அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதுப்பித்தல் என்பது கிடையாது என - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக - தமிழக அரசின் காப்பீட்டு திட்டம் பெற்றுள்ள நபர்கள், வீரபாண்டியபட்டினத்தில் உள்ள சேவை மையத்தில் அதனை புதுப்பிக்கப்பவேண்டும் என்ற தகவல் பரவி வருகிறது.
இதன் உண்மை தன்மை குறித்து பலர் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) நிர்வாகிகளிடம் வினவி வருகிறார்கள்.
இது குறித்து - தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலரிடம் மெகா அமைப்பு வினவியது. அதற்கு பதில் வழங்கிய திட்ட அலுவலர், புதுப்பிக்கும் முறை நடைமுறையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
எனவே - காப்பீட்டு திட்ட பதிவினை புதுப்பிக்கவேண்டும் என்ற தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross