Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:47:38 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
:: பொது நிகழ்ச்சிகள்

#KAYALEVENT175
<< முந்தைய பொது நிகழ்ச்சிப் பதிவு | அடுத்த பொது நிகழ்ச்சிப் பதிவு >>
நிகழ்ச்சி நாள்நேரம்இடம்
டிசம்பர் 22, 201810:00ஹனியா சிற்றரங்கம், துஃபைல் காம்ப்ளக்ஸ், முதன்மைச் சாலை
“இணையத்தில் காயல் (KOTW)” இருபது ஆண்டுகள் நிறைவு விழா & இரு நூல்கள் வெளியீடு!!
காயல்பட்டணம்.காம் இணையதளம் இருபது ஆண்டுகளை எட்டியதை முன்னிட்டு, இரு வேறு சிறப்பு நூல்களின் வெளியீட்டு விழா 22.12.2018 அன்று காயல்பட்டினம் ஹனியா சிற்றரங்கத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை கீழே:

இணையத்தில் காயல் (Kayal on the Web) எனும் பெயரில் டிசம்பர் 1998இல் உதயமான காயல்பட்டணம்.காம் (KAYALPATNAM.COM) இணையதளம், 2006ஆம் ஆண்டு முதல் “தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் (The Kayal First Trust) அமைப்பின் கீழ் இயங்கி வருகிறது.

ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேலாக பக்கப்பார்வைகளைப் பெற்ற இந்த இணையதளம், இறைவன் நாடினால் - எதிர்வரும் டிசம்பர் 19 அன்று தனது இருபது வயதை பூர்த்தி செய்கிறது. எல்லாபுகழும்இறைவனுக்கே!

இத்தருணத்தை கொண்டாடும் விதமாக, இரு வேறு சிறப்பு நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

காயல்பட்டினம் ஹாஜியப்பாபள்ளி எதிரில் உள்ள துஃபைல் வணிக வளாகம் முதல் மாடியில் அமைந்துள்ள ஹனியா சிற்றரங்கத்தில், காலை 10 மணி முதல் மதியம் 12:30 வரை - இறைவன் நாடினால் - நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள திரு எம்.விநாயக சுப்ரமணியன் (APO, Housing and Sanitation, DRDA, Thoothukudi) இசைவு தெரிவித்துள்ளார்.

வெளியிடப்படும் நூல்களின் விபரம்:

(1) தென்கோடிஅலைகள்

காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் - எழுத்துமேடை பகுதியில் வெளியான 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைத் தொகுப்பு.

அரபு, தமிழ், அரபுத்தமிழ் மொழிகளில் விற்பன்னர்களான கவிஞர்கள், பலவர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், நூல் தொகுப்பாளர்கள் என்ற நமது காயல்பதியின் நெடிய மரபின் மேல் மணல் குன்று போல காலம் மூடிக்கொண்டிருக்கிறது. அதன் சிறு நுனியைத் தீண்டுவதின் வழியாக பண்டைய ஞான மரபை மீட்டிடும் எளிய முயற்சி எனவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

(2) வடகிழக்கிந்தியப்பயணம்

காயல்பட்டணம்.காம் இணையதளத்தில், 2018ஆம் ஆண்டில் எழுத்தாளர் சாளை பஷீரின் தொடர் பயணக்கட்டுரைகளாக வெளியான ஆக்கங்களின் தொகுப்பு நூல் இது.

“சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் உற்ற நண்பரான ஃபழ்ல் இஸ்மாயீலுடனான ஒரு உரையாடலில், நான் இங்கேயிருக்கும் போதே சிங்கப்பூர், மலேஷியா சுற்றுப்பயணத்திற்கு திட்டமிடுங்களேன் “ என்றார். செலவேறிய வானூர்தி பயணம், மாயையின் மீதும் தீரா நுகர்வின் மீதும் கட்டப்பட்டிருக்கும் பெரிய ஷாப்பிங்மாலான சிங்கப்பூரின் மீதான ஒவ்வாமை என்ற இருகாரணங்களையும் காட்டி நான் சொன்னேன் , “எல்லா எடத்தயும் பாக்கத்தாம்பா செய்யனும். அது நல்ல விஷயந்தான், ஆனா நாம இருக்குற இடந்தாம்பா சிங்கப்பூரும், மலேஷியாவும், மொத்த உலகமும்.

இந்தியாவுக்குள்ளயே பல வெளிநாடுகள் இருக்கும் போது இதமொதல்ல பாத்து முடிப்போம் என ஒரு வீறாப்பில் சொன்னேன்.

அந்த சொல்லானது வடகிழக்கு பயணம் என்ற மன விருப்பத்திற்கு மேல் போய் உட்கார்ந்து கொண்டது. அழுத்தம் தாங்காமல் வண்டி புறப்பட்டு விட்டது.”

– நூலின் முதல் அத்தியாத்திலிருந்து...


அன்பு அழைப்பு!

சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, கீழுள்ள ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளவும்:

(1) எம்.எஸ். முஹம்மது சாலிஹு (98401 37302)
(2) சாளை பஷீர் ஆரிஃப் (99628 41761)
(3) எஸ்.ஏ. முஹம்மது நூஹு (78455 40490)
(4) எஸ்.கே. ஸாலிஹ் (89033 30440)
முகநூல் வழி வாழ்த்துக்கள்
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved