நவ. 16இல் ரியாத் காயல் நல மன்றப் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி!
நவ. 16 அன்று ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!
சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி இம்மாதம் 16ஆம் நாளன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள – உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்ஷா அல்லாஹ் வரும் நவம்பர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நமது ரியாத் காயல் நல மன்றத்தின் (RKWA) 57-வது பொதுக்குழுக் கூட்டம் ரியாத் யான்பு ரோட்டில் உள்ள (குறைஷ் ரோடு - Kuraish Interchange அருகில்) இஸ்திராஹவில் (Location Map: https://goo.gl/maps/uL5Q3cSFrc82 - “RKWA GB” என்று Google Map-இல் தட்டச்சு செய்தால் பொதுக்குழு நடைபெறும் இஸ்திராஹவின் இடம் துல்லியமாக காட்டும்) காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் சிறியவர்கள் , பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு மற்றும் அறிவுத் திறன் போட்டிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மாலை தேநீர் / சிற்றுண்டி, மதியம் மற்றும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழு நிகழ்வுகள் அனைத்தும் இரவு 08.00 மணியுடன் நிறைவு பெரும் இன்ஷா அல்லாஹ், இஸ்திராஹ இரவு 10.00 வரை அனுமதி உள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் இரவு 10.00 மணிவரை தங்கிச் செல்லலாம். எனவே தாங்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பத்ஹா R.T. ரெஸ்டாரண்ட் அருகில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரியாகக் காலை 10.00 மணிக்கு வாகனம் அங்கிருந்து புறப்படும். வாகனம் சம்பந்தமாக சகோ நுஸ்கி அவர்களை 056 421 3757 என்ற எண்ணிலும் , இஸ்திராஹ (LOCATION) சம்பந்தமாக சகோ. செய்து இஸ்மாயில் மற்றும் இர்ஷாத் அவர்களை முறையே 055 622 0116, 056 098 8112 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
எமது மன்றத்தின் மூலம் வழங்கப்பட்ட (WAKF) உண்டியலை பெற்றுச்சென்றவர்கள் மறவாமல் பொதுகுழுவில் உண்டியலை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
முகநூல் வழி வாழ்த்துக்கள்
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross