காயல்பட்டினம் நகரிலுள்ள மத்ரஸாக்களில் திருக்குர்ஆன் மனனம் பயின்று, ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டிறுதித் தேர்வில் முதலிடம் பெறும் ஒரு மாணவர் / மாணவிக்கு, ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் மன்றத்தின் 76 வது செயற்குழு 06-03-2020 வெள்ளிக்கிழமை மாலை முகம்மது ரமீஜ் அவர்கள் இல்லத்தில் MS முகம்மது உமர் அவர்கள் தலைமையில் முத்து அஹ்மது ஆலிம் மஹ்ழரி அவர்கள் கிராத் உடன் துவங்கியது.
அன்று நடைபெற்ற 76 வது செயற்குழுவின் தீர்மானங்கள்:-
1) நம் மன்றம் சார்பாக கடந்த ஆண்டுகளைப் போல் இவ்வாண்டும் பொதுக்குழு இப்தார் நிகழ்வோடு இன்ஷா அல்லாஹ் வருகிற மே மாதம் 7ம் தேதி வியாழன் அன்று சிறப்பாக செய்திட கமிட்டி அமைக்கப்பட்டது.
2) அபூதபீ மன்றத்தின் சார்பாக ரமழான் சமையல் பொருட்கள் கடந்த ஆண்டுகளைப் போல் இவ்வாண்டும் வழங்க முடிவு செய்து அதற்கான அனுசரணை வழங்கிட விருப்பமுள்ள உறுப்பினர்கள் எத்தனை நபர்கள் என்பதையும் அதன் பயனாளிகளின் விவரங்களையும் KMN ஷம்சுதீன், அப்துல் ஜப்பார் மற்றும் மக்பூல் அஹ்மது ஆகிய ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரைத் தொடர்பு கொண்டு ஒப்படைக்க கூட்டத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
3) இமாம் மற்றும் முஅத்தின் ஊக்கத்தொகை வழங்கிடும் திட்டத்தை இவ்வாண்டும் செயல் படித்திட மன்றத்தலைவர் மக்பூல் அஹ்மது அவர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்கள்
4) ஊரில் ஹாபிழ்களை (ஆண் / பெண்) ஊக்குவிக்கும் முகமாக அனைத்து மதரஸாவிலும் பயின்று முதன்மை பெறும் ஒரு மாணவ/மாணவி ஹாபிழ்களுக்கு ஆண்டு தோறும் ஊக்கப்பரிசாக Rs.3000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
6) மைக்ரோ காயல் திட்டதில் அதன் மருத்துவ கார்டு உதவினை பெறுவதற்கான பயனாளிகள் Dr.செய்து அஹ்மது அவர்களை உறுப்பினர்கள் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது
7) அன்மையில் டெல்லியில் நடந்த கலவரத்தில் தம் உடமைகளை இழந்து நிற்கதியாய் நிற்கும் மக்களின் நிலையறிந்து அவர்களுக்கு உதவிட அய்மான் மற்றும் ஜமாத்துல் உலமா கூட்டு முயற்சிக்கு நம் மன்ற உறுப்பினர்களின் சார்பாக உதவிகளை வழங்கிட முடிவு செய்து விருப்பமுள்ள உறுப்பினர்கள் மன்ற உறுப்பினர் முகைதீன் அவர்களிடம் உதவிகளை கொடுத்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
8) நம் மன்றத்தில் துணைத்தலைவராக இருந்து வந்த SAC ஹமீது அவர்கள் தாயகம் சென்றுவிட்டதால் நம் மன்ற உறுப்பினர் A.R.ரிபாயி அவர்கள் துணைத்தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டதாக இக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவு் செய்யப்பட்டது.
இறுதியாக ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி துஆ ஓத கஃப்பாராவுடன் இனிதே நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாஈ (துணைத் தலைவர்) |