Re:...தன் செவிகள் பாழானாலும் என் கவிகள் பாழாகாமல் காத்த ராசாத்தி posted bymackie noohuthambi (colombo)[07 December 2018] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46321
கவிதை தந்த புகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இளமையில் வராத புது கவிதை இது. தத்துவங்கள் சொல்லியே பழகிப் போன தமிழன்.
இடுக்கண் வருங்கால நகுக என்ற திருக்குறள் இந்த காலத்துக்கு பொருந்தாது. இடுக்கண் வருங்கால் பொறுமையாக இரு என்ற திருமறை வசனம் எப்போதும் பொருந்துகிறது.
முதுமையடைந்தவர்களை இளைய தலைமுறையினர் எப்படி பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த திருமறையே சொல்கிறது. எனவே இளமையும் முதுமையும் என்ற கவிதையை இறைவனின் திருமறை நபிகளின் வழிமுறை நபி தோழர்களின் நெறிமுறை இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி எல்லோரும் நடந்து கொண்டால் இளமையை முதுமை சாடாது முதுமையை இளமை ஏளனம் செய்யாது.
காவோலையை பார்த்து சிரித்ததாம் குருத்தோலை ..ஆனால் குருத்தோலையை பார்த்து காவோலை சிரிக்கிறது என்ற உண்மை விளங்குவதில்லை.
நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும் என்ற ஒரு கவிஞன் பாடுகிறான்.
மனசுக்கு வயசு இல்லை என்கிறது ஒரு புதுக்கவிதை.. இளமை புதுமை இனிமை இவற்றைக் கடந்து வந்து முதுமை அடைந்தாலும் அப்படி இளமையாகவே இருக்க முடியும்.
மனித உடலில் ஒரு சதை துண்டு உண்டு. அது கெட்டுவிட்டால் எல்லாமே கெட்டுவிடும். அது சீராக இருந்தால் எல்லாமே சீராக இருக்கும். அறிந்து கொள்ளுங்கள் அதுதான் இதயம் என்ற நபிமொழியை மனதில் கொண்டு வாழ்ந்தால் முதுமையும் சுகமே...வாழ்த்துக்கள்.
நிச்சயமாக இறைவன் மனிதன்மீதுகொண்டாகாதலால்தான் இந்த உலகையேபடைத்தான் posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[15 February 2017] IP: 37.*.*.* | Comment Reference Number: 45232
நிச்சயமாக இறைவன் மனிதன்மீதுகொண்டாகாதலால்தான் இந்த உலகையேபடைத்தான் அல்ஹம்துலில்லாஹ்
வானவில் என்பது நீர்த்துளியில் ஊடுருவிய சூரியக்கதிரின் பிரதிபிம்பமே மாறாக நீர்த்துளியல்ல
நீர்த்துளிகள் ஆவியானாலும் அதுமீண்டும் இந்த பூமியைவந்தடையும் அது நிரந்தரம்
வானவில் அந்தரம் வந்துபோகும் நிரந்தரமல்ல
நான் கடந்துவந்த பாதைகளில் என்னையும் உரசிச்சென்றதுதான் அந்த வானவில்
நான் அது வானவில்தானென்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டேன் எல்லாப்புகழும் இறைவனுக்கே.
நாம் எப்பொழுதும் உறவுகளையு,ஊரையும்,உலகையும் காதலிக்கிறோம்
அதனால் கூடியபட்சம் வலிகளில்லாமல் இந்தவரிகளை தரமுடிந்தது அல்ஹம்துலில்லாஹ் ஜஃ ஜாக்கல்லாஹ் ஹைர்
சகோ ஷேக்னா லெப்பை அவர்களே
உண்மைதான் சூப்பர் மச்சான் உங்கள் மை சொல்வது உண்மைதான் நீங்களும்
உங்களைப்போலும் அநேகர்கள்தந்த ஊக்கம்தந்த தாக்கம்தான் எனது இந்த ஆக்கத்தை இத்தளத்தில் பதியமுடிந்தது
இத்தளத்திற்கும் ஊக்கம்தந்த அனைவருக்கும் ஜஃஜாக்கல்ல்லாஹ் ஹைர்
பயனுள்ள ஆக்கங்கள் தரஇனியும் ஊக்கம்தாருங்கள் இன்ஷா அல்லாஹ் ஆமீன்
Re:... posted byS.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.)[14 February 2017] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45229
"அஸ்ஸலாமு அலைக்கும்."
கோடான கோடி வாழ்த்துக்கள்!!!!
கம்பன் வீட்டு கட்டு தரியும் கவி பாடும் என்று கேள்விப்பட்டேன். ஆனால், இன்று மாறாக குளத்தார் வீட்டு குயிலும் கவிதை பாடி உள்ளது. மீண்டும், தொடர்ந்து முயற்சி செய்து நாளைய தலை முறையினருக்கு எழுதுங்கள். அடி மேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும் என்பது உணர்த்தி விட்டீர்கள். (உங்கள் ஆசான் நான், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தேன், இன்று நடத்தி காட்டி விட்டீர்கள். மகிழ்ச்சி உண்மையில்.
அன்புடன் உங்கள் சின்ன மச்சான்.,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.
Re: posted byA.R.Refaye (Abudhabi)[06 December 2015] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42373
மதம் பிடித்த மழையே நீ போட்ட கணக்கு தவறு, உன் வழி தடுத்தோம் அதற்காக
இப்படியா எம்மை தன்டிப்பது,உன் கொடூர மழை மதத்தை அடக்க நாங்கள்
மதத்தால் இனைந்தோம இதை கண்டபிறகும் நீ உன் வழி செல்ல மனமில்லையோ!!போய் வா
வெடித்திருக்கும் பூமி உன்னை வரவேற்க்க காத்திருக்கிறாள் உடனே மதம் தனிந்து இதமாய்
மழையே சென்றுவா சென்(அன்னையை)காப்பாற்ற கரங்களை உயர்த்திகிறோம்.
நினைந்து நினைந்தே
ஞாபகம் செய
உள்ளம் முழுதும்
வெள்ளம் சூழ
நடையாய் நடந்தே
இடர்கள் கடந்த
முன்னோர் வாழ்வைச்
சொன்னாய் மழையே...
அற்புதமான சிந்தனை தாங்கிடும் அருமையான வரிகள்
இவை.... ஆடம்பர வாழ்க்கைக்கு ஏங்கிடும் இன்றைய
தலைமுறையினருக்கு, பண்டைய நம் முன்னோரின்
வாழ்வியல் போராட்டத்தை பிரதிபலித்த விதம் அருமை...
மனிதன் அத்து மீறும்போது வரங்கள் சாபங்களாக மாறிவிடுவதை ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கும்
தாயக்குடி இளம்பிறை அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துக்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross