Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:05:18 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 8
#KOTWART018
Increase Font Size Decrease Font Size
சனி, பிப்ரவரி 25, 2012
காயல் கடற்கரை நகர்: என் எண்ண அலைகள்!
இந்த பக்கம் 4231 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அரசியலில் பின்னிப் பிணைந்தவர்கள்:

நான் சென்னை புதுக்கல்லூரியில் 1966-1969 வருடங்களில் விடுதியில் தங்கி படித்தபோது எங்களுடன் அஹ்மத் தம்பி, புகாரி, மொஹிதீன் அப்துல் காதர் (மைனாகார்), செய்யது அப்துல் காதர், வெள்ளைத்தம்பி, லபீப் ஆகியோர் படித்தனர். எங்கள் கல்லூரியில் முதன் முதலில் திராவிட மாணவர் முன்னேற்ற கழகத்தினை புகாரியும், நானும் சேர்ந்து ஆரம்பித்தோம். அப்போது புகாரி மூலம் காயல்பட்டண மக்கள் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என அறிந்தேன்.

1983 ஆம் வருடம் நான் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பியாக இருந்தபோது திருச்செந்தூர் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்தது. காயல்பட்டணம் திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றி பெற தி.மு.கவிற்கும், அ.தி.மு.கவிற்கும் கடும்போட்டி இருந்தது. காயல் நகரும், புன்னக்காயலும்தான் பதட்டமான இடங்களாக அறியப்பட்டு கூடுதல் காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கல்லூரி நண்பர் மைனாகாரை காயல் நகர் சென்றபோது சந்தித்தேன். அவர் நண்பர் புகாரி சிறு வயதிலேயே நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டதாகவும், அவர் நினைவாக கடற்கரை அருகில் ஒரு நூலகம் [YUF] அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார். அங்கே சென்று நூலகத்தினைப் பார்த்து பரவசப்பட்டேன்.

தேர்தல் நேரத்தில் இரண்டு சம்பவங்கள் காயல் நகரில் நடந்ததை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு சவுக்கில் தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி செகதீசன், லீக் தலைவர் அப்துல் சமது ஆகியோர் பேச வந்திருந்தனர். கடற்கரை ஓரம் அ.தி.மு.க கூட்டத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். பேசுவதாக இருந்தது. அ.தி.மு.க. முஸ்லிம் பிரமுகர் ஒருவர் கொடுத்த தவறான தகவல் பேரில் முதல்வர் வாகனம் தி.மு.க கூட்டம் நடக்கும் சவுக் சந்தில் நுழைந்து விட்டது. கூட்டத்தில் இருந்த தி.மு.க. இளைஞர்கள் முதல்வர் வாகனம் மீது கல்வீச ஆரம்பித்து விட்டார்கள். தவறான பாதைக்கு வந்துவிட்டோம் என்பதனை உணர்ந்த எம்.ஜி.ஆர். உடனே காரை ரிவேர்ஸ் எடுக்கச் சொல்லி அ.தி.மு.க. கூட்டம் நடக்கின்ற இடத்திற்கு வந்து விட்டார்.

கல்வீச்சு சம்பவத்தினை கேள்விபட்டு கொதிப்படைந்த கட்சி தொண்டர்களை அங்கிருந்த கீழக்கரை தொழில் அதிபர் பி.எஸ்.ஏ. அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அமைதிப்படுத்தினார். இல்லையென்றால் அன்று காயல் நகர் அல்லோல கல்லோலப்பட்டிருக்கும்.

தேர்தல் முதல்நாள் இரவு காயல் வந்த அ.தி.மு.க அமைச்சர் குழந்தைவேலு குழுவினருக்கும், தி.மு.க.வை சார்ந்த வைகோ, கே.பி. கந்தசாமி குழுவினருக்கும் கடைத்தெருவில் தகராறு ஏற்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பதட்டத்தினை தடுப்பதற்காக நானும் அப்போது என்னோடு பயிற்சிக்காக அனுப்பப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி - காஷ்மீரைச் சார்ந்த - மகபூப் ஆலமும், அங்கு தங்குவதாக முடிவு செய்தோம். ஊர் பெரியவர்கள் எல்.கே.எஸ். வீட்டில் மேல்மாடியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.

1985 ஆம் ஆண்டு நான் உதகை மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி. ஆக பணியாற்றிய போது ஹாங்காங் சென்றேன். என் கல்லூரி நண்பர் கீழக்கரையினைச் சார்ந்த முகமது இர்பான் ஒருநாள் இரவு காயல் மெஸ்ஸில் சாப்பிடலாம் வாருங்கள் என அழைத்துச் சென்றார். அங்கே முகமது அலி ஜின்னா என்ற காயல் நகரினைச் சார்ந்தவர் பார்த்து, ' சார் நீங்கள் மட்டும் டி.எஸ்.பி. யாக இல்லை என்றால் 1983 சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க ஜெயித்து இருக்கும் என்ற ஆதங்கத்தினை தெரிவித்தார். இர்பானிடம் விசாரித்ததில் அவர் டி.எம்.கே. தீவிர தொண்டர் என்றார். வெளி நாட்டில் இருந்தாலும் தனது கட்சியில் எவ்வாறு பிடிப்புடன் இருக்கிறார் அவர் என்பது காட்டியது.

1988 ஆம் ஆண்டு நான் தருமபுரி எஸ்.பி.யாக இருந்தபோது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரத்திற்காக வந்த இந்திய பிரதமர் மறைந்த ராஜீவ் காந்திக்கு மாநில பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவருடன் பயணம் மேற்கொண்டேன். அவர் காயல் நகருக்கு குரும்பூர் வழியாக வந்தார். அப்போது அவருக்கு மௌலானா ஆசாத் மைதானத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த உற்சாக வரவேற்ப்பினைப் பார்த்து அங்குள்ள மக்களிடம் வாஞ்சையுடன் கலந்துரையாடியது அவர் இஸ்லாமியர் மீது எவ்வாறு பற்றுக் கொண்டுருந்தார் என்பதினைக் காட்டியது.

இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கடுமையாக ஈடுபட்டதிற்கு தமிழ் நாட்டில் பெரும்பாலான கட்சிகள் புலிகளுக்கு இந்தியாவில் தடை இருந்தாலும் ஆதரவாக குரல் கொடுத்தனர். ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினைச் சார்ந்த காயல் மகபூப் மட்டும் தைரியமாக, விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா கிழக்கு மாவட்டத்தில் காத்தான்குடி கிராமத்தில் அதிகாலை ஸுபுஹ் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை கண்முன் தெரியாது சுட்டு வீழ்த்தினார்கள். கிழக்கு மாவட்ட மக்களுக்கு குடியுரிமைக் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தது யாழ்ப்பான விடுதலைப் புலிகள்தான் என்று அப்போதைய எம்.பி. மதிப்புமிகு கே.டி. கோசல்ராம் சொன்னதாக பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

2011 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினை நடுவழியில் இறக்கிவிட்ட தோழமை கட்சிப் பற்றியும், அதற்கு தனிச் சின்னத்தில் போட்டியிட முடியவில்லையே என்ற ஆதங்கத்திலும், மற்ற சமுதாய இயக்கங்களின் தேர்தல் நிலைப்பாடு சம்பந்தமாக நான் ஒரு கட்டுரையினை, 'ஏன் இளைத்தாய் என் இனிய சமுதாயமே' என்ற தலைப்பில் எழுதி இருந்தேன். அதனைப் படித்த லீக் செயலாளர் தம்பி அபூபக்கர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட விளக்கத்தினைத் தந்து விட்டு, கூடிய விரைவிலே தாங்கள் தேர்தல் கமிசனில் அங்கீகாரம் பெற்று விடுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து சகோதரர் அப்துர் ரஹ்மான் எம்.பியும் தொடர்பு கொண்டு பேசி உறுதி செய்தார். அதன்படியே நடக்கின்ற உத்திரப் பிரதேச தேர்தலில் லீக் தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.

வியாபாரத்தில் முன்னோடி:

காயல் நகர மக்கள் பல்வேறு நாடுகளிலும், சென்னை போன்ற நகரங்களிலும் புகழ் பெற்றவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சென்னை நகரில் நகை வியாபாரத்தில் நாணயமாக பல்வேறு போட்டிகளுக்கிடையே எல்.கே.எஸ்ஸும், வாவு சன்ஸ் போன்றோர் புகழ் பெற்று இருக்கிறார்கள். நண்பர் எல்.கே.எஸ் செய்யித் அஹ்மத் வியாபாரத்தில் சிறந்து விளங்குவதுடன், கல்விச் சேவையிலும் முன்னோடியாக இருக்கின்றார் என்பது அவர் நடத்தும் பள்ளிக் கூடத்திலும், புதுக் கல்லூரி நலனிலும் மற்றும் பல்வேறு முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு உதவுதலிலும் அக்கறை காட்டுகிறார்.

அதேபோன்று திருச்சியில் உள்ள டாக்டர் அஷ்ரபும் சளைத்தவரல்ல என்று கல்வி, மருத்துவ உதவிகளை செய்து வருகின்றார் என்று நான் திருச்சியில் எஸ்.பி.யாக 1989 ஆம் ஆண்டு இருந்தபோது தெரிந்து கொண்டேன்.

வளைகுடா நாடுகளில் இருப்பவர்களுக்கு இ.டி.ஏ.யில் ஆடிட்டராகவும், கணினி தொழிலில் வல்லவராகவும் இருக்கும் புகாரியை அறிந்து இருப்பார்கள். அவர் சிறந்த மேலாளர் மட்டுமல்ல; மாறாக மார்க்கத்தில் பற்றுள்ளவர் என்பதினை சில சமயங்களில் அவர் அனுப்பும் மின் அஞ்சல் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் மிகவும் பிசியானார் என்று ஹஜ் கமிட்டி கட்டிடத்தில் நடந்த ஒரு திருமணத்தில் அவர் பக்கத்தில் உட்கார்ந்த எனக்கு அவருக்கு நிமிடத்திற்கு ஒருமுறை வரும் போனில் இருந்து அறிந்து கொண்டேன்.

விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள்:

காயல் நகரில் நுழையும் முன்பு ஒரு பெரிய விளையாட்டுத் திடல் இருக்கும். அதில் நூலகமும் உண்டு. வருடம் ஒருமுறை மௌலானா அபுல் கலாம் நினைவு கால்பந்து விளையாட்டு இந்திய அளவில் நடத்துவார்கள். எங்களூர் இளையான்குடி அணியும் அதில் கலந்து கொள்ளும். நான் 1990 இல் தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்தபோது அப்படி நடந்த போட்டிக்கு பரிசு கொடுத்துள்ளேன். அந்தப் பழக்கம்தான் தம்புச் செட்டி தெருவில் கணினி சர்வீஸ் வைத்திருக்கும் தம்பி சக்கரியாவும் ஞாயிறு காலைதோறும் மெரினா பீச்சில் வாலிபால் விளையாட்டில் ஈடுபட்டு பின்பற்றுகிறார்.

மார்க்கப் பற்றுள்ளவர்கள்:

காயல் நகர மக்கள் ஈமானை, நோன்பினைத் தவற விடாதவர்கள். இளைஞர்கள் ஆனாலும் குறுந்தாடியுடனும் தலையில் தொப்பியுடனும்தான் காணலாம். வருடந்தோறும் புஹாரி சரிப் ஒரு திருவிழா போன்று அந்த மக்கள் அனைவரும் காயல் நகருக்கு வருவதினைப் பார்க்கலாம்.

பொது சேவை:

மருத்துவமனை, கல்வி நிலையம், அரபி மதரசா போன்ற அமைப்புகள் அங்கு மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சமீபத்தில் (பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில்) கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் காயல் நகர் பஸ் நிலையம் எதிரே நோட்டீஸ் விநியோகித்திருந்து கொண்டிருந்ததாகவும், அதனை அறிந்த பொதுமக்கள் தினந்தோறும் எட்டு மணிக்கு மேல் மின்வெட்டு மூலம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நீங்கள் கூடங்குளம் மின் உற்பத்தி வேண்டாம் என்கிறீர்கள், எங்களுக்கு மின் உற்பத்தித் தேவை என்று விரட்டியதாக செய்தி அறிந்து எப்படி காயல் நகர் மக்கள் பொது நோக்குடன் நடக்கின்றார்கள் என பாராட்ட முடிந்தது.

காயல் நகர் மக்கள் சிறப்புடன் விளங்க இரு கையேந்தி எல்லாம் வல்ல அல்லாவிடம் துஆ கேட்டு விடை பெறுகிறேன்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நன்றயுடேன் நினைவு கூறும் அருமையான அதிகாரி!
posted by: MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) on 25 February 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20926

அஸ்ஸலாமு அழைக்கும்.

தங்கள் கட்டுரை நன்ரயுடேன் நினைவு கூறுவதாகும். அதே போல் M.G.R. அவர்களின் கசப்பான நிகழ்வில் சரியாக எனது வீட்டின் பால்கின்னி எதிரில் தான் அந்த கல்வீசு சம்பவம் நடந்தது.அப்போது நான் மிக பள்ளி சிறியவன். அதை என்கண்ணால் கண்டதால் மறக்க இயலாது.அல்லாஹ் மிக கிருபை செய்தான் உங்களை போல் உள்ள நல்லவர்களை பணிக்கு அனுப்பி.

மேலும் முதல்வர் பொறுப்புடன் கூடிய MGR அவர்கள் அமைதி காத்து A.K.47 உடன் நிற்கும் பாதுகாவழர்க்கு திரும்ப போகும் உத்தரவு பிரபித்தார் என்றால் அது பாராட்ட கூடிய ஒன்று. ஒரு வேலை RSS சங்பரிவார் அதிகாரிகளாக இருந்திருந்தால் அன்று காயலின் நிலைமை தலைகீல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: soluku.M.E.Syed Mohamed Sahib.@saymousa (qatar) on 25 February 2012
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 20927

அஸ்ஸலாமு அழைக்கும்.எல்லாமே உண்மைதான்.ஆனால் ஒரு விபரம் மட்டும் தவறான தகவல் கிடைத்ததை அறிந்து உண்மை தகவலை அறிய தருகிரே ன்.அந்த இடத்தில் meeting போட அனுமதி இல்லை.அனுமதி வாங்கிய இடம் வேரூ.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: Vilack SMA (Hong Shen , Siacun) on 25 February 2012
IP: 121.*.*.* China | Comment Reference Number: 20928

ஜனாப் A . P . Mohamed Ali , அவர்கள் நமது ஊரை நினைவு கூர்ந்ததற்கு நன்றி .

" கல்லெறி சம்பவம் " ...... சம்பவம் நடந்தது உண்மை . ஆனால் கல்லெறி எதுவும் நடக்கவில்லை . சம்பவம் நடக்கும்போது நான் மிகவும் அருகில் இருந்தேன் . பெரியசதுக்கை நால்முனை சந்திப்பில் D M K மேடை போட்டிருந்தது , சிறு நெய்னார் பள்ளி முனையில் இருந்து M G R அவர்களின் வாகனம் வருகிறது . ஆனால் M G R அவர்கள் , அங்கு ஏதோ கூட்டம் நடக்கிறது , அதனால் நாம் அங்கு செல்ல வேண்டாம் என்றுதான் கூறி இருக்கிறார் . ஆனால் கட்சிக்காரர்கள் M G R இடம் , அது சிறிய கூட்டம்தாம் , நாம் செல்லலாம் என்று சொல்லி அழைத்து வந்தனர் .

சதுக்கை வரை வந்ததும் , D M K காரர்கள் , அவர்களுக்கு வழி விடாமல் திரும்பிப்போ என்றனர் . கல்லெறி சம்பவம் எதுவும் நடக்க வில்லை . அப்போது , காவல் துறையினர் " lathi charge " பண்ணவா என்று M G R இடம் கேட்டனர் . அந்த பெருந்தன்மையாளன் M G R அவர்கள் அப்படி எதுவும் செய்துவிடாதீர்கள் என்று சொன்னார் . இந்த உரையாடலின்போது நான் M G R அவர்களின் வேனுக்கு மிக அருகில் இருந்தேன் . ஒருவேளை lathi charge நடந்திருந்தால் ......? நினைக்கவே பயமாக உள்ளது

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) on 26 February 2012
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20929

அன்பு சகோதரர் காவல் துறை உயர் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்ற ஜனாப் முஹம்மத் அலி அவர்களின் கட்டுரை மிக அருமை. பழைய சம்பவங்களை நினிவு கூர்ந்து கட்டுரை வடித்து இருக்கிறார்.

மறைந்த என் பெரியப்பா மகன் சகோதரர் மர்ஹூம் M .L .புஹாரி காக்கா அவர்களை நினைவு கூர்ந்துவுள்ளார். அன்னார் அரசியலில் மாநில அளவில் மறைந்த முதல்வர் MGR உடன் தொடர்புடன் இருந்தவர் .மற்றுமல்ல . மாணவர்களின் படிப்பு விசயத்தில் பல்வேறு ஆக்க பூர்வமான சில நடவடிக்கைகளை எடுத்து அதனை தொடர்ந்து செயல் படுத்த முடியாமல் அல்லாஹ் அவன் அளவில் எடுத்துகொண்டான். இந்நேரம் அன்னாரை நினைத்து நன்றியுடன் விளிதிருக்கிறார் கற்றுரையாளர் .மர்ஹூம் அவர்களின் மண்ணறையை அல்லாஹ் பிரகாசமாக கியமப்ரிபந்தம் ஆக்கி மேலான சுவனபதியில் நுழைய செய்வானாக ஆமீன்

நன்றிகளுடன்
M .E .L .நுஸ்கி - ரியாத் சவுதி அரேபியா
மற்றும் மா.செ.குடும்பத்தினர்கள்
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. காலம் கடந்த நினைவுகளும்,நிகழ்வுகளும் ...
posted by: M.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ்மைந்தன். (????????????) on 26 February 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20930

ஒரு எழுத்தாளன் எந்த சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றானோ எந்த சூழ்நிலையைத் தழுவிதான் அவனது எழுத்தும்,ஆக்கமும் இருக்கும் என்பதற்கு முன்னால் அதிகாரி ஐ.பி.எஸ். அவர்களும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்.அவர் காவல் துறையில் பணியாற்றி வந்ததால் அதன் நெடியும்,கம்பீரமும்,ஸ்டேட்மெண்ட்ஸும் (வாக்குமூலம்) அதில் பளிச்சிடுகின்றது.மனிதர் நமதூரை நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றார்.துப்பாக்கி முனயைப் பார்த்தே பழகிப் போன ஓர் முரட்டு உருவத்திற்குள் பேனா முனையும் ஒளிந்திருப்பது ஆச்சரியமாகவே உள்ளது.

அன்று,அமரர்- எம்.ஜி.ஆர்.அவர்கள் மட்டும் கண் அசைத்திருந்தால் ரணகளமாகியிருக்கும் காயல்பட்டணம்.அவரின் சமயேஜிதமான முடிவு அந்த நேரத்தில் சரியானதாகவே இருந்தது. தவறு அவர் மேல் இல்லை.உள்ளூர் ரத்தத்தின் ரத்தம் தான் தவறான வழியைக் காட்டி, அமரர்.எம்.ஜி.ஆர்.அவர்களின் சரித்திரத்தில் இப்படி ஓர் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார்.இது நம் காயலுக்கும் பொருந்தும். என்ன? காலம் கடந்த நினைவுகளும்,நிகழ்வுகளும் இப்போதும் நம் நெஞ்சை வருடத்தான் செய்கின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 26 February 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20931

காவல்துறை முன்னாள் அதிகாரி முகமது அலி அவர்களோடு நமதூர் மாணவர்கள் இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள் என்பதை நினனக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. கம்பீரமான மீசையோடும் ஆகிருதியான உடலோடும் அவர் போலிஸ் உடையில் நிற்கும் கோலம் இப்போதும் நினைவில் நிற்கிறது.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய காவல்துறை அதிகாரியாக அவர் இருந்தார்.

திருசெந்தூர் இடைத்தேர்தலின் போது நடந்த எம்.ஜி.ஆர் மீது நடந்த கல்லெறி சம்பவம் குறித்து இங்கு பலரும் பலவிதமான தகவல்களை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எல்லாமே அரை உண்மைகள்தான். காயல் நகருக்கு எம்.ஜி.ஆரின் வருகையை பொறுக்காத சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டசம்பவம்தான் அது.

எம்.ஜி.ஆரின் வருகையும் அவரது பயண வழித்தடமும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு காவல் துரையின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் வேண்டுமென்றே சில விஷமிகள் திடீரென பெரிய சதுக்கை முனை அருகே ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஒரு முதல்வர் வரும் பாதையில் இப்படி ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும் என கட்சிக்காரர்களோ அல்லது காவல் துறைனரோ எதிர்பார்க்கவில்லை.

விஷமிகள் திட்டப்படியே எல்லாமும் நடந்தது. எம்,ஜி,ஆரை நோக்கி கடும் வசைமொழிகள் பொழியப்பட்டன". எம்.ஜி.ஆரே திரும்பி போ "என காட்டுக்கூச்சல் எழுந்தது. சிலர் செருப்பை தூக்கிக்காட்டினர் .இன்று அதில் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் யாரும் உயிரோடு இல்லை. காலமாகி விட்டார்கள். எனக்கு தெரிந்து காலமாகி விட்ட நமதூரின் மிக பிரபலமான மார்க்க அறிந்சர் ஒருவரும் இதில் அடக்கம்.

தம்பி விளக்கு எஸ்.எம். எ.சொல்வது போல எம்.ஜி.ஆரின் வாகனம் மீது கல் எதுவும் படவில்லை. அது ஒன்றினால்தான் அன்று அப்பகுதி மக்கள் பிழைத்தனர். இல்லையெனில் அன்றைக்கு ஏற்பட்டிருக்க கூடியது சர்வ நாசம்தான்.

எம்,ஜி,ஆரே உத்தரவு இட்ட போதிலும் கட்சிக்காரர்கள் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.இதுவே அவர்கள் அன்றும் இன்றும் போற்றக்கூடிய தலைவருக்கு நிகழ்ந்திருக்குமானால் நடந்திருப்பதே வேறு. அதை நினைத்து இன்றைக்கு வேண்டுமானால் நிறையப்பேர் வருத்தப்படலாம். அனால் அன்றைக்கு அதை ஒரு சாதனையாக சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள்தான் அதிகம்

இவ்வளவெல்லாம் செய்தும் இவர்களின் வாக்கையும் மனதையும் ஆக்ரமித்த தலைவர் இவர்களுக்கும் இவர்கள் வாழும் இந்த ஊருக்கும் செய்த நன்மை என்ன...? எதுவுமில்லை.

தாங்கள் அன்று செய்தது தவறு என்று ஒரு சதவீதமாவது உணர்ந்தாலும் அவர்களின் சிந்தனைத்திறன் மேம்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: abdul azeez (chennai) on 26 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20932

அன்பு சகோதரர் காவல் துறை உயர் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்ற ஜனாப் முஹம்மத் அலி அவர்களின் கட்டுரை மிக அருமை. அவர் நினைவு கூர்ந்து எழுதியுள்ள கட்டுரையில், சில கசப்பான சம்பவங்களையும் நினைவுப்படுதியுள்ளார்.அவற்றை தவிர்த்து இருந்திருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . அட்மிர் கூட அச்செய்தியை பதிவு செய்யாமல் தவிர்த்து இருக்கலாம்.

A .G .அப்துல் அஜீஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. தலையை சுத்தி மூக்கை தொடும் நபர்கள்......!!!
posted by: s.s.md meerasahib (zubair0 (riyadh) on 26 February 2012
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20933

டாக்டர் ஏ.பி.முகமது அலி, ஐ.பி.எஸ் (ஓ) - காயல் கடற்கரை நகர்: என் எண்ண அலைகள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை படித்ததில் பழையதை நினைவு கூற வைத்துள்ளார். வாழ்த்துக்கள்.

எங்களின் சின்ன வயது நினைவுகளை தூண்டி இருக்கிறார் நம் டாக்டர் ஏ.பி.முகமது அலி, ஐ.பி.எஸ் (ஓ) அவர்கள். யானை வரும் பின்னே..... மணி ஓசை வருவது முன்னே........ என்று ஜாமிவுல் அஸ்கர் பள்ளி முனையில் ஜெயலிதா.... எம்.ஜி.ஆர் சில மணிநேரம்களில் வர இருப்பதை உணர்த்த பிரசிங்கத்ததும், சில நாட்களுக்கு பின் வந்த கலைஞர்..... அவருடைய உரையில்..... யானை வரும் பின்னே..... மணி ஓசை வருவது முன்னே........ என்பதற்கு அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி இருக்கும். சும்மா சுத்தும் யானைக்கு மணி இருக்காது என்பதை விளக்கம் கொடுத்ததும், எம்.ஜி.ஆரின் உரையில் குர்ஆணை எழுதியது முகமது நபி (ஸல்) அவர்கள் என்பதை உளறியதையும் நினைவில் கொள்ளும் இத்தரணம்.

மேலும் வாசகர் ஒருவர் குறிப்பிட்டு இருப்பது தலையை சுத்தி மூக்கை தொடும் ரூட்டை இதுதான் உண்மையான ரூட் என்பதை ஆணித்தரமாக கூறி, ஜனாப் டாக்டர் ஏ.பி.முகமது அலி, ஐ.பி.எஸ் (ஓ) அவர்களே...... கட்டுரையில் பொய் உரைப்பதுபோலும், நம் சகோதரர்களை விஷமிகள் என்று கூறி விஷம் கக்கி இருப்பது காயலுக்கு கண்ணியம் சேர்க்கும் செயல் இல்லை.

அட்மின் அவர்களே..... தலைப்பில் ஒரு எழுத்து பிழை உள்ளதோ..... சந்தேகம். காயல் கடற்கரை நகர்: என் எண்ண அலைகள்! (என்ன அலைகளா? எண்ண அலைகளா?)

Administrator: எண்ண அலைகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: OMER ANAS (DODA QATAR.) on 26 February 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20934

எம்,ஜி,ஆரே உத்தரவு இட்ட போதிலும் கட்சிக்காரர்கள் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.இதுவே அவர்கள் அன்றும் இன்றும் போற்றக்கூடிய தலைவருக்கு நிகழ்ந்திருக்குமானால் நடந்திருப்பதே வேறு. அதை நினைத்து இன்றைக்கு வேண்டுமானால் நிறையப்பேர் வருத்தப்படலாம். அனால் அன்றைக்கு அதை ஒரு சாதனையாக சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள்தான் அதிகம் சகோ சுகைப் அவர்களே நீங்கள் நினைப்பது தவறு என்று எனக்குள் படுகிறது!

ஏன் என்றால்,காயலான் வந்த நாடும்,அவனுக்கு இங்குள்ள அரசர்கள் கொடுத்த மரியாதையும்,பார்க்கும் போது, சரித்திர நாயகன் M G R நினைத்தால் கூட,ஏன் நீங்கள் நினைக்கும்,அன்றும் இன்றும்,என்றும் நினைக்கும் எந்த தலைவன் நினைத்தாலும், எங்கள் காயலையும், சதுக்கைத் தெருவாசிகளையும்,(இறைவன் அருள் எங்களுக்கு இருக்கும் பட்சம்)ஒரு புல்லும் புடுங்க முடியாது!

அல்லாஹ் நினைத்தால் என்று சொல்லும் சிலர்,இன்று (அன்று)MGR நினைத்தால் என்று சொல்வது நம்மை என்ன நினைக்க வைக்கிறது? உண்மை எது என்று புரியுங்கள்! அப்பத்தான் புரியும் நாம் எவ்வழி நடக்க வேண்டும் என்று!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: H.M. SHAFIULLAH (CHENNAI-40) on 26 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20935

Mr. Omer Anas statement is not acceptable. It looks like horrible. Whether the route was misguided or DMK meeting was in the wrong place, people should not behave like this. Whether one likes or dislikes MGR, he was CM that period. We should respect him as he was more or less a neutral person between many communities as well as elected by peoples as Chief Minister of Tamilnadu. Still I feel shame for this incident.

It is a red mark to Kayal till date. Once upon a time Kayal peoples have exorbitant confident on Karunanithi. What they get out of this? Nothing. I am neither supporter of DMK or ADMK. In neutral way I am giving my thoughts here.

Mannerism is very essential part of life to any human being. MGR maintained patient and this was a great insult to those thrown stones and slippers.

Regards
SHAFIULLAH
9710008200

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: seyed mohamed (ksa) on 27 February 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20939

எம்.ஜி.ஆரின் வருகையும் அவரது பயண வழித்தடமும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு காவல் துரையின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் வேண்டுமென்றே சில விஷமிகள் திடீரென பெரிய சதுக்கை முனை அருகே ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஒரு முதல்வர் வரும் பாதையில் இப்படி ஒரு பொதுக்கூட்டம் நடைபெறும் என கட்சிக்காரர்களோ அல்லது காவல் துறைனரோ எதிர்பார்க்கவில்லை.- நண்பர் சுஹைப்

ஏற்கனவே அங்கு நடத்த dmk கூட்டம் போலீஸ் ஒப்புதல் பெற்று தான் நடந்தது. ஒரு முதல்வர் வரும்போது, மெயின் ரோட்டில் தான் எதிர் கட்சியை நடத்த விடமாட்டார். mgr ஐ தவறுதலா அவர் கட்சி தொண்டர்கள் தான் அனுப்பி வைத்து கலக்கம் ஏற்படுத்த நினைத்தார்கள். பயண வழித்தடமும் இடையில் தவறுதலா உபயோக முயற்சி நடந்தது. தவறு முழுக்க முழுக்க அவர் தொண்டர் பக்கம் தான், அதான் ஒன்னும் செய்ய முடியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. நடுதலும்,பிழுதலும் நாற்றுக்கு மட்டுமே...நமக்கில்லை...!!!
posted by: M.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ்மைந்தன். (????????????) on 27 February 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20940

கமெண்ட்ஸ் நம்பர் 10. சகோதரர் ஷஃபியுல்லாஹ் அருமையான கருத்தை தந்துள்ளார்.அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள்.அழகான கருத்து,சொல்லும் விதம்,எழுத்து நாகரீகம்,அனைத்தும் உள்ளது. இதை ஷஃபியுல்லாஹ் அவர்களேக் கூட செய்யலாம்.காரணம்,ஆங்கில கருத்துக்களை விட தமிழ் (தாய் மொழியில்) உள்ள கருத்துக்களையே பலரும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். எனவே தாம் தமிழில் டைப் செய்யும் வசதி இவ் வலைதளத்தில் தரப்பட்டுள்ளது.இந்த வசதி வந்த பின் கருத்தாளர்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்துள்ளது.

பொதுவாக, கருத்து என்பது எண்ணங்கள்,மற்றும் செயல்பாடுகளின் பிரதிபலிப்பே ஆகும். ஆயிரக் கணக்கானோர் படிக்கும் போது முகம் சுழிக்கும் வண்ணம் எழுதுவதை தவிர்த்தல் வேண்டும். கருத்து எழுதும் போது எழுத்தில் சில நாகரீகங்களைக் கடைபிடித்தல் அவசியம்.புல்லைப் பிடுங்குதல், பல்லைப் பிடுங்குதல் போன்ற வார்த்தைகளைக் கையாளக்கூடாது. இதனால் சில தரமான கருத்து எழுத்தாளர்கள் கூட கடைசி பெஞ்சுக்குப் போய்விடுகின்ற நிலை தான் வருகின்றது.

குதர்க்கம்,குத்தல் போன்று எழுதுவது சிலரது வாடிக்கை.சில நேரங்களில் அது ரசிக்கும் படி இருக்கலாம்.அதற்காக அவைகளுக்கு விளக்கம்,மறு கருத்து என தொடரும் போது தான் பிரச்சனைகள்,மன உறுத்தல் என மாறிவிடுகின்றது.எனவே தயவு செய்து இனி நடுதல்,பிடுங்குதல்,களை பறித்தல் ஆகியவற்றைத் தவிர்ப்போமாக.

நான் காயல்பட்டணம் டாட் காமில் கருத்தெழுதித் தான் எத்தனையோ நபர்களின் நல்ல நட்பை பெற்றேன்.பெற்றுக் கொண்டும் வருகின்றேன்.ஓர் அழகான கருவி இவ் வலைதளம் அதை முறையாகப் பயன்படுத்தி பயனடைவோமாக!

குசும்பு:
அட்மின் அவர்களே! நான் அவ்வப்போது கருத்தின் இறுதியில் குசும்பு என்ற கொசுரு எழுதுவது வழக்கம். அதுலெ போய் புல்லைப் புடு....ஸாரி....ஸாரி.... கத்திரி,கித்திரி போட்டுறாதீங்க....
-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: K S MUhamed shuaib (Kayalpatinam) on 27 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20942

ரியாத் சகோதரர் மீராசாகிப் ...."யானை வரும் முன்னே..."என்று ஜெயலலிதா பேசியது குறும்பூரில்..நமதூரில் அல்ல. கலைஜெர்தான் பேச்சில் சமார்த்தியசாளியாயிற்றே...அது ஒன்றுதான அவரது மூலதனம். அந்த பேச்சை வைத்துதான் அவர் நீண்ட காலம் நம் சமுதாயத்தை ஏமாற்றி கொண்டிருந்தார்.

உங்கள் போன்றவர்களுக்குஒன்றை சொல்கிறேன்.

"குர் ஆனை முகமது நபிகள் எழுதினார் "என்று நமதூரில் எங்கும் எம்.ஜி ஆர் பேசியதாக நினைவில் யில்லை. அவர் வேறு எங்காவது அவ்வாறு பேசியிருந்தாலும் தவறு அவர்பேரில் இல்லை. உலகில் பிறந்த எல்லோரும் எல்லா விஷயங்களையும் தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இன்றும் எத்தனையோ ஹிந்து சகோதரர்கள் குர் ஆனை அவ்வாறுதான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். நமது முஸ்லிம் சகோதரகளிடம் நெருங்கி பழகும் மாற்று மத சகோதரர்களுக்கு கூட நமது மதம் குறித்த தெளிவான புரிதல் இல்லை. காரணம் நாம் அவர்களிடம் நமது மார்கத்தை ஏத்தி வைப்பதில்லை. ..................(தொடரும்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. இக்கட்டுரையில் எனக்கு மிகப் பிடித்தது................
posted by: Shameemul Islam SKS (Chennai) on 27 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20943

இக்கட்டுரையில் எனக்கு மிகப் பிடித்தது YUF பற்றிய செய்தியில் புகாரி மாமா அவர்களை நினைவு கூர்ந்ததுதான். ஒரு மாணவர், பருவ வயதில் நல்ல சிந்தனையோடு இருப்பதற்கும் தவறான பாதையில் சிந்திக்காமலும் செயல்படாமலும் இருப்பதற்கும் அந்த மாணவனது அறிவுக்கண்ணைத் திறப்பது தான் மிக அவசியம் என்பதை அறிந்த அன்னார்

"பிச்சைப் புகினும் கற்கை நன்றே"
என்னும் பழமொழிக்கேற்ப
"திருட்டே செய்தும் (அறிவுத்)திறனை வளர்"
என்னும் புது மொழிக்கு அர்த்தம் கொடுத்தார்கள்.

ஆம் மறைந்த என்னருமைத் தந்தை SKS (SK மாமா) உடன் இவர்களும் சேர்ந்து வீட்டில் உள்ள பழைய ஜன்னல்களையும் கதவுகளையும் வீட்டின் அனுமதி பெறாமலேயே எடுத்து வந்து நூலகத்தை உருவாக்கி வீட்டில் செம அடியும் பெற்ற கதை பிறர் சொல்ல நான் கேட்ட என் வாழ்வில் மறக்க முடியாத வரலாறு.

இன்று காயல் மாநகர் செல்லும் போதெல்லாம் கிழக்கோரம் அமைந்துள்ள YUF சங்கத்தை கடந்து செல்லும் போது அதிகமான மாணவர்கள் பத்திரிக்கைகளைப் படிப்பதைப் பார்க்கும் போது அது ஒரு கண் கொள்ளா காட்சியாகவே அமைகின்றது.

இத்தருணத்தில் என் கல்லூரியின் alumni -யான ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி முஹம்மத் அலி அவர்கள் மறைந்த புகாரி அவர்களை நினைவு கூர்ந்தமை நன்றி பாராட்டத்தக்கது. இன்னொரு முக்கிய தகவல் மர்ஹூம் புகாரி அவர்கள் என் அருமை மச்சான் அப்துல் ரஷீத் (அவ்லியா) அவர்களின் மூத்த சகோதரர் ஆவார்கள்.

என் மச்சானின் சகோதரர் பாசத்திற்குரிய சகோதரர் முஹம்மத் அலி ஹாஃபிழ் அவர்கள் குருவித்துறைப் பள்ளியின் இமாம் என்று தான் பலருக்கும் தெரிந்திருக்கும். தற்போது அரபியில் M.Phil முடித்து P.hd செய்வதற்கான முயற்சியில் அவர்கள் இருந்து வருவது தந்தையின் அறிவுத்தேடலை அடிதொடர்ந்து தாமும் பின்பற்றுவதைக் காட்டுகிறது.

மற்றுமொரு தகவல் பாசத்திற்குரிய ஆலிம் பெருந்தகைகள் பாதுல் அஸ்ஹாப் மற்றும் ஹாமித் பக்ரி ஆகியோரின் மாமனார் தான் மர்ஹூம் புகாரி அவர்கள். மேலோன் அல்லாஹ் அன்னாரின் மண்ணறையைப் பிரகாசமாக்கி மறுமையில் மேலான சுவனபதியை அன்னாருக்குத் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
15. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 27 February 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20944

(தொடர்ச்சி.....)

நிலைமை இப்படி இருக்கும் போது எம்,ஜி,ஆர் அப்படி பேசியதில் வியப்பில்லை. எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகுபவர்கள் இதையெல்லாம் அவருக்கு எத்திவைத்தார்களா...என்பதும் தெரியவில்லை.

எவ்வித உள்நோக்கமும் இன்றி ஒரு அறியாமையில் ஒருவர் பேசும்போது அதை ஏதோ "மார்க்க விரோத 'காரியமாக எண்ண வேண்டியதில்லை.

"விஷமிகள்"என்று நான் சொன்னதை நண்பர் பெரிது படுத்தி இருக்கிறார். "விஷமம்"செய்பவர்களை விஷமிகள் என்று அழைக்காமல் பின் எப்படி அழைப்பதாம்...?விஷமிகள் என்ற வார்த்தையே கூட மிக காரமற்றதுதான். அதற்க்கு மேல் நான் எதுவும் எழுதினால் அட்மின் கத்தரி போட்டுவிடக்கூடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
16. நாட்டை ஆளுபவருக்கு சுய அறிவு வேணும்.
posted by: s.s.md meerasahib (zubair) (riyadh) on 28 February 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20945

நான் சொன்ன ஜெயலிதா, எம்.ஜி.ஆர்.... பேச்சுக்கள் குரும்பூரிலும் இருக்கலாம்..... கொக்கர குளத்திலும் இருக்கலாம். காயல் பட்டினத்திலும் இருந்தது. ஏனெனில் இவர்களுக்கு எழுதி கொடுத்துதானே... அறிக்கை விடவும், பேசவும் தெரியும். தன்னுடைய தலைமையின் கீழ் வாழும் மக்கள் எப்படி பட்டவர்கள்,என்ன சமயத்தவர்கள், இவர்களின் சரித்திரம் என்ன,இவர்களுக்கு என்ன பிரதான தேவை என்று தெரிந்து கொள்ளாத்தது தலைவரின் ஞான குறைவு. நான் குறிப்பிட்டு சொன்னது பழைய நினைவை தூண்டும் கட்டுரை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
17. Re:காயல் கடற்கரை நகர்: என் எ...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 28 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20946

நான் கொடுத்தது விளக்கம். நண்பர் பேசுவது விதண்டாவாதம். அதிகாரத்தில் உள்ள ஒரு தலைவரின் கீழ் பல்வேறுபட்ட இன மொழி மதங்களை சேர்ந்த மக்கள் வாழும்போது அவர்களை பற்றி ஒரு பொதுவான புரிதல் இருந்தால் போதும் .அதற்க்கு மேல் ஒவ்வொருவரின் மதங்களில் உள்ள நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதையும் மீறி ஒரு தலைவனுக்கு எல்லா விஷயம்களும் தெரிந்திருந்தால் அது சிறப்பானதுதான். நல்ல வேலை எம்.ஜி ஆருக்கு உளுவின் பர்ளுகள் எத்தனை எனபது ஏன் தெரியவில்லை ?என்று நண்பர் கேட்க்காமல் விட்டாரே...அதுவரைக்கும் சந்தோசம்.

எம்.ஜி.ஆரின் ஆட்சிகாலத்தில் சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் பொதுவாகவே ஓரளவு நல்லாட்சிதான் செய்தார். நண்பருக்கு "பூம்புகார் கொத்தனின்"ஆட்சிதான் நல்லாட்சியாக இருந்திருக்கும். அதற்க்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

எழுதி வைத்து பேசுவது ஒன்றும் பாவமான காரியம் அல்ல. கருணாநிதியின் பேச்சை கேட்டவர்கள் அவரது அரசியல் வாரிசு என்று சொல்லப்படுகிற ஸ்டாலினின் பேச்சை கேட்டால் வெறுத்துபோவார்கள்.இவர்தான் நாளைய தி.மு கவின் தலைவர். இதற்க்கு நண்பர் என்ன சொல்லப்போகிறார்...? பேசி பேசியே கெடுத்தவர்கள் நமது அரசியல்வாதிகள். ஒருவனுக்கு திறமையாக பேசத்தெரிந்தால் மட்டுமே கெட்டிக்கார அரசியல்வாதி என்ற பிரம்மையை முதலில் கைவிடுங்கள். காமராஜரோ ..ராஜாஜியோ பேசத்தெரிந்தவர்கள் அல்ல. ஏன்.. எம்.ஜி ஆர் கூட திறமையான பேச்சாளர் அல்ல. அதனால் அவர்களுக்கு ஒன்றும் குறை வந்து விடவில்லை. இன்றும் மக்கள் மனங்களில் அவர்கள் நிலைத்து நிற்கிறார்கள்.

"பூம்புகார் கொத்தன்"இது போன்று மக்கள் மனங்களில் நிலைத்து வாழும் தலைவராக இருக்கப்போகிறாரா...என்பதை காலம் சொல்லும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
18. ்கவனம் வேண்டும்
posted by: Hameed Sulthan (Abu Dhabi) on 06 February 2014
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33038

ிஜாஸ் மைந்தரே தாங்கள் போட்டோ எடுக்கும் சமயத்தில் அது நடந்து இருந்தால் இன்னும் ........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved