* - வா (வானியல்; Astronomical), க (கடல்; Nautical), ச (சமூக; Civil)
+ - அந்தி (Twilight) என்பது சூரியன் உதயமாவதற்கு முன் கிழக்கு திசையில் அந்திவானத்தில் (Horizon) உள்ள மங்கலான வெளிச்சம் மற்றும் சூரியன் மறைந்தபிறகு மேற்கு திசையில் அந்திவானத்தில் உள்ள மங்கலான வெளிச்சத்தை குறிக்கும் சொல் ஆகும்
வானியல் அந்தி (Astronomical Twilight) என்பது அந்திவானத்தில் இருந்து சூரியன் 18 டிகிரி கீழே இருப்பதை குறிக்கும். இது 12 டிகிரி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் சூரியனின் ஒளியின் தாக்கம் வானில் முற்றிலும் இருக்காது வானியல் அந்தி துவக்கம் - ஃபஜ்ர் மற்றும் இஷாஃ தொழுகை நேரங்களை நிர்ணையம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
கடல் சார் அந்தி (Nautical Twilight) என்பது அந்திவானத்தில் இருந்து சூரியன் 12 டிகிரி கீழே இருப்பதை குறிக்கும். இது 6 டிகிரி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் உள்ள வெளிச்சம், கடல் போக்குவரத்திற்கு போதுமானதாக கருதப்படும்
சமூக அந்தி (Civil Twilight) என்பது அந்திவானத்தில் இருந்து சூரியன் 6 டிகிரி கீழே இருப்பதை குறிக்கும். இது சூரியன் உதயமாகும் வரை நீடிக்கும். அரசாங்கங்கள் - காலையில் தெரு விளக்கை அணைக்க / மாலையில் தெரு விளக்கை செயலாக்க, சாலை போக்குவரத்தின் போது வாகனங்களின் முகப்பு விளக்கு குறித்த விதிமுறைகள் போன்றவைகளுக்கு, இந்த நேரங்களை பயன்படுத்துகின்றன
உச்சிவெயில் நேரம் (Transit) என்பது வானில் - தனது பயணத்தில் - சூரியன் உச்ச நிலையை அடைந்து சாய துவங்கும் நேரமாகும். இதன் பிறகே ளுஹ்ர் தொழுகை நேரம் துவங்குகிறது.
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross