காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா அரசிடம் முறையிட்டதன் எதிரொலியாக, காயல்பட்டினம் நகராட்சியில் முறைகேடாக நடத்தப்பட்ட ஏலம் குறித்து மறு ஆய்வு செய்ய உள்ளாட்சி தணிக்கைத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் டிசம்பர் 31, 2019 அன்று கீழ்க்காணும் விஷயங்களுக்கு ஏலம் விட்டதாக தெரிகிறது.
// புதிய பேருந்து நிலையம் பயணிகள் நிழற்குடை பின்புறம் காலியிடம் தரவாடகை
// அம்மா உணவகம் வடபுறம் தரவாடகை
// ஆடு, மாடு அறுவைக்கூடம் வசூல் உரிமம்
// பேருந்து நிலைய பேருந்து நுழைவு கட்டணம் வசூல் உரிமம்
// பேருந்து நிலைய உள்கடை எண் 12
// தினசரி சந்தை
இது குறித்து முறையான தகவல் - பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை.
நகரில் விற்பனைக்கு இல்லாத ஒரு நாளிதழான மக்கள் குரல் நாளிதழில் - 11.12.2019 அன்று - இது குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் - விருப்பம் உள்ள அனைவருக்கும் இந்த செய்தி சென்றடையவில்லை.
சுய லாப நோக்கில், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் நகராட்சி அதிகாரிகள் - இது குறித்த தகவலை வழங்கி, ஏலம் நடத்தியுள்ளார்கள்.
கடந்த காலங்களில் - இது போன்ற விஷயங்களில், பொது மக்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என துண்டு பிரசுரம், நகரின் ஏனைய அரசு அலுவலகங்களில் அறிக்கை ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் - இது குறித்து The Tamil Nadu Panchayats (Procedure for Conducting Public Auction of Leases and Sales in Panchayats) Rules, 2001 தெரிவிக்கும் விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.
நடத்தப்பட்ட ஏலம் சட்டத்திற்கு விரோதமானது என்பதால், அதனை உடனடியாக ரத்து செய்து, முறையாக மீண்டும் அனைவரும் அறிந்திடும் வகையில் அறிவிப்பு வெளியிட்டு - மறு ஏலம் நடத்திட உத்தரிட கோரி - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர், சென்னை, ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம், நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர், திருநெல்வேலி, இயக்குனர், உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை. ஆணையர், காயல்பட்டினம் நகராட்சி ஆகியோருக்கு கடந்த மாதம் புகார் தெரிவிக்கப்பட்டது.
அந்த புகார் மீது தற்போது நடவடிக்கை எடுத்துள்ள - உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குனர் திரு பொ.வேல்சாமி, இது சம்பந்தமாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்திட - உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி இயக்குனர் (தூத்துக்குடி) அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|