கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் இம்மாதம் 14ஆம் நாள் வரை தொடர் ஊரடங்குக்கு நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வழமையாக நடைபெறும் நிகழ்ச்சிகளும், அவ்வப்போது நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்தியா முழுக்கவும் உள்ள பள்ளிவாசல்களில் அன்றாடம் ஐவேளைத் தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோல, இன்றுடன் மூன்றாவது வாரமாக நாடு முழுவதும் ஜும்ஆ தொழுகையும் நடைபெறவில்லை. மார்க்கம் அனுமதித்துள்ளதைக் கருத்திற்கொண்டு - ஜும்ஆ தொழுகையைத் தவிர்க்கவும், வீடுகளிலேயே ளுஹ்ர் தொழுகையைத் தொழுதுகொள்ளவும் காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு சிறிய – பெரிய குத்பா பள்ளிகளின் கத்தீப்கள் அறிவிப்புச் செய்துள்ளனர்.
|