காயல்பட்டினம் குடிநீர் திட்டம்: மத்திய அரசின் பங்கு 23.8 கோடி ரூபாயில், 11.86 கோடி ரூபாய் வழங்கப்பட்டது!! பதிவு: ஆகஸ்ட் 12, 2012
காயல்பட்டின மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான புதிய குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 28 கோடியே, 30 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டம் மத்திய அரசின் UIDSSMT (Urban Infrastructure Development Scheme for Small and Medium Towns) திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படவுள்ளது. மொத்த திட்ட தொகையில் 80 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் காயல்பட்டினம் நகராட்சியும் பங்களிக்கும்.
மத்திய அரசின் பங்கான சுமார் 23.8 கோடி ரூபாயில், ரூபாய் 11.86 கோடி ரூபாயை மத்திய அரசு - முதல் தவணையாக வழங்கியுள்ளது. காயல்பட்டினம் நகராட்சியின் பங்கு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும்.
2
குடிநீர் திட்டம் குறித்த டெண்டர் ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு! பதிவு: ஆகஸ்ட் 9, 2012
காயல்பட்டினத்திற்கான புதிய குடிநீர் திட்டம் டெண்டர் அறிவிப்பு ஜூலை 28 அன்று நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. இ-டெண்டர் முறையில் நிறைவேற்றப்படவுள்ள இந்த டெண்டர் குறித்த ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் இ-டெண்டர் இணையதளத்தில் முழு விபரம் காணலாம் (tntenders.gov.in).
காயல்பட்டினத்திற்கான 28.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்ட டெண்டர் அறிவிக்கப்பட்டது! பதிவு: ஜூலை 30, 2012
காயல்பட்டின மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான புதிய குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பு (ROC No.250/2010/A3/dt.26.7.2012) ஜூலை 28 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் - தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும், தமிழகம் முழுவதும் தின மலர் நாளிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross