கடந்த மாதம் டில்லி – நிஜாமுத்தீன் பகுதியிலுள்ள தப்லீக் தலைமை மர்கஸில் நடைபெற்ற இஜ்திமா – ஒன்றுகூடலில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, பரிசோதனைக்குப் பின் அரசு தெரிவித்துள்ளது.
காயல்பட்டினத்திலிருந்து அங்கு சென்று வந்த சிலரும், அவர்களுடன் தொடர்பிலிருந்த சிலரும் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் – அம்பல மரைக்காயர் தெருவைச் சேர்ந்த டாக்டர் ஃபாஸீயும் அவர்களுள் ஒருவர்.
இதன் காரணமாக, அவர் பணியாற்றிய காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைப்பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, மருத்துவமனை வளாகம் முழுக்கவும் கிருமி நாசினிக் கலவை தெளிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் படி மூடவும் பட்டுள்ளது.
இன்றுடன் தொடர்ந்து 7ஆவது நாளாக மருத்துவமனை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|