ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ நகரில் பணியாற்றி வந்த – காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த என்.எம்.தமீமுல் அன்ஸாரீ, 01.04.2020. புதன்கிழமையன்று 16.00 மணியளவில், அபூதபீயில் காலமானார். அவருக்கு வயது 52. அன்னார்,
பீ.நூர் முஹம்மத் என்பவரது மகனும்,
மர்ஹூம் இசட்.ஏ.மஹ்பூப் சுல்தான் அவர்களது மருமகனாரும்,
மர்ஹூம் எம்.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன் (பஹ்ரைன்) அவர்களின் பேரனும்,
டீ.ஏ.முஹம்மத் மர்வான், டீ.ஏ.மஹ்பூப் மாஸான் ஆகியோரின் தந்தையும்,
என்.எம்.ஹாஜா முஹ்யித்தீன், என்.எம்.ஜெய்னுல் ஆப்தீன் (தல்லப்பா), என்.எம்.ஜமீல் சுல்தான், ஹாஃபிழ் என்.எம்.ஃபரீத் மன்ஸூர் ஆகியோரின் சகோதரரும்,
எம்.எஸ்.அல்மஹ்மூத் என்பவரது சகோதரியின் கணவரும்,
இசட்.ஏ.மஹ்பூப் சுல்தான், இசட்.ஏ.ஜன்னத் ஹுஸைன், இசட்.ஏ.அப்துல் அஜீஸ் ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, அபூதபீயில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|