38.107.191.105UNITED STATES[?]
Go to Kayalpatnam.com Homepage


TODAYFathima Nihara weds P.M.I. Abdul Cader    [] Fathima weds Buhary  

PETITION TO RELAUNCH SRI LANKA RADIO - MUSLIM SERVICE TO TAMIL NADU
(Please Sign This Online Petition)
+ Email this page


بسم الله الرحمن الرحيم
NEWS MEDIA RESEARCH COUNCIL (NMRC)
49, SITHAN STREET, KAYALPATNAM, THOOTHUKKUDI DISTRICT, TAMILNADU, INDIA. PIN: 628 204
Email: nmrcouncil@gmail.com

பெறுனர்

கண்ணியத்திற்குரிய அனைத்துலக காயல்பட்டினம் நகர பொதுமக்கள்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

பொருள்: இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையை தமிழகத்தில் கேட்கச் செய்வது தொடர்பாக...

நமதூருக்கும், இலங்கை தீவிற்கும் இடையே உள்ள தொடர்பை நாமனைவரும் நன்கறிவோம். வணிகம், மார்க்கம், ரத்தம், மொழி போன்ற பல்வேறு தளங்களில் பல நூற்றாண்டுகளாக இவ்வுறவு பேணப்பட்டு வருகிறதென்றால் அது மிகையல்ல.

நமதூர் முன்னோர்கள் வணிகத்திற்காக அங்கு சென்ற கையோடு மஸ்ஜித், மத்ரஸாக்களுடன் இன்னபிற பண்பாட்டு நிறுவனங்களையும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிறுவினர்.

இயற்கையாகவே அதன் கைமாறோ என்னவோ, இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையால் நமதூர் உட்பட பல கடலோர முஸ்லிம் சிற்றூர்கள் பெரும் பயனடைந்தன. நோன்பு, பெருநாள் உள்ளிட்ட புனித நாட்களில் இலங்கை முஸ்லிம் சேவையினால் நாம் அன்று அடைந்த பயனை என்றுமே மறக்கவியலாது. ஆனால், இடையில் ஏற்பட்ட (இலங்கை இனப்பு+சல், தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஆதிக்கம் உள்ளிட்ட) துர்வாய்ப்பினால் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையை நுகரும் நல்வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். இன்று இலங்கையில் இனப்பு+சல் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், தொலைக்காட்சியினால் நம் இல்லங்களிலும், இதயங்களிலும் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. நமதூரில் கடந்த பல வருடங்களாக ஏற்பட்டு வரும் ஒழுக்க வீழ்ச்சியைப் பற்றி கவலை கொள்வோரும், அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோரும், உளவியலாளர்களும் தெரிவிக்கும் கருத்தின்படி, தொலைக்காட்சியில் வரும் ஆபாசம், முறையற்ற குடும்ப உறவுகள், குடும்ப வன்முறைகளைத் தாங்கிய குறு-நெடுந்தொடர்கள், திரைப்படம், நுகர்வியம் போன்றவை தனிமனித ஒழுக்க வாழ்விலும், சமூக வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஓளி இருந்த இடத்தை இருள் நிரப்பியதால்தான் இந்த வினை!

இலங்கை முஸ்லிம் சேவையின் இடம் தொலைக்காட்சிக்கு விட்டுக்கொடுக்கப்பட்டதினால் ஏற்பட்ட அவலத்தை அதே வழியில் சென்று தீர்ப்பதுதான் ஏற்புடையதாக இருக்கும்.

இறைவனின் கிருபையாலும், நமது முயற்சியினாலும் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை நமதூர் உட்பட தமிழகக் கரையை எட்டும்பட்சத்தில், நமதூர் சன்மார்க்க / பண்பாட்டு நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்யும் வாய்ப்பும் உள்ளது என்பதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். அந்த வகையில், நமதூர் சார்பில் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையை தமிழகத்தில் மறுபடியும் கேட்கச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். இந்த நன்முயற்சிக்கு தங்களின் மேலான, மானசீக, தார்மீக ஆதரவை தெரிவிக்கும் முகமாக கையொப்பம் இடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,

(செயலர்)


>>Click here to view signatures (454)


:: PLEASE SIGN THIS PETITION
My Name
My Email Address
My Current Location
This Is CAPTCHA Image
Enter the above text+
+ this is to protect from automated postings
Advertisement
ABS Constructions - 

Tirunelveli / Chennai / Kayalpatnam

AKM Jewellers - the 100% 

916 KDM Shop - Western Union Money Transfer

Thai Nadu Trading 

Co. Ltd. - Tours and Travels - Bangkok and Chennai

LTS Gold House - 916KDM - 

World Class - Local Price

Wavoo Jewellers, Anna 

Nagar, Chennai

Smile - The Mango 

Drink

Shifa 

Medicals

www.baazpromoters.com
Al Fathah Haj 

Service

Baaz - 

Realty/IT

Fathima Jewellers - 

T.Nagar - Parrys

Bismillah 

Agencies

Danube - Voltas 

Air-Conditioners

KVAT Buhari Haji 

Charitable Trust

Wavoo 

Multimedia


© 2006. The Kayal First Trust Design: NetGross


Kayalpatnam All about Kayalpatnam | Map of Kayalpatnam | Census 2001 | History of Kayalpatnam | Customs of Kayalpatnam | Kayalpatnam Tamil | Inside Kayalpatnam | Virtual Kayalpatnam | Around Kayalpatnam
News Kayalpatnam News | Editorials | Jummah Reports | Interviews | Right to Information News | Specials | Diaspora News | Sports News | Science News | Business News | World News
Community Images | Weddings | Deaths | New Births | Birthdays | Diaspora
Interactive Discussion Board | Chat | Opinion Poll | Q&A | Email Service | Calendar Service
Information Government | Municipality | Directory | Phone Numbers | Schools | Alumni | Social Organisations | Support Charities
Tools Almanac | Health | Islam | External Links | Fun Zone
About Login | Register | Forgot Password? | Terms of Service | What's New? | Site Statistics | Suggestions | Invite a friend | Credits | Sitemap | The Kayal First Trust | About Kayalpatnam.com