கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஓரம்சமாக, ஏப்ரல் 05ஆம் நாள் முதல் காயல்பட்டினத்தில் மளிகைக் கடைகளில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று பொருட்களை வாங்கத் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் அறிவித்துள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் அறிக்கை:-
காயல்பட்டணம் நகர பொதுமக்களுக்கு ஐக்கியப் பேரவையின் முக்கிய அறிவிப்பு
இன்ஷா அல்லாஹ் நாளை 05.04.2020 ஞாயிற்றுக்கிழமை முதல் மளிகைக் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க தடைசெய்யப்பட்டுள்ளது.
அன்றாட மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக பிரத்தியேகமாக ஐக்கியப் பேரவை மூலம் Call Center துவங்கப்பட்டுள்ளது.
Call Center தொடர்பு எண்கள்,
1. 9629806054
2. 8555808410
3. 9500836001
4. 8144679552
5. 9944368927
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மளிகைப் பொருள், பழங்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொண்டு ஆர்டர் செய்யலாம்.
குறைந்தபட்ச ஆர்டர் ரூபாய் 250 க்கு குறையாமல் இருக்க வேண்டும். உங்கள் இல்லங்களுக்கு நேரடியாக பொருட்கள் டெலிவரி செய்யப்படும். டெலிவரிக்கான கட்டணம் ரூபாய் 20 மட்டுமே.
புக்கிங் நேரம் மாலை 4 மணி முதல் 7 மணிவரை. டெலிவரி நேரம் காலை 9 மணி முதல் 12 மணி வரை.
உங்கள் மளிகைப் பொருள் தேவைகளை கால் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமும் பதிவு செய்யலாம்.
காய்கறிகள் குட்டியானை மூலம் ஒவ்வொரு தெருவிற்கும் வந்து நகராட்சி அனுமதியுடன் விற்பனை செய்வார்கள்.
பொதுமக்கள் அனைவர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி, வஸ்ஸலாம்.
இவண்,
நிர்வாகிகள்,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை,
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
|