Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:39:48 PM
சனி | 14 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1962, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:01
மறைவு18:01மறைவு05:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3406:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
தலையங்கம்
அனைத்து தலையங்கங்களையும் காண|அனைத்து கருத்துக்களையும் காண
Previous Editorial
தலையங்கம் எண் (ID #) 50
#KOTWEDIT50
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 21, 2014
மாற்றம் இன்றே துவங்கவேண்டும்!
இந்த பக்கம் 41303 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

16ஆவது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல்கள் தற்போது நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 07 அன்று துவங்கிய இத்தேர்தல் - 9 கட்டங்களாக - மே 12 வரை நடைபெறுகிறது. முடிவுகள் மே 16 அன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், இத்தேர்தலின் முடிவுகளை முற்கூட்டியே - ஊடகங்கள் கருத்து கணிப்புகள் வாயிலாக வெளியிட்டு வருகின்றன.

பாரதிய ஜனதா கட்சி கூட்டணி, தேசிய அளவில் அதிக அளவில் இடங்களை வெல்லும் என்றும், ஆட்சியமைக்கத் தேவையான 272 இடங்களை நெருங்கவோ அல்லது தாண்டவோ செய்யும் என்றும் இக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு தேர்தல்களும் புதிதல்ல, கருத்துக் கணிப்புகளும் புதிதல்ல. இந்திய ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் - 80 கோடிக்கும் மேலான வாக்காளர்களின் மன நிலையை அறிந்து, அவற்றை நாடாளுமன்ற இடங்களாகப் பிரித்துக் காண்பிக்கும் திறனை இன்னும் பெறவில்லை என்பது இதுவரை நடைபெற்று முடிந்துள்ள தேர்தல்கள் சொல்லித்தரும் பாடம்.

விற்பனைக்கு செய்தி (PAID NEWS) மிகுந்துள்ளதாகக் கூறப்படும் இந்திய ஊடக உலகில், கருத்து கணிப்புகளும் அதில் ஒரு வகை என்பது வலுவான - நியாயமான குற்றச்சாட்டு. பணத்திற்காக தேவையானோருக்கு கருத்துக் கணிப்புகளை மாற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆயத்தமாக உள்ளன என அண்மையில் வெளியான செய்திகள் உறுதி செய்துள்ளது.

News Express என்ற தொலைக்காட்சி - CVOTER என்ற நிறுவனம் உட்பட 11 கருத்துகணிப்பு நிறுவனங்கள், பணத்திற்காக, தங்கள் முடிவுகளை மாற்றி வழங்க தயாராக உள்ளதாக செய்தி வெளியிட்டது. CVOTER நிறுவனத்தின் உரிமையாளர் யஸ்வந்த் தேஷ்முக், ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தின் தலைவர்களுள் ஒருவரான நானாஜி தேஷ்முக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



மக்களின் முடிவு மே 16 அன்று வெளிவரும். அது பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருந்து, நரேந்திர மோடி இந்திய பிரதமரானால், இந்தியாவுக்கு அது நல்லதல்ல என்ற கருத்து தற்போது வெளிநாடுகளில் பரவலாகப் பேசத் துவங்கப்பட்டுள்ளது.

லண்டன் நகரிலிருந்து வெளிவரும் The Economist என்ற பத்திரிக்கை, ஏப்ரல் 05 அன்று Can anyone stop Narendra Modi? என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டிருந்தது. 2002ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரங்களில் மோடியின் பங்கு நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், இதுவரை நிருபிக்கப்படாததற்கு முக்கியக் காரணம், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதுதான் என அத்தலையங்கம் தெரிவிக்கிறது.

மேலும் மோடி பிரதமராகத் தேர்வானால், இந்தியாவின் எதிர்காலத்திற்கு அது உகந்ததல்ல என கூட்டாக பல முக்கிய பிரமுகர்கள் தெரிவித்துள்ள கருத்து - லண்டன் நகரில் இருந்து வெளிவரும் மற்றொரு நாளிதழான THE GUARDIAN இல் - ஏப்ரல் 10 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர்களான கிரீஸ் கர்னாட், யு.ஆர்.கிருஷ்ண மூர்த்தி போன்றோர், ‘சமகாலீன விசார வேதிகே’ என்ற பெயரில் ஒருங்கிணைந்து, மோடியின் வளர்ச்சி - இந்திய பன்மைத்துவ சித்தாந்தத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற கருத்தை பதிந்துள்ளதோடு மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குஜராத் பிரதமர் நரேந்திர மோடி இந்திய பிரதமரானால் நாடு சந்திக்கவுள்ள ஆபத்துகளை இதற்கு மேலும் நாம் விரிவாக விளக்கத் தேவையில்லை. இந்தியாவின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டுள்ள பெரும்பாலானோர் இதை உணர்ந்துள்ளனர். நடைபெறும் தேர்தலில் இந்தப் பின்னணியை, அபாயத்தை, உணர்ந்து எவ்வாறு நாம் வாக்குகளை அளிப்பது என்பதை அலசுவதுதான் இத்தலையங்கத்தின் நோக்கம்.

செய்திகளை மட்டும் வெளியிடாமல், செய்திகளுக்குப் பின்னணியில் உள்ள தகவல்களையும் வழங்குவது ஊடகங்களின் கடமையாகும். ஊடகங்களில் கட்டுரைகள் வாயிலாக இவைகள் பொதுவாக அவ்வப்போது வெளியிடப்படும். தலையங்கங்கள் - ஊடக ஆசிரியர்களின் எண்ண அலைகளைத் தெரிவிக்கும் வாகனமாகும்.

தேர்தல் காலங்களில் THE NEW YORK TIMES போன்ற மேற்கத்திய பத்திரிக்கைகள் - அந் நாட்டு தேர்தல்களில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளன. காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் இந்தத் தலையங்கம், குறிப்பிட்ட எந்தக் கட்சிக்கும் ஆதரவு வழங்க கோரப் போவதில்லை. வாக்களிக்கும் மக்கள் - தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் முன், மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விசயங்களை மட்டும் இத்தலையங்கம் மூலம் பகிர்ந்து கொள்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா - 1947ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது. இந்த சுதந்திரத்தோடு இந்தியா பிரிவினையையும் சந்தித்தது. பிரிவினையின் காரணங்கள் நீண்ட, தனி வரலாறு என்றாலும், அவற்றைச் சுருக்கமாக நாம் சில சொற்களில் கூறலாம். குறிப்பிடத்தக்க அளவிலான முஸ்லிம்களும், ஹிந்துக்களும் ஒரே நாட்டில், ஒற்றுமையாக வாழ முடியாது என்ற எண்ணத்தில் செயல்பட்டதன் விளைவே - பிரிவினை.

ஒன்றாக, ஒற்றுமையாக இரு சமுதாயத்தினரும் வாழ முடியாது என்ற சிந்தனையில் இருந்த சில முஸ்லிம்கள் - பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கி அங்கு குடியேறினர். அதே சிந்தனையிலிருந்த குறிப்பிடும்படியான சில ஹிந்துக்கள் - ஆர்.எஸ்.எஸ். என்றும், ஹிந்து மகா சபா என்றும், ஜன சங் என்றும் பல பெயர்களில் - இந்திய மண்ணில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

சுதந்திரத்திற்குப் பின்னர் - சிறுபான்மையினர் உட்பட இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசனம் - அனைத்து மக்களுக்கும் பல்வேறு உரிமைகளையும், பாதுகாப்புகளையும் வழங்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள், பெருவாரியான தருணங்களில் - நியாயமான தீர்ப்புகளையும் வழங்கி வந்துள்ளன.

இருப்பினும், சுதந்திரத்திற்கு முன்னர் நடந்த மதக் கலவரங்கள் - வீரியத்தில் குறைந்திருந்தாலும், எண்ணிக்கையில் குறையவில்லை. ஹிந்து மதத்தை முன்னெடுத்து அரசியல் செய்த அமைப்புகள் அவ்வப்போது தலைதூக்கிக் கொண்டே வந்துள்ளன. அந்த அமைப்புகளோ, அவற்றின் சித்தாந்தங்களோ - கடந்த 50 ஆண்டுகளாக, தீவிரமாக எதிர்க்கப்படவில்லை; சட்ட ரீதியாக அழிக்கப்படவும் இல்லை. அதன் விளைவே 1990களில் ரத யாத்திரை என்ற பெயரில் அத்வானி நாடு முழுக்க முன்னிலைப் படுத்தப்பட்டது; பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட சில ஆண்டுகளில் வாஜ்பாய் முன்னிலைப்படுத்தப்பட்டு பிரதமராக்கப்பட்டது; தற்போது குஜராத் கலவரங்களைத் தொடர்ந்து நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுவது.

ஆழ சிந்தித்தால், நரேந்திர மோடி போன்ற பாசிச தலைவர்கள் நாட்டின் பிரதமராகும் சூழல் உருவாகியிருப்பது இது முதல் முறை இல்லை. முன்னரும் அச்சூழல் நிலவியுள்ளது, அதற்கான அடிப்படை காரணங்கள் களையப்படவில்லை என்றால் வருங்காலங்களிலும் இதுபோன்ற சூழல்கள் தோன்றும்.

அப்படியானால் அதற்கான அடிப்படைக் காரணங்கள்தான் என்ன?

கடந்த 67 ஆண்டுகளில், முஸ்லிம்களும் - முஸ்லிம் அமைப்புகளும், மதசார்பின்மைக் கொள்கை என்பது சிறுபான்மையினர் நலனுக்காக மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கான நலன் என்பதை சக குடிமக்களுக்கு உணர்த்தத் தவறிவிட்டனர். சிறுபான்மை சமுதாயத்தைத் தாண்டி, இடது சாரி, அறிவு ஜீவிகள் வட்டத்தை தாண்டி, இந்த எண்ணம் - பிற சமுதாய மக்களிடம் பெரிய அளவில் வேரூன்றவில்லை. அதன் விளைவு, முஸ்லிம்கள் தேசிய அளவில் நம்பிய காங்கிரஸ் போன்ற கட்சிகளும், மாநில அளவில் நம்பிய தி.மு.க. போன்ற கட்சிகளும் - ஊழலிலும், நிர்வாகச் சீர்கேட்டிலும் மூழ்க, பெருபான்மை சமுதாய மக்களோ - அந்தக் கட்சிகளை விட்டும் விலகி, பாரதிய ஜனதா போன்ற மாற்றுக் கட்சிகளை நாடத் துவங்கியுள்ளார்கள்.

சமூக நீதியை நிலைநாட்டி, சுய மரியாதைச் சிந்தனையை வளர்த்த திராவிடக் கட்சிகள் - இன்று மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அளவில் வளர்ந்துள்ளன. அவர்களின் முடிவுகளும், செயல்பாடுகளும் - மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இருக்கும் என்பது அறிவுக்கு பொருந்தாத எதிர்பார்ப்பு. மாறாக அவர்களின் செயல்பாடுகள் - தங்களையும், தங்கள் தொழில் நிறுவனங்களையும், தங்கள் குடும்பங்களையும் பாதுக்காதுக்கொள்ளத்தக்க அளவில்தான் இருக்கும்.

அருவருக்கத்தக்க இந்த உண்மையை அறிந்தும், சிறுபான்மையின அமைப்புகள் உட்பட பெருவாரியான மக்கள், அக்கட்சிகளை மக்கள் மன்றத்திலிருந்து அகற்றுவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது - அகண்ட சமூகத்தில் நிலவும், அறியாமையின் வெளிப்பாடு.

ஹிந்துத்துவ சித்தாந்தங்கள் - தமிழகத்தில் வேரூன்றாமல் இருக்க பெரியார் போன்றோர் ஆற்றிய பணிகள் இன்று புதைக்கப்பட்டு, தீண்டத்தகாத அந்த சித்தாந்தங்களை இந்த மண்ணில் வரவேற்று, பிறரும் பரிசீலித்து, ஏற்றுக்கொள்ளும் அளவில் வளர்த்த காரியத்தில் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றியே இன்று பா.ஜ.க.வின் பின்னால் சென்றுள்ளனர்.

இந்த நாடு எதிர்நோக்கியுள்ள - ஹிந்துத்வா சக்திகளுடனான போராட்டத்தில், திராவிட கட்சிகள் - சிறுபான்மையினர் பக்கம் முழுவதுமாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பது, நிலவும் அரசியல் சூழலை முழுமையாக உணராத சிந்தனையே.

பாரதிய ஜனதா கட்சி, சிறுபான்மை சமுதாய மக்களுக்கு - மதச்சார்பின்மைக்கு எதிரான கட்சியாக இருக்கலாம். ஆனால் – குறிப்பிடத்தக்க அளவிலான பெரும்பான்மை சமுதாய மக்கள் - அக்கட்சியை அவ்வாறு பார்க்கவில்லை என்பதை நாம் உணர வேண்டியது அவசியம். இதுதான் வளர்ந்து வரும் நிதர்சன உண்மை. ஊழல் வேறு விஷயம், மதசார்பின்மை வேறு விஷயம் என வாதிடுவோர் இந்தத் தொடர்பைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முஸ்லிம் சமுதாயம் - நடப்பு தேர்தலை, மோடி பிரதமர் ஆவதிலிருந்து தடுப்பதற்கான தேர்தல் என்ற பார்வையிலிருந்து விலகவேண்டும். இது நீண்டகால - ஹிந்து வகுப்புவாதத்திற்கு, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு, எதிரான பிரச்சனை. இதற்கு தொலைநோக்குப் பார்வையோடுள்ள அணுகுமுறையே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

முஸ்லிம் சமுதாயம் - மதச்சார்பின்மை ஆதரவு என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சில கட்சிகளை ஆதரித்து, ஊழல் போன்ற முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் இருப்பது - இனி வருங்காலங்களில் பயனைத் தராது என்பதோடு, பாரதிய ஜனதா கட்சி போன்ற வகுப்புவாத கட்சிகள் வளரவும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் சித்தாந்தங்கள் ஆழமாக நாட்டில் வேரூன்றவும்தான் துணை புரியும்.

எனவே, முஸ்லிம் சமுதாயம் - தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, நாட்டின் எதிர்காலத்தை அனைத்து சமுதாய மக்களுக்கும் பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள - வழமையான சிந்தனைகளிலிருந்தும், ஆதரவு நிலைகளிலிருந்தும் - இனியும் காலந்தாழ்த்தாமல் வெளிவருவது காலத்தின் கட்டாயம்.

Previous Editorial
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...

"முஸ்லிம் சமுதாயம் - நடப்பு தேர்தலை, மோடி பிரதமர் ஆவதிலிருந்து தடுப்பதற்கான தேர்தல் என்ற பார்வையிலிருந்து விலகவேண்டும்." copy paste.

இன்னும் இரண்டு தினங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த தலையங்கத்தின் நோக்கம் என்ன? தெளிவில்லை.

இன்றைய சூழ்நிலையில் எந்த பொதுநல வாதியிடமும் சுயநலம் இல்லாமல் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

நமதூரிலேயே நானறிய எதிர்கட்சியாக இருக்கும் போது ஊழலை பற்றி வாய் கிழிய முழங்கியவர்கள் நமது ஊரை ஆளும் நிர்வாகம் கையில் கிடைத்ததும் செய்த ஊழல்கள் மலையை விட பெரிது. தற்போதைய பொதுநலவாதிகள் இப்படித்தான்.

நம் பாரத திருநாட்டில் சிறுபான்மயினராகிய நாம் தனித்து எதையும் சாதிக்கவும் முடியாது, சந்திக்கவும் முடியாது. இருக்கும் கெட்டவர்களில் எவர் நமக்கு அதிகம் கெடுதி இல்லாதவர் என சார்வதே புத்திசாலித்தனம்.

ஊழலை ஒழிப்பேன் என வரிந்துகட்டிய திரு கெஜ்ரிவால் கூட கொஞ்ச நாள் பதவி சுகத்திற்கு ஊழல் கட்சி என அவரே முத்திரை குத்திய காங்கிரசின் தயவை நாடித்தான் ஆட்சியில் அமர்ந்தார். ஒன்றும் சாதிக்க முடியவில்லை திரும்பவும் தேர்த்தல் என நம் வரிப்பணம் தான் வீணாகிறது.

ஆக தற்போதைய சூழ்நிலையில் சிறுபான்மையினராகிய நாம் ஒன்று சேர்ந்து நம் பொது எதிரி தலையெடுக்காமல் தட்டுவதே புத்திசாலித்தனம்.


posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 21 April 2014
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34515

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...

This is an excellent article. You have correctly questioned the validity of the opinion polls and their scientific validations behind it.

There are various ground factors to be established for any statistical analysis to be valid. Otherwise the statistical measurement could be intentionally or unintentionally biased and skewed.

a) Population sampling size – The theory of large sample size suggests that as much small is the sampling size the margin of error is very high and the margin of confidence will be low (or the error ratio to be low). It is unclear how JuVi kind of magazines just take a sample size of 100 and assumes that is good enough to represent 1.3 million strong population in a constituency.

b) Control grouping – This tend to group generally homogeneous population. For e.g. Muslims, Hindus. Among those, could Shias and Sunnis. Among those other subsequent demographic categories etc. This grouping determines the group characteristics and sizing. Sometimes this is derived through targeted questions and how the questions themselves have been designed.

This leads to the question – what were the questions asked and how these questions were designed. Where the questions misleading or broadly generalist. One group may assume a question differently than the other group and potentially provide answers unintentionally wrong – may be quite rightly to say, mislead to answer wrongly.

c) Population dispersion – How do they fix the sample size among different control groups? Is that quiet representative? How these folks acquire data from rural India? Did they visit the “internally displaced” refugee camps in Chhattisgarh, Orissa etc.? Did they question adhivasis?

d) None of them publish margin of error. Typical margin of error is 3% - which would eventually give a swing in the observation. It was laughable with Thanthi TV presented like 72% back Modi without providing this error margin. There is no 100% error free (1.0 Confidence) statistical result. Which would typically require the analysis to be subjected to error analysis and most often statisticians assume the result is “biased”.

e) Relevance of data – Simply taking opinion polls from big city doesn’t represent entire India; however, it does matter that who votes in large number than who may not. In online opinion polls people like me vote without any relevance to the actual population who tend to vote. Such would typically fall under the margin of error. Most statistically analysis the accuracy is reliable with 3-5% of margin of error – however, this margin could vary – could be set even as high as 20% in some cases and even 40% in some cases – depending on the usefulness of the analysis.

f) Data quality – to have opinion poll like that of the size of Indian population, it would take months of preparation, months of execution and months of data analysis and validation. It would require the data to be validated for key criteria. While the government runs the election for couple of months, how does these folks where able to release opinion poll every month or every week? Definitely you don’t need to ask every citizen; even not quarter of the citizens, but significantly representative size is required for 1.3 billion large population.

Without producing any such – when the media presents the public with opinion poll, it does poses question on the integrity.

It is also that it makes us to think how much India has to travel to become a true democracy – when criminals go to parliaments and people like Irom Sharmila is refused rights to vote. How many of us know who Irom Sharmila is or do we really care?

Would we really care about the world when DCW expand their poisonous capabilities?


posted by: Rilwan (TX) on 21 April 2014
IP: 198.*.*.* United States | Comment Reference Number: 34517

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மாற்றத்தை நோக்கி பயணிப்போம் !!

நல்லதொரு தலையங்கம்… சிந்தித்து செயல்படு பவர்களுக்கு !! இத்தலையங்கத்தை ஒட்டிய என்னுடைய கருத்தை ஏற்கனவே முந்தைய செய்தியில் பதிவு செய்து விட்டேன் (பார்க்க : Comment Reference Number: 34451)

"என்றைக்குமே மதவாத பிஜேபி கோ அல்லது அவர்களை ஆதரிக்கும் கூட்டதிற்கு நாம் ஒட்டு போட மாட்டோம் என்பதனை காங்கிரஸ் + திராவிட கட்சிகள் மிக நன்றாக அறியும். இதை மூலாதராமாக வைத்து தான் மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியை நகர்த்தி வருகின்றார்கள். நமக்கும் வேறு போக்கிடம் இல்லை. மதவாத பிஜேபி யை எதிர்ப்பதற்காக இந்த சந்தர்ப்ப வாத திராவிட கட்சிகளை மாறி மாறி ஆதரிக்கொன்றோம்.

இது இந்த தேர்தலில் மட்டும் அல்ல…. மதவாத பிஜேபி என்ற காட்டு மிராண்டி இருக்கும் வரை இதே நிலைதான். அடுத்த தேர்தலிலும் இதையே தான் சொல்லப்போகின்றொம். ஒரு சிறு வித்தியாசம்… திமுக வுக்கு பதிலாக ஆதிமுக கூட்டணி என்போம். அப்படிதானே?

நம்மை நாம் மாற்றி கொள்ளாதவரை மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை. "

என்றைக்கு நம் சமுதாயம், வழமையான சிந்தனைகளிலிருந்தும், ஆதரவு நிலைகளிலிருந்தும் காலந்தாழ்த்தாமல் வெளிவருகின்றதோ அன்று தான் நம்முடைய விடியல் ஆரம்பம். அதுவரை செம்மறி ஆட்டு கூட்டமாக நாமும் வாழ்ந்து நம் இளைய /அடுத்த தலைமுறையையும் அதே சித்தாந்தத்தில் வார்த்து எடுத்து… ஒற்றை சிட்டுக்காக இந்த திராவிட கட்சிகளின் அடி வருடியாக முரட்டு பக்தர்களாக வாழ்வதை தடுக்க முடியாது.

நம்மை நாமே எமாற்றிகொள்ளாமல் உண்மையான அரசியல் (சமூக) மாற்றத்தை நோக்கி பயணிப்போம் !!


posted by: Salai.Mohamed Mohideen (Philly) on 22 April 2014
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 34522

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...

சக மனிதனை வெறுக்க கற்றுக் கொடுக்கும் ஹிந்துத்வ ஃபாஸிஸ்டுகள் தங்கள் அமைப்புகளுக்கு வைத்திருக்கும் பெயர்களை பாருங்கள்.

ராஷ்டிரீய ஸ்வயம் ஸேவக் சங்க்ஹ் ( ஆர்.எஸ்.எஸ்.) -- தேசீய தன்னார்வ தொண்டர் சங்கம்

பாரதீய ஜனதா கட்சி --- இந்திய மக்கள் கட்சி.

எவ்வளவு தந்திரமாக செயல்படுகின்றார்கள். தாங்கள் செய்து வரும் செய்யப்போகும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நாட்டின் பெயரால் , தேசீயத்தின் பெயரால் , நாட்டுப்பற்றின் பெயரால் திரை போடுகின்றார்கள்.

தங்களின் பஞ்சமா பாதகங்களுக்கு நாட்டு மக்களின் பெயரால் ஒப்புதல் வாங்குகின்றனர்.

ஆனால் அவர்களால் ஒடுக்கப்படும் நாமோ மத இன அடையாளங்களோடு மட்டும் நம்மை சுருக்கிக் கொண்டு விடுகின்றோம். நம் தனித்தன்மையை பேணுவது என்பது வேறு நம் அரசியல் இலக்குகளுக்கான பாதைகளை வகுப்பதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பது வேறு.

இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக போட்டு நாம் குழப்பிக்கொள்வதானாலாயே நாட்டு அரசியலின் பெரும்போக்கில் நாம் தனித்தீவாக நிற்கின்றோம்.

நம்முடைய சொந்த நலன்களை நாட்டு மக்களின் பொது நலன்களோடு ஒத்திசைந்து செல்லும் வகையில் பிணைப்பது என்பது ஒரு கலைதான். அதில் நாம் தேர்ந்தாக வேண்டியுள்ளது.


posted by: சாளை பஷீர் (ஜோன்ஸ் தெரு , மண்ணடி , சென்னை) on 22 April 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34527

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...

நீங்கள் இவர்களை பற்றி ஆழமாக புரிதல் வேண்டும் என்றால் சுப உதயகுமார் எழுதிய "Presenting the Past: Anxious History and Ancient Future of Hindutva India" மற்றும் Handcuff to History: Narratives, Pathologies and Violence in South Asia" என்ற புத்தகங்களை படிக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன் ..

இதற்க்கு மேலும் சவுக்கு இணையதளத்தில் உதயகுமார் எழுதிய "பிராமனத்துவமும் அனுத்துவமும் " என்ற கட்டுரை கண்டிப்பாக சிலிர்க்க வைக்கும் -

இந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு - http://savukku.in/4830

நாம் யாரை எதிர்க்காக ஆதிரிக்கிறோம் என்ற தீர்க்கமான புரிதல் வேண்டும் . எலும்பு துண்டுகளுக்காக அசிங்கமான முடிவுகள் எடுக்க முடியாது .

நாம் ஏன் உதயகுமார் புஷ்பராயன் போன்றவர்களை பாராளுமன்றம் அனுப்ப துடியாய் இருக்கிறோம் என்பது சற்றேனும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன் .


posted by: Rilwan (TX) on 22 April 2014
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34530

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தவிர்த்திருக்கவேண்டிய தலையங்கம்.

தெளிவில்லாத தலையங்கம். நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவு படுத்தவில்லை.

வாக்களிக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் , தெளிவு பெற்ற நம் சமுதாய மக்களை குழப்பும் தலையங்கம் இது. தவிர்த்திருக்கவேண்டிய தலையங்கம்.


posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 22 April 2014
IP: 113.*.*.* China | Comment Reference Number: 34536

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. எள்ளு போட்டு...... நெல்லு எடுக்க முடியாது.!!!

அன்பு நண்பர்களே......... இந்த இனைய தளத்தில் தலையங்கம் என்ற தலைப்பில் வரும் எல்லாமே........ இதுவரை அதுக்கு தலை இருக்குமே...... தவிர அதன் அங்கம் (மூளை) இருப்பது இல்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த தலையங்கத்தின் ஆசிரியர் தானும் குழம்பி இருப்பதுடன் நம் மக்களையும் குழப்ப பார்க்கிறார். மேலும் இவரின் கொள்கைகளை திணிக்க பார்க்கும் ஒரு தலையங்கம்.

"எள்ளு போட்டு நெல்லு எடுக்க பார்க்கும்" அறிவீனத்தை இங்கு பயன் படுத்துகிறார்.


posted by: s.s.md meerasahib (TVM) on 22 April 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34542

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved