KFT Websites kayalpatnam.com kayalpattinam.com kayalsky.com topperstalk.com kayal.tv kayaljobs.com
Since 1998 - Kayal on the Web - Your home away from home Kayal Welfare Association, Qatar -  General Body Meeting + Ifthar - July 11, 2014
Current Kayalpatnam Time
6:33:29 AM
Saturday | 26 July 2014 | Ramadhan 29, 1435
சிறப்புக் கட்டுரைகள்
Previous Article
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
ID # 81Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 22, 2014
எங்கே அரபுலகம்...?
This page has been viewed 763 times | View Comments (6) <> Post Your Comment
(Comments awaiting approval - 0; Comments not approved - 0)ஃபலஸ்தீன்...
முஸ்லீம்களின் முக்கிய பூமி...
யூதர்களால் திட்டமிட்டு பறிக்கப்பட்டு...
முஸ்லீம்கள் நடுத்தெருவிற்கு துரத்தப்பட்டு...
கலவரக்காடாக காட்சியாக்கப்பட்டு...
இன்று தொடர் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது...

கஸ்ஸா நகர வீதியெங்கும் பிணச்சிதறல்...
பிஞ்சுகள் பஞ்சாக்கப்பட்டு பரத்தப்பட்டுள்ளன...
தாய்மையின் தழுவலோடு ஆன்மா அகன்றுள்ளது...
முதுமையின் முனகல் மூச்சற்று மடிந்துள்ளன...
யூத வெறியனின் இலக்கு தாய்களும், சேய்களும்...
வாரிசில்லாமல் ஆக்க வரிந்துகட்டி வன்மம் புரிகிறான்...
கேட்க நாதியில்லை என்ற திமிரில் தாண்டவமாடுகிறான்...அவன் அழிப்பில் மருத்துவகூடமும் தப்பவில்லை...
மருத்துவரும் தப்பவில்லை, மீடியாவும் தப்பவில்லை...
பிண ஊர்வலத்தில் வெடி போட்டு மனித வேட்டையாடுகிறான்...
தலை தெறித்து தாய் இறக்கிறாள்...
குடல் வெந்து குழந்தை இறக்கிறான்...
இத்தனைக்குப்பிறகும் அசாத்திய உறக்கத்தில் அரபுலகம்...
வாய்மூடி மௌனிக்கும் முஸ்லீம் தேசம்...

எங்கே அல் கர்ளாவி...? எங்கே ஆல ஷெய்கு...?
எங்கே தன்தாவி...? எங்கே அல் கர்ணி...?
எங்கே அரபுலக உலமாக்கள்...?
எங்கே உங்கள் கர்ஜனை...ஒ.... அரபுலகமே....!
யூதனை எதிர்த்து அறப்போர் அறிவிக்க இன்னும் எத்தனை உயிர் எதிர்பார்க்கிறாய்...!
இன்னுமா நீ சூழ்நிலை கைதி...
எதற்காக நீ அமைதிக்கிறாய்...
உனக்கென்ன நிர்பந்தம்...
உன் தொப்புள் குடி உறவையே...
உன் இனத்தவரையே...
உன் மொழி உச்சரிப்பவரையே...
உன் பக்கத்து முஸ்லீமையே காக்க யோசிக்கும் நீ...

நாளை... உன் தூரத்து முஸ்லீம்
இந்தியாவில் எரிக்கப்பட்டாலோ...
இலங்கையில் கொல்லப்பட்டாலோ...
பர்மாவில் புதைக்கப்பட்டாலோ...
நீ காக்க முற்படுவாய் என்பது எப்படி நிச்சயம்...?

ஒ.... அரபுலகமே...!
ஏன் இந்த மவுனம்... எப்படி இந்த மவுனம்...?
நீ அவனை எதிர்த்தால் உன் நாட்டில் அவன் பாய்வான் என்ற அச்சமா...
உன் மக்கள் மாய்வர் என்ற கலக்கமா...
உன் மக்கள்தான் உனக்கு உயிர் என்றால்
அம்மக்கள் தாங்கியிருப்பது உயிரில்லையா...
உனக்கு ஷஹீதின் அருமை குத்பா பயானில்தான்...
அங்கு நொடிதோறும் ஷஹீத்கள் பறவைகளாகின்றன..."நீ எதற்காக கொல்லப்பட்டாய்...?"
என்று நாளை மறுமையில்
குழந்தையை எழுப்பி இறைவன் வினவும் போது
அக்குழந்தையின் கை நமை நோக்கி சுட்டுமே
என்ற அச்ச உணர்வு கூட உனக்கு இல்லையா...

அன்று...
ஃபைசல் இருந்தார் பலமாக கேட்டார்...
சதாம் இருந்தார் தட்டிகேட்டார்...
முர்சி இருந்தார் முட்டி கேட்டார்...
இன்று முஸ்லீம் உம்மாவை காக்க ஒருவனும் இல்லையே...
யாஅல்லாஹ் உன்னைத்தவிர...!

Previous Article
Click here to post your comment about this article >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
(Registration not required. Moderated; displayed after approval)
>> Go to Last Comment
1. இறைவா இம்மக்களுக்கு நிம்மதியை அளிப்பாயாக...! அணியாயகாரர்களுக்கு நீ அழிவை கொடுப்பாயாக..

சகோதரர் அரபி ஷுஅய்ப் அவர்களின் ஆக்கத்தை படிக்கும் போது இமைகளில் நீர் வடிகிறது.. சொந்த பூமியில் நிம்மதியில்லாத வாழ்க்கையா..?

பாலஸ்தீன அப்பாவி உயிர்களுக்காக மனித நேயத்துடன் நாம் அவர்களின் அமைதிக்காகவும் அக்கிரமும் புரியும் யூத வெறியர்களின் அழிவிற்காகவும் நாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்..

ஒ.... அரபுலகமே...! நாளை... உன் தூரத்து முஸ்லீம் இந்தியாவில் எரிக்கப்பட்டாலோ... நீ காக்க முற்படுவாய் என்பது எப்படி நிச்சயம்...?

எந்த அரபுலகமும் வேண்டாம் இந்திய முஸ்லீம்களை காக்க..!

இந்தியாவில் வாழும் மனிதநேய சிறுபான்மை முஸ்லீம்களும் அணைத்து சமுதாய மனிதநேய தொப்புள் கொடி உறவுகளுமே போதும் அநீதியை எதிர்த்து நீதிக்காக இணைந்து போராடும்.

எந்த அரபுலகத்தையும் நம்பி இந்திய முஸ்லீம்கள் வாழ வில்லை..!

எந்த அரபுலகமும் வேண்டாம் இந்திய முஸ்லீம்களை காக்க..!

மூவர்ண கொடியுடன் இவுலகம் அழியும் வரை இந்தியாவில் இணைந்து வாழ்வோம். சகோதரர்களாக..!

அருகிலோ - தொலைவிலோ இருக்கும் அன்னியநாடுகள் என் தாய்நாடு இந்தியாவில் ஆதிக்கம் செய்து ஆட்சி செய்ய / செலுத்த கால் பதித்தால் அவர்களின் கால்களை முடமாக்குவோம்...


posted by: தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 23 July 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36072
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...

உணர்ச்சிபூர்வமான ஆக்கம். படிக்கும் போதே இரத்தம் கொதிக்கிறது. எல்லா வளமும் தன்னகத்தே கொண்டுள்ள அரபுலகத்தின் முக்கிய நாடுகள் ஏதோ பிச்சை போடுவது போல் பணத்தை வீசி விட்டால் கடமை முடிந்தது என நினைக்கிறார்கள். உலகத்தை எச்சரிக்கும் வளத்தை கொண்டுள்ள இவர்கள் எதற்கு இப்படி கோழைத்தனமாக உள்ளனர் புரியவில்லை.

பல வருட பட்ஜெட் நிதியை சேமிப்பாக கொண்ட இவர்கள் இந்த பிரச்னைக்கு உடன் தீர்வு இல்லையெனில் ஒருவாரம் எண்ணெய் உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி நிறுத்தம் என அறிவித்தால்! வல்லரசுகள் முதல் பாராளுமன்றத்தில் தீர்மானம் போட மறுக்கும் பாரதமும் இதற்கு தீர்வு காண ஈடுபடும். செய்வார்களா?


posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 23 July 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36073
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...

தற்போது பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டுருக்கும் இனபடுகொலையை செய்தியாக இணைய தளத்திலோ அல்லது பத்திரிகைகளிலோ படிக்கும் போது நம்மால் ஒன்றும் செய்ய முடிய வில்லையே எனும் குற்ற உணர்வு நம்மை கொள்கிறது

இஸ்ரேலை சுற்றி பல அரபு நாடுகள் இருந்தும் அவைகள் ஒருதுரும்பைகூட பாலஸ்தீனத்திற்கு ஆதரகவாக எடுத்து போடாதது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்.

அதைவிட கேவலமானது நம்மில் சிலர் சவுதிக்கு வக்காலத்து வாங்குவது. கேட்டா அந்த அரபியோட மருமகன் நேற்று சிரியாவில் சஹீதாஹிவிட்டான் தெரியுமா இந்த அரபியோட மச்சான் முந்தா நாள் ஆப்கானிஸ்தானில் சஹீதாகிவிட்டான் என நல்லாவே தங்களுடைய சவூதி விசுவாசத்தை காட்டுகின்றனர்.

சரிப்பா சவூதி அரசாங்கம் என்ன செய்தது என்று கேட்டால் அதை செய்தது இதை செய்தது என வாயால் வடை சுடுகின்றனர். சவூதி அரசாங்கம் செய்வதாக கூறும் உதவிகள் எல்லாம் சவூதி மன்னர் குடும்பத்தினர் மென்று துப்பும் எலும்புத்துண்டுகள் தான். பல ஆண்டுகள் நம்முடைய சகோதரன் அடிமை பட்டு கிடக்கிறானே அதற்கு நம்ம சவுதி அரசாங்கம் என்ன செய்தது என்றால் பதிலை காணோம். இடைப்பட்ட காலத்தில் நம்பிக்கை நட்சத்திரமாய் தோன்றிய மோர்சியின் ஆட்சியை கவிழ்க்க உதவியதை தான் சவூதி அரசாங்கம் செய்த சாதனையாக சொல்லலாம்

சவுதியில் இருந்துகொண்டே துணிவாக இக்கட்டுரையை எழுதிய நண்பர் சுஹைப் அவர்களை மனமார பாராட்டுகிறேன்


posted by: zakariya (chennai) on 23 July 2014
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36077
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமை சகோதரர்.அவர்களின் இக்கட்டுரையை நாம் என்னவென்று சொல்ல ....நம் சமுதாய இனத்தவர்களின் கண்ணீர் என்று தான் சொல்ல வேணும் .....

அருமை சகோதர் அவர்களின் வாக்கியங்களை '' படிக்கும் போதும் ..+.. அந்த நிழற் படங்களை பார்க்கும் போதும் நமது மனம் கனத்து ...சாகடிக்க படுகிறது ......என்று தான் சொல்ல வேணும் ....

உண்மையில் நம் இனத்தவர்கள் யாவர்களும் சரி & அரபு உலகமும் சரி ..இம் மக்களின் கதறல்களையும் ..மன கொதிப்பையும் கொஞ்சமும் யோசிக்கவே இல்லை ....ஆனால் அரபு உலக பெரு மக்கள் நிம்மதியாகவே இருந்து கவலையற்று சுகம் கொண்டாடி வருகிறார்கள்.....ஆனால் சவுதியில் 5 வேளை தொழுகை லும் மனம் உருகி துவா கேட்ட வன்னமாகதான் உள்ளார்கள் ........ஆனால் குரல் ஓங்கி ஒழிக்க வேணும் அல்லவா ..............

நமக்கு அண்டாட '' FACE BOOK ''மூலம் அந்த மனித இரக்கமற்ற பாவிகளால் கொடுரமாக தாக்கபட்ட நிழற்படங்கள் வந்த வண்ணம் தான் உள்ளது ....

இதற்க்கு முடிவு நாம் நம் வல்ல இறைவனிடம் தான் மன்றாடி மனம் உருகி துவா '' கேட்க வேணும் .....

யா அல்ல எங்களின் சமுதாய அனைத்து மக்களையும் நீ தான் காப்பாற்றி ....எங்களை இந்த மிகவும் உன்னதமான ரமலான் நல்நாளில் சிறப்பாக்கி வைக்கணும் ....

அருமையான ஓர் ஆதங்கமான '' கட்டுரை' ....இன்ஷா அல்லாஹ்...நிச்சயம் நம் சமுதாயத்துக்கு நல்லதோர் முடிவு விரைவில் .... உண்டு....

வஸ்ஸலாம்
K.D.DN.MOHAMED LEBBAI


posted by: K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) on 23 July 2014
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36078
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...

முகநூலை திறந்ததும் கண்ணில் படுவது ,,பாலஸ்தீனிய ,,, குலை பதறும் ,,போஸ்ட் தான் !

மனதை கசக்கி பிழிகிறது அதன் சோகம் !

யா அல்லாஹ் ..கருணையாளனே ...இவர்களை காப்பாற்று ,,என உள்ளம் உருகுகிறது உண்மை !

கொஞ்சநேரம் அவனுக்கு நன்றியும் செலுத்துகிறது .."இப்படிப்பட்ட அமளி துமளியில் ,இல்லாமல்,,நம்மை அமைதியாக சாப்பிடவைத்து ,,தூங்கவைத்து,,அமல் செய்ய வைத்து ,,வைத்திருக்கிறானே ,"',என நன்றியால் நனைகிறது உள்ளம் ! அல்ஹம்துலில்லாஹ் !

அவனன்றி ஓர் அணுவும் அசையாது ,,என நம் எல்லோருக்கும் தெரியும் ,! அப்படியானால் ,,அவன் நாடித்தான் இதெல்லாம் நடக்கிறது !

இதன் சூட்சுமம் அவனன்றி யாருக்கு தெரியும் ?

புனிதமான இந்த ரமளானில்,,,உடல்கள் சிதைந்து ,,கிடக்கும் இளம் பிஞ்சுகளின் ,,நிலை அவனுக்கு தெரியாதா ?

அல்லாஹ் கொடுமைக்காரன் இல்லையே ! அவன் ரஹ்மான் ,,ரஹீம் அல்லவா ?

ஒரு தாயுள்ளமான ,எனக்கே இவ்வளவு கண்ணீரும் ,,சோகமும்,,என்றால் ...எழுபது தாய் உள்ளத்துக்கு சொந்தக்காரனான அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு சும்மா இருக்கிறான் என்றால் அதன் காரணம் நிச்சயமாய் வலுவாக தானே இருக்கும் ?

ஆனால் அவன் நீதியாளன் அல்லவா ?

அவன் நீதிமன்றத்தில் ,,கொடுத்த தீர்ப்பு ,,அதன் விளைவு ,,,இப்படி என்றால் ,,,பாதிக்கப்பட்டவர்களின் ,முந்தைய ,நிலை என்ன என்பது நமக்கு தெரியாது அல்லவா ?

ஆகவே ..நாம் நம்,சகோதர முஸ்லிம்களுக்கு ,பாவ மன்னிப்பு கேட்டு அழுவதுதான் இப்போதைக்கு நல்லது !

யூதர்களை அழித்துவிடு ..என கேட்க்க நமக்கு உரிமை இல்லை !

அவர்களில் யாருக்கு அவன் ஹிதாயத் வழங்க நாடி இருக்கானோ ,,தெரியவில்லை ! அவர்கள் சந்ததிகளுக்கு ,,ஹிதாயத் வழங்க நாடி இருக்கானோ ,,அல்லாஹ் அஹ்லம் !

அகவே ,,நம் யாருக்கும் சாபம் விடாமல் ,,பாவமன்னிப்பு கேட்ப்போம்...சீக்கிரம் இந்த நிலை மாற மனதார துஆ செய்வோம் !

இப்படி ,மரணித்தவர்கள் ஷஹீத் என்ற மாபெரும் அந்தஸ்து ,பெறுகிறார்கள் ,,! இந்த அந்தஸ்து கிடைக்க அவர்கள் கேட்ட துஆ கூட காரணமாய் இருக்கலாம் அல்லவா ?

நாம் ,,இந்த ரணகளத்தை பார்த்து ,",பாவம் "என்று கூட சொல்ல கூடாது ...அல்லாஹ்வை கொடுமைக்காரன் ..என்ற பட்டம் கொடுத்ததுபோல் ஆகிவிடும் !

உங்கள் வார்த்தைகளை கவனமாய் கையாளுங்கள் துஆ கேட்க்கும்போது !

யா அல்லாஹ் ,,எங்கள் சகோதரர்கள் ஆன,,,பலஸ்தீனியர்கள் செய்த குற்றம்,,,எல்லாம் உனக்குத்தான் தெரியும்.! அவர்கள் பாவங்களை மன்னித்துக்கொள் ரப்பே !

உன் நேசர்களான ,,நபிமார்கள் வலிமார்கள் ,பொருட்டால் ,,அவர்களை பாவத்தில் இருந்து மீட்டுவிடு ரப்பே !

அவர்களை பார்த்து ,நாங்கள் எங்கள் மனதை திருத்தி,,பாவங்கள் செய்ய அஞ்சி,,,உன் தக்வாவை ,,நிறைத்துக்கொண்டோம் ...!

எங்களையும் மன்னித்துக்கொள் ரப்பே !

உன் படை வீரர்களான பத்ரியீன்கள் பொருட்டால் அவர்களை ,,மன்னித்து விடு !

அகில உலக ,,ரெட்ச்சகர் ,,அவனி புகழ் நாயகர் ,,கண்மணி நாயகம் பொருட்டால் ,,அவர்கள் பாவங்களையும் ,எங்கள் பாவங்களையும் மன்னித்து எங்களுக்கு பாதுகாப்பு கொடு ,,என உளம் உருகி ,,கேளுங்கள் ,,விரைவில் பலன் தெரியும் அன்பர்களே !


posted by: K.S.Seyed Mohamed Buhary (uae) on 24 July 2014
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36092
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...

உணர்வுபூர்வமான பதிப்பு அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி ; ஒற்றுமை எனும் கயிறு விலகி இருப்பதால் இந்த வினை ; மன்னர் பைசல் எப்படி துடைக்கப்பட்டர்கள் என்பதும் சரித்திரம் நமக்கு பதிவாக தந்திருக்கிறது ;

அருமை ஆசிரியர் அவர்களின் இதயத்து குருதியின் வியர்வை இன்று இஸ்ரேலின் அணு உலைக்கு பக்கவாட்டில் ஹமாசின் ஏவுகணைகள் முத்தமிட்டுள்ளது -நிற்க (இது முதன் முறை) விவேகமே இத்தருணத்தின் பிரதானம் ;எதிரிகள் புடை சூழ இருக்கும் பொழுது யுத்த தந்திரம் மிக முக்கியம்- ஹமாஸின் ஏவுகணைகள் இஸ்ரேலின் வான்வெளி மிக கடுமையான பாதுகாப்பு வளையத்தை தாண்டி டெல்அவிவின் மிக முக்கிய இடங்களை தொட்டுள்ளன - யா அல்லாஹ் எங்கள் மக்களுக்கு விவேகத்துடன் போராடாகூடிய அறிவை மென் மேலும் கொடுப்பாயாக - ஆமின்.


posted by: Eassa Zakkariya (Jeddah) on 25 July 2014
IP: 37.*.*.* | Comment Reference Number: 36110
[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
>> Go to First Comment
(Registration not required. Moderated; displayed after approval)
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
Click here to post your comment about this column >>
Advertisement
MAAS PerfumesThainadu Tours and Travels
Fathima JewellersLKS Jewellers
Cathedral Road LKS Gold ParadiseChendur Springs
AKM JewellersDanube Enterprises
ABS ConstructionsWavoo Jewellers
G
Google Advertisement


>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Prayer Timings
Hijri Calendar
Sunrise/Sunset
Moonrise/Moonset
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2014. The Kayal First Trust. All Rights Reserved