காலம் கடந்த ஞானம்! posted byS.K.Salih (Kayalpatnam)[08 June 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46429
மறைந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மத் மீரான் நம் சமூகத்தின் சொத்து. ஆனால், நான் உட்பட பலருக்கும் அவர் என்றாவது ஒரு நாள் எங்கேயாவது, எப்போதாவது கேள்விப்படும் நிலையிலானவர் ஆகிவிட்டார். அது எங்கள் கைசேதம்.
திறமை வாய்ந்த இப்பெரியவரை - காயல்பட்டினத்தில் எழுத்து மேடை மையம் அமைப்பால் நடத்தப்பட்ட முதலாவது புத்தகக் கண்காட்சிக்கு வரவழைக்க, அவரும் தயங்காமல் வந்து, சிறப்புரையாற்றினார்.
காயல்பட்டினத்தில் பல பள்ளிவாசல்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், அவற்றின் பழமை பாதுகாக்கப்படாதமை கைசேதத்திற்குரியவை என்றும் அவர் - தனது வயது முதிர்ந்த உதடுகளின் வழியே ஈட்டி முனையை விடவும் கூரிய சொற்களால் தாக்கியதன் வடு நிறைய மாதங்கள் கழிந்த நிலையிலும் இன்றளவும் என் நெஞ்சில் நீங்காதிருக்கிறது.
புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு அவரை அடிக்கடி காணச் சென்ற இக்கட்டுரையின் ஆசிரியர் நண்பர் சாளை பஷீர் அவர்கள் என்னையும் அழைக்கத் தவறவில்லை. ஆனால் நானோ அவரைச் சந்திப்பதை விட எனது வேறு சில பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவு, இன்று சந்திக்க நினைத்தும் வாய்ப்பற்று நிற்கிறேன்.
கருணையுள்ள அல்லாஹ் அவர்களது எழுத்துச் சேவை, சமூகச் சேவைகளை ஏற்றுக்கொள்வானாக...
அவரது மண்ணறை, மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைப்பானாக...
அவரது பிரிவால் துயரிலிருக்கும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையையும், சிறந்த கைமாறையும் தந்தருள்வானாக, ஆமீன்.
Re:...நிகழ்ச்சி தொகுப்புக்களை வழங்கும் ஒருவர் தரும் நெகிழ்ச்சிதொகுப்பு posted bymackie noohuthambi (kayalpattinam )[07 January 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46361
இன்று இரவு நான் நாடுதிரும்பியபின் வீட்டுக்குள்ளும் செல்லாமல் நேரடியாக ஜாவியா 150 ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில் நிறுவுரை ஆற்றும் அப்துல் காலிக் மௌலவி அவர்களின் பயானைக் கேட்டு மகிழ்வதற்காக சென்றபோது அவர்கள் அப்போதுதான் என் வருகைக்காக காத்திருந்தது போன்று பேச்சை ஆரம்பித்தார்கள், நிகழ்ச்சி முடிவின்போது மருமகன் ஸாலிஹ் அவர்களை சந்தித்து உனது kayalpatnam .com ஒன்றுதான் காயல்பட்டணம் இணையதளங்கள் ஆரம்பத்தில் 7 என்று இருந்து இப்போது ஒன்றோடு நிற்கிறது. அதுவும் இப்போது ஒரே late news மரண செய்தியைத்தான் தருகிறது latest news தருவதில்லையே என்றேன். வேளை பளு என்றவாறு எனது latest கட்டுரை பார்த்தீர்களா என்றார். இல்லை என்றேன்...
இதோ படித்துப் பார்த்தேன். புல்லரித்து விட்டது. மரணித்தவர்கள் நல்லடக்கம் செய்யப் படுவதற்கு நமதூரில் உள்ள மஹல்லா கட்டுப்பாடுகள் ஒருபக்கம் இன்னொருபக்கம் அவர்களுக்கான குழி வெட்டுவது முதல் கபன் துணிகள் வரை பேரம்பேசும் அளவுக்கு நமது மனோநிலையில் சோரம்போகி இருப்பது வெட்கக் கேடான விஷயம்.
தமிழகத்தின் இஸ்லாமிய தலைநகரில் பள்ளிவாசல்களில் சென்று தொழுவதற்கு கட்டுப்பாடு இருப்பதுபோல் அவர் மரணித்த பிறகும் இவ்வளவு பிரச்சினைகள் உள்ளதை இந்த கட்டுரை தெளிவாக அலசுகிறது.
நபிகள் நாயகம் அவர்கள் ஒரு செய்தியை சொல்கிறார்கள். ALAA INNA FIL JASADHI MULGHATHUN . VA ITHAA SALAHATH SALAHAL JASADHU KULLUN . VA ITHAA FASADHATH FASADHAL JASADHU KULLUN . ALAA VAHIYA QALBUN .
சகோதரர் மாமுனா லெப்பை இன்று நேற்றல்ல பல வருடங்களாக எல்லா ஜமாத்தினரிடமும் இதை சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். எத்தனையோ விஷயங்களுக்கு நமது ஜமாத்தார்கள் அதிரடி முடிவுகள் எடுக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
TM அவர்கள் பேரம் பேசும் இடங்களில் நானும் இருந்திருக்கிறேன். அது ஒரு மன சங்கடத்தை ஏற்படுத்தவே செய்தது. இருந்தாலும் வசதி படைத்தவர்களுக்கும் வசதி இல்லாதவர்களுக்கும் மரணம் பொதுவானது. கபன் துணி குழிவெட்டும் வேலை எல்லாமே பொதுவானது. இதற்கு கூடுதல் குறைச்சல் என்று பில் போடுவதும் அவர்கள் மனசாட்சியை தொட்டு பேசும் செயல்.
நாமும் ஒரு நாள் மரணிப்போம். அப்போது நமக்கும் இப்படி நடக்கும் என்று அவர்கள் நினைத்து அல்லாஹ்வுக்கு பயந்து செய்ய வேண்டும். அல்லாஹ்வின் அச்சம் இல்லை என்றால் நாம் எதையும் செய்யலாம். இதற்கு ஒரு கூட்டம் போட்டு ஒரு ஜமாத்து கட்டுப்பாடு ஊர் தழுவி செய்யப் படவேண்டும்.
இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரை இந்த புரையோடிப்போன அசிங்கத்துக்கு ஒரு முடிவை விடிவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக. ''இதனை இதனால் இவண் முடிக்குமென்றாய்ந்து அதனை அதன் கண் விடல்''.ஒரு தனி மனிதன் முயற்சிகள் சமுதாயத்தை பற்றிய கவலைகள் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கின்றன. அல்லாஹ் அதற்கு துணை நிற்கிறான் என்ற பல உதாரணங்களை சொல்ல முடியும்.
ஒரு நல்ல கட்டுரை. சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுகிறது. உங்கள் மூலம் ஒருவருக்கு ஹிதாயத் கிடைத்தால் அது இந்த உலகம் அதி உள்ளவற்றை விடவும் உங்களுக்கு மிக சிறந்தது என்று நபிகள் நாயகம் அவர்கள் சொல்லி இருப்பதை எனது வாழ்த்தாக மருமகன் ஸாலிஹ் அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் எல்லாமே வெற்றியாக முடிவதில்லை. அவர்கள் வெறியுணர்வு அதற்கு காரணம் என்பார்கள். ஆனால் வெறியுணர்வு சில நேரம் அவசியமாகிறது. அந்த வேட்கையுடன் செயல்படுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வான்
இந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய வேண்டும் என்றால் அதையும் நீங்கள் என்னிடம் கேட்டுப் பெறலாம் . ஆனால் அது ''ஒரு அணில் மண் சுமக்கும் அளவுக்குத்தான்'' இருக்கும் என்பதை மிக்க அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறந்து விட்டேனே.... posted byS.K.SALIH (காயல்பட்டினம்)[05 January 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46357
நமதூரில் ஜனாஸா நல்லடக்கத்தில் தன்னார்வத்துடன் சேவையாற்றும் பலரை இக்கட்டுரையில் பட்டியலிட்ட நான், என் நெருங்கிய உறவினர் அன்புச் சகோதரர் நஹ்வி முத்துவாப்பா, எங்கள் குருவித்துறை பள்ளியின் முன்னாள் இமாம் மர்ஹூம் ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம் அவர்களது மருமகனார் தாஹா காக்கா (உடல் நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருக்கும் அவருக்கு அல்லாஹ் நல்ல உடல் நலனை வழங்குவானாக!), தைக்கா தெருவில் சதக்கத்துல்லாஹ் காக்கா, புகாரீ (48) காக்கா, ஐ.எல்.எஸ்.முஹ்யித்தீன் காக்கா ஆகியோரைக் குறிப்பிட மறந்து விட்டேன்.
நண்பரும், பாடகருமான எஸ்.ஏ.காஜா அவர்கள் நினைவூட்டியதையடுத்து தற்போது இணைத்துள்ளேன்.
இன்று காலையில் நமதூர் பெரிய குத்பா பள்ளியில் ஒரு ஜனாஸாவை அடக்கிவிட்டுத் திரும்பியபோது, நல்லடக்கச் செலவினங்கள் தொடர்பாக ஒரு விவாதம் வாட்ஸ்அப் குழுமங்களில் ஓடிக் கொண்டிருப்பதாக அறிந்து, என்னிடம் வாட்ஸ்அப் இல்லாததால், அதை வைத்துள்ளவர்கள் மூலம் பார்த்து அறிந்துகொண்டேன்.
உடனடியாக, சகோதரர் எஸ்.கே.ஸாலிஹ் இடம் இதுகுறித்த எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, “நானும் பல முயற்சிகளை மேற்கொண்டு விட்டேன். இதுவரை எந்தப் பயனையும் காணவில்லை. எனவே, நீங்கள் உங்கள் எழுத்தின் மூலமாவது விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டேன்.
சம்மதித்துச் சென்றவர், சிறிய வாசகத்தைப் பதிவிடுவார் என்று பார்த்தால், ஒரு கட்டுரையையே தந்துவிட்டார்.
சரி, நான் இன்று பெரிய குத்பா பள்ளி மையவாடியில் மய்யித்தை அடக்கிய பின், அங்குள்ள மக்களிடையே பேசியதை அப்படியே கீழே தருகிறேன்:-
ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டால், அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து எதுவுமே புரியாமல் - கவலையில் மரணித்தவரின் குடும்பத்தார் எதையும் கவனித்துச் செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள். அப்படியான நேரங்களில், அந்த மய்யித்தை அடக்கும் ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பில், அவர்களது சார்பில் நின்று பொறுப்பேற்று காரியங்களைச் செய்து கொடுக்க வேண்டியது நமது தார்மிகக் கடமை.
நமதூரில் 32 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றுள் மையவாடிகளைக் கொண்ட பள்ளிவாசல்கள் 18. இந்த 18 பள்ளிகளிலிருந்தும் தலா இரண்டே பேர் இந்த நல்லடக்கப் பணிகளைத் தெரிந்துகொண்டு, செய்திட முன்வந்தாலே நமதூரில் 36 பேர் இதற்காகக் கிடைப்பார்கள். அவர்களைக் கொண்டு தங்குதடையின்றி நல்லடக்கக் காரியங்களைச் செய்து, மரணித்தவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கலாம்.
இதன் நன்மையை உணர்ந்திருந்தால் இதற்குத்தான் போட்டி போட வேண்டும். ஆனால் பரிதாபம்! 18 வார்டுகளுக்கும் கவுன்சிலராய் நிற்பதற்கு நான் நீ என போட்டி போடும் மக்கள், இதுபோன்ற நற்காரியங்களுக்கு நேரில் சென்று அழைத்தாலும், தலைமறைவாகி விடுகின்றனர்.
இதுபோன்று பொறுப்பெடுக்க அந்தந்தப் பகுதிகளில் சமூக ஆர்வலர்களாக யாரும் முன்வராத காரணத்தால்தான் - கட்டுரையில் குறிப்பிட்டுள்ள படி, நேற்று நடைபெற்ற நல்லடக்கத்தில் 7,560 ரூபாயும், இன்று நடைபெற்ற நல்லடக்கத்தில் 5,800 ரூபாயும் காண்பிக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் 1,760 ரூபாய். இந்தத் தொகை வசதியுள்ளவர்களுக்கு ஒன்றுமே இல்லை. ஆனால் வசதியற்றவர்களுக்கோ சுமார் 15 நாட்கள் வாழ்க்கைச் செலவைப் பூர்த்தி செய்யும்.
இந்தப் பிரச்சினையை யார் கையிலெடுப்பது? பூனைக்கு யார் மணி கட்டுவார்?
இங்கு எல்லா ஜமாஅத்துகளைச் சேர்ந்த - எல்லாக் கொள்கைகளைச் சேர்ந்தவர்களும் வந்திருக்கின்றீர்கள். பலமுறை நானும் எல்லா ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும், ஐக்கியப் பேரவையையும் தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட போதிலும் இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
இப்போது இறுதியாக உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்...
இதுபோன்ற மரண நிகழ்வுகளில், அந்தந்த ஜமாஅத்துகள் பொறுப்பெடுத்துக் கொண்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு உதவியாக இருக்கும். எனவே, இனியேனும் காலம் தாழ்த்தாமல் இதுகுறித்து கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், இதுகுறித்து ஐக்கியப் பேரவையைத் தொடர்ந்து வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கத் தூண்டுமாறும் இங்கு வந்திருக்கும் அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த மக்களாகிய உங்களை நான் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
இதைச் செய்வது ஈருலகிலும் நமக்கு நிறைவான நன்மையைப் பெற்றுத் தரும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திய மேலான சுன்னத்தைப் பின்பற்றிய பாக்கியசாலிகளாக நாம் ஆவோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக, ஆமீன்.
அற்ப நேரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னே நம் மனதை இழுத்துச்சென்று விட்டது... posted bySK Shameemul Islam (Chennai)[19 June 2018] IP: 122.*.*.* India | Comment Reference Number: 46191
மாஷா அல்லாஹ், சகோதரர் முஷ்தாக்கின் 'நம் தோட்டமும் பூ பூக்கும்....' கட்டுரை அற்ப நேரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னே நம் மனதை இழுத்துச்சென்று விட்டது.
அஹ்மத் காக்காவின் 'ரகசிய போர்வாள் ரஸீன் அமீர்' (அது வேறொன்றும் இல்லை, உமர் முக்தார் புத்தகத்திற்கு வைக்கப்பட்ட ரகசிய பெயர்) மஜ்லிஸுல் புஹாரிஷ் ஷரீபின் தோட்டத்தில் வைத்து மாலை நேர மயான அமைதியில் கேட்கும்போது நம்மை இத்தாலியின் முசோலினியின் படைக்கெதிராகவே நிலைநிறுத்திவிடும்.
பள்ளிக்கூடத்திலோ..., பெல்லடித்து இரண்டு நிமிடம் தாமதமாக வந்தாலே கோல்ராஜ் சாரின் நார் பிரம்பு பதம்பார்க்கும்.
ஹாமிதிய்யாவின் நூலகத்தை (அக்காலங்களில்) அங்கு மாணவர்களாக இருந்தவர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். ஒரு வகுப்பில் குறைந்தது இருவராவது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகை முடித்து மதிய உணவு உண்ட பிறகு நடைபெறும் சொற்பயிற்சி மன்றத்தில் பேசவேண்டும். பேசுவதற்கு தலைப்பும் தரப்படும். அதற்கு ஏற்றாற்போல் புத்தகம் அங்குள்ள நூலகத்தில் இருந்து முந்தைய வாரமே எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறாக மாணவர்களை ஊக்குவிப்பதில் ஒய்.யூ.எப். சங்கத்தின் செயலாளர் முஹ்யித்தீன் காக்காவின் பங்கு மகத்தானது.
அக்காலம் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வழியமைத்தது. இக்காலமோ அதை உணர்ந்து பார்க்கக்கூட இயலாத நிலைமைக்கு நம் இளைய தலைமுறையினரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.
அன்று ஒருவர் மனதை மற்றவர் இலகுவாக புரிந்துகொள்ளும் நிலைமை இருந்தது; ஆனால் இன்று சின்னஞ்சிறு விசயத்திற்கே சகிப்புத்தன்மை இழந்து காணும் ஒரு சமூகம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
Re:...அருமை posted byRaiz (Sydney)[04 June 2018] IP: 203.*.*.* Australia | Comment Reference Number: 46183
எனது பால்ய கால நினைவுகளை உயிர்பித்தத்திற்கு கட்டுரையின் ஆசிரியர்க்கு ஆயிரம் நன்றிகள் ! ஆம் நானும் அந்த நூலகத்தை நுகர்ந்து இருக்கிறேன் ஒரு சிறுவனாக , 1985 to 1992 காலங்களில் ! என்ன ஒரு nostalgia!
பூந்தளிரும் கோகுலமும் ரத்னபாலாவும் தான் என்னுடைய favourites ! அந்த நூலகத்திற்குள் நுழையும் பொது துளிர்க்கும் ஒரு புத்துணர்ச்சி தனியானது , அதை அப்போது உணர்ந்ததை இப்போது முலை விடும் இந்த nostalgia எனும் இனிய memory quantum இல் அதிகமாக உணர்கிறேன் !
புத்தகங்கள் என்னை சுண்டி ஈர்த்தாலும் , எங்கள் தெரு பசங்க எங்கே என்னை ' இவன் ஒரு சரியான Nerd' என்று சொல்லி விடுவார்களோ என பல முறை பயந்தேன் ; அது ஒரு மிக முட்டாள் தனமான பயம் என்று இப்போ நினைத்து சிரிக்கிறேன் !
அந்த புத்தகங்கள் மட்டும் இல்லை என்றால் கையளவு கற்றதும் காற்றில் கரைந்து போயிருக்கும்! ஏட்டு சுரைக்கையாக மறைந்தே போயிருக்கும் !
அந்த புத்தகங்களுக்கும் இந்த ஆசிரியருக்கும் வல்ல இறைவனுக்கும் நன்றிகள் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross