ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு நிஸ்ஃபு ஷஃபான் (ஷஃபானில் பாதி) என்று அழைக்கப்படும். ‘ஷபே பராஅத்’, ‘பராஅத் இரவு’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் இந்நாள் இரவில், நீண்ட ஆயுளை வேண்டியும், தீவினைகளிலிருந்து பாதுகாப்பு வேண்டியும், படைத்தவனைத் தவிர்த்து படைப்பினங்களின் உதவிகளிலிருந்து தேவைற்றிருக்கச் செய்திடக் கோரியும் திருமறை குர்ஆனின் யாஸீன் அத்தியாயத்தை 3 முறை ஓதி, பிரார்த்திப்பது வழமையாக இருந்து வருகிறது.
இவ்வாண்டும் பராஅத் இரவு 09.04.2020. வியாழக்கிழமையன்று பின்னிரவில் கடைப்பிடிக்கப்படும் என மார்க்க அறிஞர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆண்டுதோறும் இதன்போது நகர பள்ளிவாசல்களிலும், இல்லங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை. நிகழாண்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், பள்ளிவாசல்கள் உட்பட எந்தப் பொது இடங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
எனினும், அவரவர் இல்லங்களில் குடும்ப அங்கத்தினர் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு அமர்ந்து, சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
|