கடந்த மாதம் டில்லி – நிஜாமுத்தீன் பகுதியிலுள்ள தப்லீக் தலைமை மர்கஸில் நடைபெற்ற இஜ்திமா – ஒன்றுகூடலில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, பரிசோதனைக்குப் பின் அரசு தெரிவித்துள்ளது.
காயல்பட்டினத்திலிருந்து அங்கு சென்று வந்த சிலரும், அவர்களுடன் தொடர்பிலிருந்த சிலரும் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் – அம்பல மரைக்காயர் தெருவைச் சேர்ந்த டாக்டர் ஃபாஸீயும் அவர்களுள் ஒருவர்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிவிட்டதால், அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் 25ஆம் நாள் முதல் ஏப்ரல் 01ஆம் நாள் வரை அரசு மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வருமாறு:-
இதனையடுத்து, நகரில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|