செய்தி: 2018 – 2019 பருவத்தில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினத்திற்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு? த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “மெகா / நடப்பது என்ன?” பெற்ற தகவல் வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...விழிப்புணர்வு தரும் அதிர்ச்சி தகவல் posted bymackie noohuthambi (kayalpatnam)[09 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46455
இந்த தகவல்களை தனியொரு இயக்கம் காழ்ப்புணர்ச்சியில் சொல்வதாக யாரும் சொல்ல முடியாது ஏனெனில் இந்த தகவல் அனைத்தும் தகவல் அறியும் சட்டத்தின்படி அவர்கள் எழுதிக் கேட்டு தகவல் அறியும் சட்டம் அவர்கள் சட்டப்படி தந்துள்ள தகவல்.
திருமிகு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டபோதும் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று வரை சுமார் 15 ஆண்டுகளாக நமது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
அவருடைய வெற்றிக்கு காயல்பட்டினம்தான் திலகமிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அவரே நன்கு உணர்ந்தும் இருக்கிறார். அவர் வெற்றிக்கு காயல்பட்டினம்தான் பலமுறை கைகொடுத்துள்ளது என்பதை அவர்களே பல மேடைகளிலும் சொல்லி வந்திருக்கிறார்.அவரை நாம் சட்டமன்ற உறுப்பினர் என்று சொல்வதோடு நிற்காமல் ''நல திட்ட நாயகன்'' என்று பெருமையுடன் அழைத்தும் வருகிறோம்.
நமதூரில் நடக்கும் மங்கள நிகழ்ச்சியானாலும் சரி அமங்கல நிகழ்ச்சியானாலும் சரி எல்லாவற்றிலும் அவர் கலந்து கொண்டு காயல்பட்டினம் மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பையும் நட்பையும் வெளிப்படுத்தி வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அவ்வாறெல்லாம் இருந்தும் கூட அவர் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதியில் 15 விழுக்காட்டுக்கு மிகவும் குறைவாக 8.8 விழுக்காடுதான் நமதூருக்கு செலவு செய்திருக்கிறார் என்ற அரசின் புள்ளி விவரம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அவர்கள் மேல் வீண் பழி சுமத்தி அவருடைய கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாக இதை ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கம் முயற்சிக்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது .அரசின் புள்ளி விவரம் சரி இல்லை என்று அண்ணாச்சி சொல்ல வேண்டும் தன்னிலை விளக்கம் அளித்து அறிக்கை விட வேண்டும் என்று அவர் மேல் அன்பு கொண்டுள்ள காயல்பட்டினம் மக்கள் எதிர்பார்ப்பது நியாயமானதே.,
இடிக்கும் துணையாள்வாரை யாரே கெடுக்கும் தகைமையவர் என்று வள்ளுவம் சொல்கிறது. ஒரு ஆட்சி தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்பதற்கு ஒருவர் இருந்தால் அந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று வள்ளுவர் சொல்கிறார்.
நபி தோழர் உமர் அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றபோது ஒரு செய்தியை சொல்கிறார். நான் ஆட்சி பொறுப்பு ஏற்கிறேன் நான் தவறு செய்தால் என்னை தட்டி கேட்க யாரும் உண்டா என்று அவர்கள் கேட்டபோது நீங்கள் தவறு செய்தால் இந்த வாழ் உங்களுக்கு பதில் சொல்லும் என்று இன்னொரு தோழர் தைரியமாக சொல்ல, எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி அந்த தோழரை கட்டி அனைத்துக் கொண்டார்கள் என்ற தகவலை நான் எங்கோ படித்த ஞாபகம் .
எனவே திருமிகு அனிதா அவர்கள் நமதூருக்கு செய்யவேண்டிய சேவைகளை தொய்வின்றி செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் .
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
Re:...இளமை இனிமை புதுமை posted bymackie noohuthambi (kayalpatnam)[07 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46454
அமீரகமா தமிழகமா என்று நினைக்க தோன்றும் அளவுக்கு இங்கே குதூகலம் நிறைந்த கொண்டாட்டங்கள் வேலைதேடிவருவோருக்கு உதவும் கரங்கள் பிறந்த ஊருக்கு ஏழை எளிய மக்களின் விழிநீர் துடைக்க அற்புதமான திட்டங்கள் அள்ளித்தரும் நல்ல உள்ளங்கள். நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும் என்ற கவிதை வரிகளுக்கு உயிரூட்டும் விளையாட்டுக்கள் எல்லாம் சேர்ந்து சுபுஹானின் புகைப் படங்களில் அற்புதமாக தொகுத்து வழங்கி இருக்கும் நேரில் நிகழ்ச்சிகளில் கலந்து இந்த இணையதளத்தின் ஸாலிஹ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்
மனசுக்கு வயசு இல்லை என்பார்கள் இங்கே வயதுவந்தவர்களும் இளைஞர்களாகவே காணப் படுகிறார்கள் அவர்கள் தங்களை இளைஞர்களுடன் சிறுவர்களுடன் இணைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நாங்கள் அரபகத்திலே வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு கொண்டாட்டம் இல்லை நான்கு சுவர்களுக்குள் சத்தமில்லாமல் எங்கள் காயல்நல மன்ற நடவடிக்கைகளை நடத்த வேண்டி இருந்தது.
இனி ஒரு விதி செய்யுங்கள் அங்கு வேலையில் சேர்ந்து நல்லபடி இருக்கும்போது நான் நம் ஊரில் ஒருவருக்காவது இந்த நாட்டில் ஒரு வேலை வாங்கி கொடுப்பேன் வருடம் ஒரு முறை யாரையாவது முக்கிய பொதுநல தொண்டாற்றும் ஒருவரை அழைத்து இந்த விழாவில் கருத்துரை வழங்க வைப்பேன் என்று சபதம் எடுத்துக் கொள்ளுங்கள் . இன்ஷா அல்லாஹ் உங்கள் கொண்டாட்டங்கள் இன்னும் விரிவாகும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பார்கள். யாருக்காவது என்ன உதவியாவது செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற வேட்கை உங்களை தூங்க விடாது அந்த உள்ளத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் எல்லோருக்கும் தருவானாக . உங்கள் வாழ்க்கையில் வருஷமெல்லாம் வசந்தம் வீசட்டும். முப்பது நாளும் பௌர்ணமியாக ஒளி வீசட்டும் .
தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசி இருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்
நல்ல மழை பெய்ததனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளிலும் நீர்மட்டம்
உயர்ந்திருப்பதைப் பார்க்க சந்தோஷம். ஆனால் இரண்டு சிறபிள்ளைகள் அதிலும் சிறு குழந்தை ஒன்று திறந்த கிணற்றின் பக்கம் நிற்பதைப் படம் பிடித்து போடுவது நல்லதல்ல. கவனமாக இருப்பது நல்லது. கிணற்றை எப்போழுதும் மூடியே வைப்பது புத்திசாலித்தனம்.
Re:...கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால். ... posted bymackie noohuthambi (kayalpatnam)[05 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46452
இந்த கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகளில் நிதி நிலை அறிக்கை முக்கிய இடம் பெறுகிறது. அநேகமாக பொது நல இயக்கங்களில் மிக சூடாக விவாதிக்கப் படும் செய்தி நிதி பற்றியதுதான். குழப்பங்களும் கூச்சல்களும் ஏற்படுவதும் அந்த நிதி நிலை பற்றிய அறிக்கைதான். வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் இந்த பொருளாதார விஷயம் நல்லவரகளையும் சந்தேகிக்க வழி வகுத்துவிடுகிறது.
''மயிரூடாடா நட்பு பொருளூடாட கெடும்'' என்பார்கள் பணம் எங்கே குவிந்து காணப் படுகிறதோ, அது இறை இல்லங்களானாலும் சரி அநாதை இல்லங்களானாலும் சரி மத்ரஸாக்கலானாலும் சரி வக்ப் சொத்துக்களானாலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களானாலும் சரி அங்கெல்லாம் இந்த குளறுபடிகள் இருக்கவே செய்கிறது அது தவிர்க்க முடியாத ஒரு முஸீபத்தாக இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது வேதனைக்குரிய விஷயம். எனவே அவசர நிலை நிதி என்று ஒன்று தேவை இல்லை, கையில் பணம் குவிந்துருப்பது சரியல்ல என்று இந்த மன்றம் முடிவு செய்திருப்பதை மனதார வரவேற்கிறேன் .
நான் தம்மாம் காயல் நல மன்ற செயலாளராக இருந்த காலத்திலும் ரியாத் காயல் அலையன்ஸ் கமிட்டி துணை தலைவராக பணியாற்றியபோதும் இந்த கருத்துக்களை முன்மொழிந்து அது ஏற்றுக் கொள்ளப் பட்டு நடை முறை படுத்தப் பட்டது. அவ்வப்போது அந்த நிதிகள் செலவழிக்க பட்டால் கேள்வி கேட்பவர்களும் குறைவார்கள் மன்ற பொருளாளருக்கும் பொறுப்புக்கள் குறைந்து நிம்மதியாக இருக்கலாம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் காலம் கனிந்து இப்போது ஓட்டு எண்ணுபவருக்கே பணம் கொடுக்கும் காலமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த கால கட்டத்தில் இந்த அமைப்பு மிக சிறப்பாக வெளிப்படை தன்மையுடன் தன் பொது நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்போது நமது காயல்பட்டணம் மண்ணிலும் வெள்ளம் தண்ணீர் என்று மக்கள் அவதி பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய பேரவை மூலம் அதற்கான குழு நியமிக்கப் பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உங்கள் கருணை பார்வையை நமது ஊரின் பக்கமும் கொஞ்சம் திருப்புங்கள். கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் அங்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவும்.
நீங்கள் செய்வீர்களா..நீங்கள் செய்வீர்களா......
இந்த குரல் மூன்று ஆண்டுகளுக்கு முன் நமது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மக்களிடம் கேட்ட கேள்விகள்...இப்போது அவர்கள் மறைவுதினமான இன்றும் நினைவுக்கு வருகிறது. அவை வைர வரிகள் மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்ட வரிகள்..
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2019: காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் 6 வார்டுகளில் போட்டியிடும்! நகர பொதுக்குழுவில் மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...எரிமலையா சிலந்தி வலையா posted bymackie noohuthambi (kayalpatnam)[04 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46451
நல்ல முடிவு.
உன் உயரத்தை காட்ட வேண்டும் என்பதற்காக என் தோளில் ஏறி நிற்கிறாய்...கொஞ்சம் இறங்கி விடு எனக்கு வலிக்கிறது என்று ஒரு புது கவிதை சொல்கிறது.
திமுக அதிமுக மாறி மாறி நமது தோள்களில் ஏறி அவர்கள் உயரத்தை காட்ட நமது தோள்கள் பயன்பட்டது போதும் சென்ற உள்ளாட்சி தேர்தலில் ஜமாத்துக்களுக்காக வழி விட்டு அந்த தோல்வியும் நமக்கு தலைவலியாகவே போய் முடிந்து விட்டது.
இப்போதாவது நமது வலிமை என்ன நாம் பெற்றிருக்கும் ஏணியின் உயரம் என்ன அதன் உறுதி என்ன என்று தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம். கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் சில தோல்விகளை ஜீரணித்துக் கொள்ள வேண்டிய நேரம். காவிக் கட்சிகள் இணைந்து நின்று வெற்றி பெற்றது ஆட்சியில் பங்கு கேட்டபோது பல அசிங்கங்கள் இரவு நேர ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று நமது அரசியலமைப்பின் 70 வருட கொண்டாட்டத்தின்போது அவை அரங்கேறியது எல்லாமே நமது முஸ்லீம் லீக் பெரியவர்களின் கவனத்துக்கு வந்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
ஆனால் இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தோற்றாலும் வென்றாலும் நமக்கு பெருமைதான். முயற்சித்து பாருங்கள். வாழ்த்துக்கள்.
தன்னலமற்ற இக்லாஸான மக்களுக்கு சேவை செய்வதற்காகவே களம் இறங்கும் வேட்பாளர்களை அடையாளம் காண்பது ஒரு கஷ்டமான வேலைதான் .அல்லாஹ் அடையாளம் காட்ட போதுமானவன்.
நீ எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்.
நீ விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும் .
Re:...முதலமைச்சரே இன்று கூட்டத்தை கூட்டுகிறார் posted bymackie noohuthambi (kayalpatnam)[02 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46450
மகிழ்ச்சி தரும் செய்தி.
இன்றுதான் முதலமைச்சரே இது பற்றி தலைமை செயலகத்தில் கூட்டம் கூடி விவாதிக்கிறார். இது பற்றி நேற்றே கூட்டம் கூடி குழு அமைத்திருக்கும் ஐக்கிய பேரவையின் துரித நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள்.
நமதூரில் வெள்ளம் வந்தால்தான் பாதிக்கப் படுவோம் என்றில்லை சாதாரண நேரத்தில் கூட தெருக்களில் நடமாட முடியவில்லை தெருக்கள் குண்டும் குழியுமாக இருப்பதால் வயதானவர்கள் நடந்து செல்ல முடியவில்லை. நாய்கள் மாடுகள் தொல்லையால் குழந்தைகள் நடமாட முடியவில்லை. இந்த தொடர் நிகழ்வுகளுக்கும் ஒரு முடிவு விடிவு ஏற்பட இந்த குழுவே ஆவண செய்யுங்கள்.ஒவ்வொரு விஷயத்துக்கும் தனித்தனியாக குழு அமைத்தால் அது நமது அரசாங்கம் அமைக்கும் கமிஷன்கள் போல் ஆகி விடும்.அந்த குழுவின் பயணங்களுக்கு ஈடுபாடுகளுக்கு நிதி ஒதுக்குவதும் சிரமமாகி விடும்.
உங்கள் பொது நல சேவைகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்.
செய்தி: சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) கலந்தாலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அழகிய முன்மாதிரி posted bymackie noohuthambi (kayalpatnam)[02 December 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46449
இந்த இணையதளத்தின் பதிவுகளை காலையில் முதல்வேலையாக பார்த்து எனது கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளேன். துரதிர்ஷ்ட வசமாக சிலகாலங்களாக இந்த இணையதளத்தின் பதிவுகள் பல மாதக் கணக்கில் செயல்படாது இருந்தது. எனவே என்னைப் போன்றவர்கள் ஒரே ஒரு இணையதளமும் செயலிழந்து விட்டதே என்று வருத்தப் பட்டு சம்பந்தப் பட்டவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு வேளை பளு அதிகம் என்று சொல்லிவிட்டார்கள். நாம் என்ன சம்பளம் கொடுத்தா அவர்களை வேலைக்கு வைத்திருக்கிறோம் ஏதோ புண்ணியத்துக்காக செய்கிறார்கள் அதை நாம் அதிகம் கேட்க முடியாது என்று விட்டு விட்டேன்.
இன்று தற்செயலாக மழை வெள்ளம் பற்றி நடுநிசியில் நடந்தேறும் நமது நாட்டின் அரசியல் விபத்துக்கள் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்று பார்த்த போது இந்த செய்தியை படித்தேன்.
இளைஞர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன் என்ற பெருமை எனக்குண்டு. அதன் முதல் செயலாளர் நான்தான் என்பதை இளைஞர் ஐக்கிய முன்னணியின் குறிப்புக்கள் சொல்லும். நாங்கள் அதை ஆரம்பித்தபோதே இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தபோதுதான். எனவே சட்டென்று அந்த நாள் நினைவுக்கு வந்தது.
இந்த மாதிரி விஷயங்களில் அது முடிவெடுப்பதில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் முன்னோடியாக இருந்து வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உலமாக்கள் கூடி நல்ல முடிவுகள் மேற்கொண்டிருக்கிறார்கள் வாடகைக்கு ஆள் வைப்பவர்களும் இதை நன்கு கவனித்து ஜமாஅத்துடன் ஒத்துழைக்க வேண்டும். கூடுதலாக வாடகை தருகிறார்கள் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் வைக்கலாம் என்றால் காலப் போக்கில் சமூக விரோதிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் . அதே வேளை இந்த விஷயத்தில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் அவர்கள் பக்கத்துக்கு வீட்டுக் காரர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்களா என்பதையும் ஆராய்ந்து ஆவண செய்யுங்கள். வாடகைக்கு அமர்த்தியவர்களிடமும் இது பற்றி கேட்டறிந்து தீர்ப்பு வழங்குவது நல்லது.
எது எவ்வாறாயினும் முஹல்லாவில் இப்படி ஒரு சம்பவம் நடக்க அதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுபவர்களுடன் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கட்டாயக் கடமை ஒரு தலைமைக்கு கட்டுப் பட்டு நடப்பது இஸ்லாத்தில் வலியுறுத்தி கூறப்படும் ஒரு சுன்னத்தும் கூட.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த அழகிய முன்மாதிரியை எல்லா முஹல்லாவிலும் செயல்படுத்த தௌபீக் செய்வானாக ஆமீன்.
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனீக்கு வரவேற்பு! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynizam (india)[15 July 2019] IP: 46.*.*.* Oman | Comment Reference Number: 46440
நவாஸ் கனி அவர்கள் தான் கடுமையான மதவெறி பிரச்சாரத்துக்கிடையே எப்படி ஜெயித்தேன் என்பதை தி மு க வெற்றிவிழா கூட்டத்தில் பேசியதை கேட்டு நெகிழ்ந்தேன்
என்னை கேட்டால் ஒட்டுமொத்த 20 கோடி முஸ்லிம்களின் ஒரே முஸ்லீம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இவர்தான் தற்போது இந்தியாவின் கோலத்தை மாற்ற துடிக்கும் சங்க பரிவார்களின் திட்டங்களான முத்தலாக் காஸ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை நீக்குவது பசு வன்முறை பொது இடஒதுக்கீடு போன்றவற்றை பற்றி பாராளுமன்றத்தில் தைரியமாக மோடியின் காதில் உரைக்கும் வண்ணம் பேசவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross