கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஓரம்சமாக, ஏப்ரல் 05ஆம் நாள் முதல் காயல்பட்டினத்தில் மளிகைக் கடைகளில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று பொருட்களை வாங்கத் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் அறிவித்திருந்தது.
இது அரசு உத்தரவை மீறிய செயல் என்றும், பொதுமக்கள் தமது எதிர்ப்பை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்திடுமாறும் காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
கொரோனா வைரஸ் தாக்கத்தினை எதிர்கொள்ள - உலகெங்கும் பல்வேறு நாடுகள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில், ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் - அத்தியாவசிய பொருட்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை - கடைகளில், சமூக இடைவெளி பேணப்பட்டு - பெறலாம் என தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இருப்பினும் - காயல்பட்டினத்தில், கடந்த சில தினங்களாக, கொரானா பாதிப்பு உள்ள எந்த ஊரிலும் இல்லாத சில நடவடிக்கைகளை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்து வருகிறது.
துவக்கமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவந்த காய்கறி கடைகள் மூடப்பட்டன; பிறகு - பேருந்து நிலைய வளாகத்தில் மட்டும் காய்கறி கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 3 இடங்களில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவும் மூடப்பட்டு, லோட் வண்டிகளில் காய்கறிகள் விற்கப்படும் என பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய. சாத்தியமற்ற ஒரு அறிவிப்பினை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க, தற்போது - நகரின் மளிகை கடைகள் இயங்காது, பொது மக்கள் - 5 தொலைபேசி எண்களில் ஒன்றினை அழைத்து, பொருட்களை கேட்கவேண்டும் என்றும், வீடுகளுக்கு நேரடியாக தரப்படும் என - 12.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 50,000 மக்கள் தொகை கொண்ட ஒரு ஊருக்கு தீர்வாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு - நகரின், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சிரமங்களை முற்றிலும் அறியாமல் - வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.
நாடு முழுவதும், மாநிலம் முழுவதும் - அனைவருக்கும் பொருந்தக்கூடிய, அறிவிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் - காயல்பட்டினம் மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அவசியமற்ற கெடுபிடிகள் பொது மக்களை வெகுவாக பாதிக்கிறது. இந்த கெடுபிடுகளை விலக்கிக்கொள்ள வேண்டி, கீழ்க்காணும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கலாம். மாதிரி வாசகமும் வருமாறு:-
(1) மாவட்ட ஆட்சியர் +91 94441 86000
(2) CALL YOUR COLLECTOR +91 8680 800 900
(3) கோட்டாட்சியர் (RDO) +91 94450 00480
(4) வட்டாச்சியர் (TAHSILDAR) +91 94450 00682
(5) நகராட்சி ஆணையர் +91 95971 92807
(6) HELLO KAYAL +91 75989 50800
மாதிரி வாசகம்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளப்படி - காயல்பட்டினத்தில், காலை 6 மணி முதல், மதியம் 1 மணி வரை, அனைத்து காய்கறி, மளிகை கடைகளும், சமூக இடைவெளி பேணுதலுடன் இயங்கிட தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவேண்டும்.
We request the Thoothukudi District Authority to allow opening of grocery shops, vegetable shops in Kayalpattinam Municipality as per the direction of Honourable Chief Minister of Tamil Nadu Thiru Edappadi Palanisamy
இந்த வாசகத்தையோ, இந்த பொருள்கொண்ட வாசகத்தையோ - பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |