள்ளையில் நீங்கள் ஈடுபட்டதாக செய்திகள் வந்த பின்பும், உலக மகா ஊழலில் நீங்கள் ஈடுபட்டதாக உலகின் முதல் தர ஊடகங்கள் எல்லாம் செய்தி வெளியிட்ட பின்பும், உங்கள் பின்னால் இத்தனை தொண்டரணி இருக்குமா?

திருச்சியில்தான் இவ்வளவு கூட்டம் கூடியிருக்குமா? இத்தனை கோடி செலவு செய்ய பணம் எங்கிருந்து வந்தது என்று எந்த கடைநிலை தொண்டனாவது வினவியது உண்டா? திருச்சி மாநாட்டு வெற்றி ஸ்ரீரங்கம் தொகுதி எம் எல் எவை நடுநடுங்க வெச்சுருச்சு என்று ஒரு பத்திரிகை எழுதி இருக்கு.



அரசியலில் நேற்று என்பது போய்விட்டது. நாளை என்பது இன்னும் பிறக்கவில்லை. இருப்பது இன்று எனும் நிகழ்காலம் மட்டுமே. இதற்கேற்ப நாணல் புல் போல் வளைவதுதான் புத்தியே தவிர, தென்னை மரம் போல் கொள்கைக்காக தலைநிமிர்ந்து நிற்கிறேன் என்று கூறி, பின்பு தடால் என்ற சப்தத்தோடு கீழே விழுவது விவேகமாகாது. காரணம், இன்று அரசியல் - பொது சேவை என்று சொல்லப்படும் பொய் சேவைதான். அது வியாபாரமாகிவிட்டது. பணம் சம்பாதிப்பதற்குரிய ஒரு வழி என்று ஆகிவிட்டது.

காசு, பணம், துட்டு, மணியே குறி என்று வந்துவிட்டால் - அங்கு மானம், மரியாதை, நேர்மை, வாய்மை என்பதற்கெல்லாம் இடமில்லை. Politics is the last resort of a scoundrel என்று சாமுவேல் ஜான்சன் என்ற அறிஞர் ஏப்ரல் 07ஆம் திகதி 1775இல் சொன்னார். இன்று நேற்றல்ல; ஆனால் இன்றும் அது செல்லும்!

சகோதரர் எண்ணிப் பார்க்க வேண்டும்... சட்டமன்றத்தில் வெறும் இரண்டு ஆசனங்களை மட்டும் பெற்றிருந்த நிலையில் சந்தித்த 1996 தேர்தலில் - மூப்பனாரும், சூப்பர் ஸ்டாரும் உங்களோடு இணைந்ததால்தான் மறுவாழ்வு கிடைத்தது. இல்லாவிடில் அப்போதே கழகம் கல்லறைக்குச் சென்றிருக்கும். இப்போது சொல்லுங்கள்! நன்றி கெட்டவர்கள் யார்?

உலக மகா ஊழலில் ஓர் அரசாங்கத்தை இழுத்துவிட்டு, எல்லோரையும் இளிச்சவாயர்களாக நினைத்து செயல்பட்டு, வேடிக்கையான விளக்கங்களையும் தந்து, இன்று தலைவர் தூக்கமின்றி தவிக்கும் நிலையிலும், 20% விகித பங்காளியை விசாரித்தவர்கள், 60% விகித பங்காளியை முதுமையைக் காரணங்காட்டி விட்டு வைத்திருக்கும் நிலைக்காவது நீங்கள் நன்றி காட்ட வேண்டாமா? இல்லையில்லை... உங்கள் உறவு உறுதியான உறவல்ல. அது பரத்தை உறவு. கையில் காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றதின் பிரதான காரணம், ஈழப் பிரச்சினையோ, மீனவர் பிரச்சினையோ, மின்சாரமோ பிரதானம் அல்ல. கழகக் குடும்பம் – அதாவது கழகத் தலைவரின் குடும்பம் சினிமா வுட்பட முழு தமிழகத்தின் தொழில்துறைகளையும் Octopus போல ஆக்கிரமித்திருந்ததாலும், 2 ஜி அலைக்கட்டில் அவர்களின் திருவிளையாடல் நிறைந்திருந்ததாலும் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், சலிப்பும்தான்.

ஈழப் பிரச்சினையைப் பிரதானமாக தமிழக மக்கள் கருதினால், இரவு பகலாக - செத்த மனிதரையும் ‘இருக்கிறார், இருக்கிறார்... வருவார், வருவார்...’ என்று கத்திக் கொண்டிருக்கும் கறுப்புத் துண்டுக்காரனான அவரை தமிழக வாக்காளர்கள் எப்போதொ உச்சிக்குக் கொண்டுபோய் இருப்பார்களே...? ஏன் இல்லை??



தளபதியார் இன்றைய சூழ்நிலையை அரசியல் சாணக்கியத்தோடு பார்க்க வேண்டும் - அணுக வேண்டும். ‘மீண்டும் கோகிலா’ வேண்டாம்; ஐந்து ஆசனங்கள் கிடைத்தாலும் போதும் என்று இவர் சொல்கிறார். தன் வாயாலேயே அ.தி.மு.க.விற்கு 35 ஆசனங்களைக் கொடுத்துவிட்டார். பா.ஜ.க. கூட்டணியோ, வேறெந்த அணியுமோ எந்த ஆசனங்களையும் பெறும் என்று கூட சொல்ல முடியாது. தே.மு.தி.க., காங்கிரஸ் இல்லாது தி.மு.கழகம் போட்டியிடுமானால், அனைத்து ஆசனங்களும் அ.தி.மு.க.விடம் போனாலும் ஆச்சரியமில்லை.

இப்படியான சூழலில், தனக்கு - கழகத்திற்கு வரும் ஆபத்தை இவர் அறியவில்லையா? அம்மா கவனமாகக் காய்களை நகர்த்துகிறார். பா.ஜ.க. ஈர்ப்பு கொண்ட அவர் அக்கட்சியை தன் அணியில் சேர்க்கவில்லை. காரணம் தருவதை வாங்குவதெல்ல, தட்டிப் பறிப்பதே அவர் குணம்.

தேசிய அளவில், அ.தி.மு.க.,வை மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்க செய்யலாம் என்ற முயற்சியிலும் கம்யூ., கட்சிகளின் மூத்த தலைவர்கள் இறங்கியுள்ளனர். மதவாத எதிர்ப்பு கூட்டணியில் பிரதானமானவர் என்று பெயர் எடுக்கும் அவர், காங்கிரசை ஒழிப்போம் என்று சொல்கிறாரே தவிர, மதவாதத்தை எதிர்ப்போம் என்று சொல்வதில்லை. அவர் அருகில் வாலைக் குழைந்து நிற்கும் பொதுவுடமையாளர்கள் கூட அப்படிக் கூறும்படி அவரைக் கேட்பதில்லை. ஆனாலும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆட்சியமைக்க அம்மா உதவுவது உறுதி.

இவரால்தான் அவர்கள் செங்கோட்டைக்கு செல்ல முடியும் என்றால், நிச்சயம் இவர் துணைப் பிரதமர்தான். வானளாவிய அதிகாரம் டெல்லியில் இவருக்கு இருக்கும். நிச்சயமாக 2 ஜி அலை ஓசை மலைப்பாம்பு போல் ஒவ்வொருவரையும் விழுங்க ஆரம்பிக்கும். முதலாவதாக, வெளியில் பறந்து திரியும் கனியவள் கூண்டுக்கிளியாவாள். அடுக்கடுக்காக வரும் அழைப்புகளால் கோபாலபுரமே கலகலகத்துப் போகும்.

உங்களது இலக்கு 2016தான் என்று கூறுகிறீர்கள். நீங்கள் வெளியில் இருந்தால்தானே அதைச் சந்திக்கலாம்? அது மட்டுமா? 91 வயதுக்காரரையும் அவர் விட்டு வைக்க மாட்டார். வருஷத்தைப் பாரு 66 என்று பாடி ஆடி வந்தவர், 2016இல் தமிழ்நாட்டில் என்னை எதிர்க்க ஆளே இல்லை பார்- தனக்கு எதிரியே கிடையாது என்ற நிலையை அவர் உருவாக்கிவிடுவார்.

பொருளாளரான நீங்கள் பிரமிக்கும் அளவு பொருள் கட்சிக்கு எப்படி வந்தது - கிடைத்தது என்று நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி செல்ல வைப்பார் - சொல்ல வைப்பார். உங்களை செல்லாக் காசாக்கி விடுவார். இன்னும் எவ்வளவோ ஆபத்துகள் வரும்.

அந்த நிலை உங்களுக்கு மட்டுமா? என்ன பேசுகிறோம் என்பது கூட அறியாது - மற்றவர்களுக்கும் புரியாது, “துமாரா நாம் கியாஹே (உங்கள் பெயரென்ன) என்று எனக்குத் தெரிந்த இங்கிலீசில் கேட்டேன்” என்று கூறும் அந்த நடிகரையும் உண்டு, இல்லை என்று ஆக்கிவிடுவார்.

தவளையான இவர் மூச்சு பிடிச்சு உப்பினால் யானையாகிடலாம் என்று நினைக்கிறார். இவர் எப்போது "ஓவர்" ஆகிறாரோ அப்போது விழுந்துவிடுவார். 'அரபடிச்ச மூஞ்சர் களனி பானையில் விழும்' என்று காயல் தாய்குலம் அன்று கூறும். பேராசை பெரும் நஷ்டம்.

அவற்றையெல்லாம் எதிர்கொள்ள தயார் என்றால், கொள்கை என்றும், குப்பை என்றும் பேசுங்கள். அது உங்கள் தலைவிதி. ஆனால், தனிக்கட்சியாக ஒரு கட்சி இருப்பது எந்த நாட்டு அரசியலுக்கும் ஆரோக்கியமானது அல்ல. அது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்.

இந்தியை வெளியில் எதிர்த்து குடும்ப உறுப்பினர்களை ஹிந்தி பண்டிதர்களாக்கி அவர்களை மத்திய மந்திரிகளாக ஆக்கி அழகு பார்த்தது எந்த கொள்கை ? வயதில் மூத்த நேரு, வயதில் குறைந்த தளபதி காலில் விழுந்து ஆசி பெற்றார். இது எந்த பகுத்தறிவு கொள்கை? இதை பார்த்திருந்தால் பெரியார் சிரித்திருப்பார்.

எம்ஜிஆர் உடல் நலம் அற்று அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோது " என்னை முதல்வராக்குங்கள்... எம்ஜிஆர் உடல்நலம் தேறி வந்தவுடன் ஆட்சியை அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்" என்று தமிழக மக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலைவர் கெஞ்சியது எந்த பொதுக்குழுவில் போட்ட தீர்மானம்?

மதவாதத்தை எதிர்ப்பவர்கள் தான் தி.மு.க., அணியில் சேர முடியும் என திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் பேசிய கருணாநிதி, பா ஜ க தீண்ட தகாத கட்சி அல்ல என்று கூறி 1999 - 2004ல் பா ஜ கவுடன் பதவி சுகத்தில் இருந்தது ஏன் என்ற கேள்விக்கு,நேர்மையான அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை எந்த காலத்திலும் சொல்லப் போவதில்லை. 2002 குஜராத் கலவரம் குறித்த விமர்சனம் எதுவும் இவர் அந்த காலத்தில் செய்ததில்லை என்பதை நாடறியும். இது எந்த மதவாத கொள்கை ?

சகோதரர் முரண்டு பிடிப்பது இன்று தந்தை 'எதிர்க்கும்' மதவாதத்திற்கு வுரம் சேர்பதாகும் என்று யாரும் சொல்லவில்லையா? தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது மூத்தோர் மொழி.

அதிமுக உருவாகி 1977 ல் நடைபெற்ற முதல் பொது தேர்தலில் திமுக தனித்து நின்று வாங்கிய வாக்குகளை விட அதிமுக கூட்டணியாக (கம்யுனிஸ்டுகள், பார்வட்பிளாக், முஸ்லிம் லீக்) நின்று 5% வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றார்கள். திமுகவும் கூட்டணி அன்று அமைத்திருந்தால் அதிமுக கதை அப்போதே முடிந்திருக்கும்.......ஆனால் அன்று தமிழக அரசியலில் தி.மு.க. தீண்ட தகாத கட்சி.

ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணம் செய் என்பர். அதற்குத்தான் கேப்டன் முயல்கிறார். ஆதாயம் இல்லாது அல்ல. சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம். தளபதியார் அறியாரோ அம்மாவால் வரும் ஆபத்தை???

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: farook (ksa) on 17 February 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33207

சட்டு புட்டுன்னு சொல்லுங்க யார்க்கு ஒட்டு போடலாம்???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...சாணக்கியர்கள்...
posted by: mackie noohuthambi (chennai) on 17 February 2014
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33209

முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கு தீண்ட தகாதவர்,அரசியலில். ஆனால் மூதறிஞர் அவர்கள் ஜின்னாவை சந்திக்க வருகின்றபோது, பார்ப்பனன் வருகிறான், அந்த சட்ட நூலைக் கொஞ்சம் கொண்டுவா ஒருமுறை படித்து பாப்போம் என்று தனது குமாஸ்தாவிடம் சொல்வாராம் ஜின்னா. இருவரும் கோர்ட்டு புலிகள். ராஜாஜி அரசியல் சாணக்கியர் என்ற புகழ் பெற்றிருந்தாலும் ஜின்னா பாகிஸ்தானை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து பெற்று சென்றார். மகாத்மா என்று காந்தி அழைக்கப் பட்டாலும் ஆசியாவின் ஜோதி என்று நேரு புகழப் பட்டாலும் இவர்களாலும் அந்த பிரிவினை ஏற்படாமல் தவிர்க்க முடியவில்லை.

எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் அது தன சொந்த வாரிசுகளிடமிருந்தா அல்லது கழகத்தின் முதுகெலும்பாக இருப்பவர்களின் அரசியல் வாரிசுகளிடமிருந்தா என்பதை எல்லாம் கலைஞர் பார்ப்பதில்லை. ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று வெறுமனே பாடி செல்பவர் அல்ல கலைஞர். அதை செயலில் காட்டுவார். அதே நேரம் மறப்போம் மன்னிப்போம் - மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அண்ணா வழியில் சென்று, தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் ஆளுமையும் அரசியல் சாணக்கியமும் அவருக்கு உண்டு.

ராவணனுக்கு ஒன்பது முகமும் முருகனுக்கு ஓராறு முகமும் ஈராறு கரமும் உண்டு என்பதுபோல் கலைஞருக்கு பல முகங்களும் பல கரங்களும் உண்டு. வீணைகளை மீட்பதில் கல்யாண ராகமும் முகாரி ராகமும் அதில் கானங்களாக மாற்றி மாற்றிப் பாட வல்லவர் கலைஞர். சதுரங்க ஆட்டத்தில் ஒரு நாள் விஸ்வநாத ஆனந்தனாக விஸ்வரூபம் எடுப்பார், மறுநாள் கார்ல்சனாக மாறி விஸ்வநாத ஆனந்தனை வெற்றிகொண்டு அம்மா கரங்களால் பொற்கிழியும் பெற வல்லவர்.

நீங்கள் பிரதமராக ஆசைப் படுகிறீர்களா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு "என் உயரம் எனக்கு தெரியும்" என்று சப்தமில்லாமல் பதிலளித்து அமைதி அடைந்தார்.

என்ன தான் நீங்கள் கூட்டல் கழித்தல் போட்டு கணக்கு சொன்னாலும் "அவன் போட்ட கணக்கொன்று, இவன் போட்ட கணக்கொன்று இரண்டுமே தவறானது" என்று கலைஞர் தனக்கு என்று ஒரு தனிக் கணக்கு போட்டு வைத்திருப்பார். ஆனால் நமக்கு மேலே ஒருவன் வேறொரு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அவர் நம்ப மறுப்பதன் காரணத்தால் அவர் தடுமாறி விழுகிறார் தடம் மாறி விடுகிறார் என்பதுதான் நிதர்சன உண்மை. அதுதான் அவரது பலகீனமும் கூட..

மற்றப்படி" OUR GLORY IS NOT IN NEVER FALLING, BUT IN RISING EVERYTIME WE FALL" என்பதில் இந்த தொண்ணூறு வயது இளைஞன் உறுதியாக இருக்கிறார்.

எனவே "ஷாஜஹான் துரை அவர்களே, சற்றே விலகி இரும் பிள்ளாய்" என்று கலைஞர் உங்களுக்கு காதில் சொல்வது எனக்கு கேட்கிறது. நாளை நமதே, நாற்பதும் நமதே நாளை நடப்பதை இங்கு யார் அறிவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கு...... அட்வைஸ் வேண்டாம்.
posted by: s.s.md meerasahib (TVM) on 17 February 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 33210

தளபதி படைக்கே........ அஞ்சாதவர். இந்த கோளை படைக்க அஞ்சபோகிறார். தளபதிக்கு பின்னாடி ஒரு படையே....... இருப்பதை பார்க்கவில்லையா மாமா........ திருச்சியில்.? அம்மாவும், அம்பிகளும், அவர்களின் குடும்ப பத்திரம்களும் குடும்பியை பிடிச்சி யோசிக்கிற இந்த நேரத்தில் மாமாவின் இந்த கட்டுரை மாமாவின் துரதிஷ்ட்டம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: Farook (ksa) on 18 February 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33213

இந்த இக்கட்டான நேரத்தில் மதவாதத்தை வீழ்த்துவதற்கு நமக்கு ஒரு கூட்டணி இருகிறதே அதை பயன் படுத்துவதை வலுபடுத்துவதை விட்டு விட்டு, கூடிய கூட்டத்தை பார்த்து இத்தனை ஊழல் செய்த பிறகும் உங்கள் பின்னால் இத்தனை தொண்டரணி இருக்குமா? என்று வினா தொடுப்பதை என்ன சொல்வது ?

அலைகற்றில் சொல்லப்படும் தொகை யாராவது பெற்று இருக்க முடியுமா? அந்த பெரிய தொகை வெகுவாக குறைந்து நஷ்டம் என்ற அளவிலாகி, அந்த டெண்டரும் ரத்து பண்ணி நஷ்டத்தை மீட்ட மறு டெண்டரும் வந்தாச்சு. அந்த நஷ்டத்தை ஏற்படுத்திய திமுக அமைச்சர் குற்றவாளி என்றால் அது காங்கிரஸ் மத்திய அரசும் சம பொறுப்பு தான் . அதை ஏன் கட்டுரையாளர் எழுத வில்லை ?

இந்த தொண்டரணி ஏன் மதவாதத்தை முறியடிக்கும் கூட்டமாக என்று பார்க்ககூடாது ? கீ வீரமணி , திருமாவளவன் ஆகியோரின் பேச்சை அரசியலில் இந்த திமுக மேடை தவிர எங்காவது பேச முடியுமா ? பேசினாலும் விட்டு வைப்பார்களா? அதிமுக , காங்கிரஸ் ன் தெரு மேடை யிலாவது பேச அனுமதிப்பார்களா? இதை எல்லாம் பாராட்ட மனது வராதது துரதிஸ்டமே. இதற்க்கு வழிவகுத்த திமுகவை பாராட்டனும் .

வேலை பார்க்கும் ஹிந்து சகோ ஒருவர் சொல்லுவார் , அரசியல் பேச்சு வந்தால் இந்த கருணாநிதி ஹிந்து மதத்தை குறை சொல்லி எழ்துபவர் , எங்களுக்கு இவர் ஒத்து வராது என்பார் . உண்மை தான் இருந்தும் பல லட்ச ஹிந்து சகோதர்களும் இவர் பின்னே அணிவகுப்பது தான் புரியாத புதிர் , அது தான் இன்றைய மற்ற இந்திய அரசியல் தலைவர்களை விட இவரின் தனித்தன்மை விளங்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. அம்மாவின் அனுசரணையால் ஏற்பட்ட மதி மயக்காம்!
posted by: முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) on 18 February 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33216

எல்லாவற்றையும் பட்டியலிட்ட சகோதரர் ஷாஜஹான் அவர்கள் அம்மாவின் திருவிளையாடல் அதனையில் எத்தனையை எடுத்துவைத்திருக்கிறார்.

அம்மாவின் முஸ்லிம்மத எதிர்ப்புநிலையை நான் எடுத்துவைக்கவா?

இன்றுவரை பெங்களூருக்கு படையெடுப்பதை எடுத்துவைக்கவா? முஸ்லிம்களுக்கு கொடுத்த வாக்கிலிருந்து மாறியதை கட்டுரையாளர் கூறியிருக்கிறாரா? மதவாத கட்சியையும், அதன் தலைவர்களையும் தன் மனம்குளிர ஏற்று அவர்களை முதன்மைபடித்திய நிகழ்ச்சியை இந்த நாடே அறியும் அவற்றில் சிலவற்றையாவது சுட்டிக்காட்டி இருக்கிறாரா இக்கட்டுரையாளர்?

பல்லாண்டுகால போரட்டத்திற்கிடையே முஸ்லிம்களுக்கு கலைஞரால் கிடைத்த இடஒதிக்கீட்டை எதிர்த்து அவர்களுக்கெல்லாம் தேவை இல்லை என்று ஆணித்தரமாக அம்மா அறிவித்தாரே அந்த அறிவிவிப்பு இந்த கட்டுரையாளரின் கண்களுக்கு மட்டும் மறைந்ததின் மர்மம் என்ன?

இவைகளோடு இன்னும் ஏராளவற்றை மறைத்ததின் மர்மம் என்ன என்று எண்ணிப்ப்பார்க்கிறேன். இது மர்மம் அல்ல, மயக்கம்! அம்மாவின் அனுசரணையால் ஏற்பட்ட மதி மயக்காம்!

திருச்சி மாநாட்டிலிருந்து முஸ்லிம்களும்,சிறுபான்மையோரும், தாழ்த்தப்பட்டோரும் ஒருமுடிவுடன் இருக்கிறோம், அம முடிவில் மண்ணையள்ளிப்போட முயற்சிக்கும் எந்த சக்தியையும் இனம் கண்டுவிடுவோம். ஆகவே

மதி மயக்கத்திலும்,மது மயக்கத்திலும் உள்ளவர்களின் உரையாடலை உண்மை முஸ்லிம்களாகிய நாம் உணராதவர்கள் அல்ல!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

ஆதங்கத்துடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம் ) on 19 February 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33259

சகோதரர் மீரா சாகிப் அவர்களே ..! அவர் எந்த படைக்குத் தளபதி..? இந்தத் தளபதி கடந்த 2001-2006 ஆம் ஆண்டு அ தி மு க ஆட்சியின்போது சட்டமன்றத்தில் ஜெ யின் கண்ணில் படாதவாறு ஒளிந்து இருந்தவர்தான் அய்யா ...! முதலில் அவரது அண்ணனின் படையை அவர் சமாளிக்கட்டும். அப்புறமா அம்மாவின் படையை குறித்து யோசிக்கலாம் .

இங்கே இன்னொரு நண்பர் மதவாதமில்லாத அணி என்று தி மு க அணியை விமர்சித்து இருந்தார். தி மு க பி ஜெ பி யோடு கூட்டணி வைத்திருந்தபோது இவர் எங்கே இருந்தார் ...?

இப்போதும் கூட ஏற்காடு இடைத்தேர்தலின் போது பி ஜெ பி யின் ஆதரவை கேட்டவர்தானே தலைவர் ...?

நமதூருக்கே உரிய இந்த தி மு க மனப்பான்மையில் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த கனவான்களுக்கு சொல்ல அரசியல் கட்டுரை எல்லாம் தேவையில்லை எனபது எனது கருத்து.

வேண்டுமானால் முரசொலியில் இருந்து ஒரு கட்டுரையை எடுத்துப் போடலாம். நூறு கமெண்ட்ஸ் வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. சானேக்கியனின் சாகசம். அவன் சாகுன பின் தெரியும்.
posted by: s.s.md meerasahib (TVM) on 20 February 2014
IP: 106.*.*.* India | Comment Reference Number: 33267

ஒரு நண்பர் என் பெயரை சுட்டி காட்டி கேள்வி கணைகளை தொடுக்கிறார். நான் ஒன்னும் தி.மு.க. கொடியை முலுங்கினவன் இல்லை. "உள்ளதில் நல்லது'. என்ற அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பவன். இந்த நிலையில் தான்...... இந்த நேரத்தில் ஒரு இஸ்லாமியன் இருக்க முடியும் என்பது எனது கருத்து.

அண்ணன் படையையும், தம்பி படையையும்...... பற்றி ஒரு அம்மா படை நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.!!! நண்பரே....... இது. தென் இந்தியர்கள் தெரிந்து வைத்திருக்கும் ஒன்று. நீங்கள் சில கட்டுரைகளுக்கு ஆசிரியர். தெரியாமல் இருப்பது உங்களின் துரதிஷ்ட்டம்.

அண்ணனிடம் இருப்பது கூலிப்படை. தம்பியிடம் இருப்பது கொள்கை படை. கூலிப்படை எங்கு கூலி கிடைக்கிறதோ அங்கு சென்றுவிடும். நிரந்தரம் இல்லை.

"ரெண்டுல நீ...... ஒன்ன தொடு மாமா".......... (Yes or No) வியாக்கியானம் வேண்டாம்.

* கருணாநிதி ஒரு அரசியல் சானேக்கியனா? ஆம் என்றால்..... அவர் செய்த, செய்ய இருக்குற (பி.ஜே.பி. கூட்டணிகள்) செயல்கள் எல்லாம்....... அவர் மறைந்த பின் பேசுவதுதான் நியாயம். திறமை சாலியின் திறமை. அவன் சாதிச்ச பின்தான் வெளிப்படும்.

அவர் அரசியல் சானேக்கியன் இல்லை என்று நீங்கள் சொல்வார்களேயானால்....... இது உங்களின் அறியாமையை குறிக்கிறது என்பதை நாங்கள் நினைத்து கொள்கிறோம். ஏனெனில் பல புத்திமான்களால் போற்றப்பட்டவர்.

* சேது சமுத்திர திட்டத்தில் அவர் ராமரை விமர்சித்தது.......... எந்த வகையில்? அவர் கிருஸ்துவரா? அல்லது இஸ்லாமியரா? அல்லது அவரின் குடும்ப நலனை மட்டுமே....... குறிக்கோளாக நினைத்தா? அல்லது அவரின் கொள்கையை குறிக்கோளாக கொண்டா? இவரின் இந்த ராமர் விமர்சனம் என்ற ஒரு "உரை கல்." ஒன்றே........ போதும். அவரின் உண்மை கொள்கை கோட்பாட்டையும், சிறுபான்மை இனத்தின் காவலன் என்பதையும் நிருபிக்கும்.

"அறியாத்தவனுக்கு (தெரியாதவனுக்கு) சொறியும்போது தெரியும்." அதன் வேதனை.
"காக்கை கண்டறியும்........ கொக்கு கொண்டறியும்"
"காற்றுள்ள போதே....... தூற்றிக்கொள்."
"காலம் பொன் போன்றது."
போன்ற பழமொழிகள் எல்லாம் நமக்கு நம் மூதாதையர்களால் சொல்லப்பட்ட முனெச்சரிக்கை அபாய மணி வரிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved