கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகவென இந்தியா முழுக்கவும் இம்மாதம் 14ஆம் நாள் வரை தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடு முழுக்கவும் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தாம் அன்றாடம் கடை நடத்தி அல்லது சிறு – குறு வணிகம் செய்து அல்லது கூலி வேலை செய்துதான் பொருளீட்டிக் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்ற நிலையிலுள்ள – காயல்பட்டினத்தில் வசிக்கும் அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் அன்றாடங்காய்ச்சிக் குடும்பங்களுக்கு, அனைத்துலக காயல் நல மன்றங்கள் & நகர மக்களின் பொருளாதார ஒத்துழைப்பைப் பெற்று, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ₹ 60 லட்சம் ரூபாய் செலவில் சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
ஐக்கியப் பேரவை நிர்வாகிகளுடன், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் இணைந்து சமையல் பொருட்களை முறைப்படி பொதியிட்டு, பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
|