சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலப் பணிகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 76-வது செயற்குழு கூட்டம் கடந்த 14/02/2020 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் மன்றத்தின் தணிக்கையாளர் சகோதரர் P.M.S. முஹம்மது லெப்பை அவர்கள் இல்லத்தில், மன்றத்தின் தலைவர் சகோதரர் S.A.T. கூஸ் அபூபக்கர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, ஹாஃபிழ் A.H. சதக் ஷமீல் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் T.A.M. இப்ராஹீம் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்தைத் தலைமையேற்று நடாத்தித் தந்த சகோதரர் S.A.T. கூஸ் அபூபக்கர் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் அகமகிழ்வோடு வரவேற்றுப் பேசினார். மேலும் புதிய நிர்வாகக்குழுவை வரவேற்று பேசியதோடு, அனைவரின் பொறுப்பும் நோக்கமும் ஊர் மக்களின் பொதுநலன் காப்பது குறித்த விழிப்போடும், அதை ஒட்டிய செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.
இம்மன்றத்தின் ஒழுங்கமைப்புச் சட்டத்தை (Bylaw), ஹாஃபிழ் P.S.J. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள், நமது புதிய செயற்குழு உறுப்பினர்களும் அறிந்து கொள்ள ஏதுவாக, முறையாக வாசித்து தெளிவுபடுத்தினார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகரிலிருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கப்பட்டது.
மேலும் 2020-2021 ம் ஆண்டிற்கான இம்மன்றத்தின் செயல்பாடுகளை கீழ்கண்ட பணிகளோடு உயர் மட்ட குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
மருத்துவ கடித Filtration group:
ஊரில் இருந்து வரும் விண்ணப்பங்களை முறையாக அதில் குறிப்பிட்டுள்ள உடல் நலக்குறைவு (நோய்), காலநிலை, தேவையான தொகை இவைகளை அனுசரித்து, சகோதரர் Y.A.S. ஹபீப் முஹம்மது முஹ்சின், சகோதரர் M.N. முஹம்மது ஹசன், சகோதரர் S.M. மீரா சாஹிப் நயீமுல்லாஹ், ஹாஃபிழ் P.S.J. ஜெய்னுல் ஆப்தீன், சகோதரர் M.M.S. ஷெய்கு அப்துல் காதர் சூஃபி, சகோதரர் S.B. முஹம்மது முஹ்யித்தீன், சகோதரர் K.S.H. உமர் அப்துல் காதர் மற்றும் ஹாஃபிழ் A.H. சதக் ஷமீல் ஆகியோர்கள் அதற்க்கான பிரித்தெடுக்கும் பணியில் செயல்படுவார்கள்.
RFPP:
இம் மன்றத்தின் சார்பில் கடந்த எட்டு வருடங்களாக புனித ரமழான் மாதத்தில் நம் ஊரில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் (Ramadan Food Pack Program) சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்ஷா அல்லாஹ்... நடப்பாண்டில் 2020 ரமழான் நோன்பை முன்னிட்டு ரியாத் காயல் நல மன்றம் சார்பில் ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களும், பெருநாள் அன்று இவர்கள் அனைவருக்கும் நாட்டு கோழி ஓன்றும் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் ஒருங்கிணைப்பாளர்களாக சகோதரர் Y.A.S. ஹபீப் முஹம்மது முஹ்சின், சகோதரர் M.N. முஹம்மது ஹசன், சகோதரர் K.S. செய்யத் ஷஃபியுல்லாஹ் மற்றும் சகோதரர் M.M. செய்யத் இப்ராஹீம் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இக்ராஃ:
ஊரில் இருந்து செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த அமைப்பிற்க்கான தேவைகள், தொடர்புகளை சகோதரர் P.M.S. முஹம்மது லெப்பை மற்றும் சகோதரர் S.A.T. கூஸ் அபூபக்கர் ஆகியோர்கள் ஒருங்கிணைத்துக்கொள்வார்கள்
Kayal Schools Welfare Projects:
உள்ளூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects மூலம் கடந்த காலங்களில் பல நல உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சகோதரர் S.A.T. கூஸ் அபூபக்கர், சகோதரர் P.M.S. முஹம்மது லெப்பை, ஹாஃபிழ் M.A. ஷெய்கு தாவூத் இத்ரீஸ், சகோதரர் Y.A.S. ஹபீப் முஹம்மது முஹ்சின் மற்றும் சகோதரர் A.R. முஹம்மது இப்ராஹீம் ஃபைசல் ஆகியோர்கள் செயல்படுவார்கள். இந்த பணியின் முக்கியத்துவம் கருதி இந்த அமர்விலேயே அதற்க்கான ஒரு தொகையை ஒதுக்கப்பட்டது.
ஷிஃபா (Shifa):
ஊரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அமைப்பிற்க்கான தேவைகள், தொடர்புகளை சகோதரர் A.H. முஹம்மத் நூஹு, சகோதரர் S.H. ஹைதர் அலி, சகோதரர் N.M. நோனா செய்யது இஸ்மாயில் மற்றும் சகோதரர் M.M. அபூபக்கர் சித்தீக் ஆகியோர்கள் ஒருங்கிணைத்துக்கொள்வார்கள்.
ஊடகத்துறை (Media Team):
நம் மன்றத்தின் செயற்குழு, பொதுக்குழு ஒன்றிணைப்பு நிகழ்வின் சாராம்சங்கள் மற்றும் பொது அறிவிப்புகளை முன்னெடுத்து செல்லும் பணியில் சகோதரர் M.S. தைக்கா சாஹிப், சகோதரர் A.R. முஹம்மது இப்ராஹீம் ஃபைசல், ஹாஃபிழ் S.A.C அஹ்மது சாலிஹ், சகோதரர் M.M. அபூபக்கர் சித்தீக், ஹாஃபிழ் P.S.J. ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் சகோதரர் A. நெய்னா முஹம்மது ஆகியோர்கள் செயல்படுவார்கள்.
இந்த Media Team மூலமாக சகோதரர் M.S. தைக்கா சாஹிப் அவர்களின் அறும்பணியில் இம் மன்றத்தின் செயலாளர் ஹாஃபிழ் S.A.C அஹ்மது சாலிஹ் அவர்களின் ஆலோசனையில் இவ்வருடத்திற்க்கான அழகிய நாள் காட்டி RKWA-Calendar 2020-2021 தயார் செய்யப்பட்டு இன்றைய நிகழ்வில் அதை வெளியிடப்பட்டது.
கல்வி வழிகாட்டி திட்டம்:
இந்த திட்டத்தின் கீழ் சகோதரர் S.A. சித்தீக், சகோதரர் S.L. சதக்கத்துல்லாஹ், சகோதரர் M.M.S. ஷெய்கு அப்துல் காதர் சூஃபி மற்றும் சகோதரர் M.M. மீரா சாஹிப் ஆகியோர்கள் செயல்படுவார்கள்.
இன்றைய நிகழ்வுக்கு மேற்பார்வையாளராக வந்து சிறப்பித்து தந்த சகோதரர் H.A. உமர் ஃபாரூக் ஃபாஸி, சகோதரர் M.S. ஃபைசல் அஹ்மத் மற்றும் சகோதரர் A.H. ஷகீல் ஆகியோர் இம்மன்றத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டியதோடு மென்மேலும் வெற்றியடைய இறைவனிடம் வேண்டுவதாகவும் கூறினார்கள்.
சிறப்பு அழைப்பாளர் ஹாஃபிழ் S.K. ஸாலிஹ் அவர்களின் உரை:
சிறப்பு அழைப்பாளராக புனித பயணமாக மக்காவிற்கு உம்ரா வந்திருந்த சகோதரர் ஹாஃபிழ் S.K. ஸாலிஹ் அவர்கள், இம்மன்றத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்து நம்மிடையே சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், மன்றத்தின் இதுநாள் வரையிலான செயல்பாடுகளைப் பாராட்டியதோடு, உடல் நலன் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி முறையில் பேண வேண்டிய நடைமுறைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார். மேலும் ஊரில் மாடி தோட்ட திட்டம், நோய் வருமுன் காப்போம் போன்ற நல்ல பயனுள்ள செயல்பாடுகளில் ஈடுபடுமாறும் வலியுறுத்தினார்.
இக்கூட்டம் நடத்த சகோதரர் P.M.S. முஹம்மது லெப்பை அவர்கள் இடம் வழங்கினார். ஹாஃபிழ் S.A.C அஹ்மது சாலிஹ், சகோதரர் A.R. முஹம்மது இப்ராஹீம் ஃபைசல், சகோதரர் S. வாவூ கிதுர், சகோதரர் S.L. சதக்கத்துல்லாஹ் மற்றும் சகோதரர் A. நெய்னா முஹம்மது ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து (காயல் களரி ஸ்பெஷல்), மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி (காயல் மஞ்ச வாடாவுடன் கூடிய தேநீர்) வழங்கப்பட்டது.
சகோதரர் M.E.L. நுஸ்கி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர் அனைவருக்கும் நன்றி நவின்றார்கள்.
RKWA-வின் நமது ஊர் பிரதிநிதி சகோதரர் A. தர்வேஷ் முஹம்மது அவர்களின் அயராத தொடர் சேவையையும் ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்து, நன்றி கூறப்பட்டது.
இறுதியாக, ஹாஃபிழ் P.S.J. ஜெய்னுல் ஆப்தீன் துஆவோடு இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|