இன்று இரவு ரமழான் தலைப்பிறை தென்பட்டால் தரப்பட்டுள்ள தொடர்பு எண்களுக்குத் தெரிவிக்குமாறும், அதனடிப்படையில் ரமழான் குறித்த அறிவிப்பு பள்ளிவாசல்கள் வழியாக வெளியிடப்படும் என்றும் காயல்பட்டினம் நகர ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வருமாறு:-
அன்புள்ள காயல்பட்டணம் பெருமக்களே! அல்லாஹ்வின் நல்லடியார்களே!
ஹிஜ்ரி 1441 ரமலான் முதல் பிறை விஷயமாக இன்ஷா அல்லாஹ் 24.04.2020. வெள்ளிக் கிழமை பின்னேரம் சனிக்கிழமை இரவு மஃரிபு தொழுகையோடு நமதூர் பெருமக்கள் தங்களது பகுதிகளிலிருந்து பிறை பார்ப்பதில் கவனம் செலுத்துமாறும் யாரேனும் பிறை பார்த்தால் கீழ்கண்ட உலமாக்களின் எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும், அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக உலமாக்கள் வழமைபோல் ஒன்றுகூடி பேசி அறிவிக்க முடியாத சூழலில், குறிப்பிட்ட சில உலமாக்கள் பிற உலமாக்களோடும் பிற பகுதிகளில் தொடர்பு கொண்டும் இன்ஷா அல்லாஹ் ரமலான் முதல் பிறை விஷயமாக பள்ளிவாசல்கள் மூலம் அறிவிப்பு செய்வார்கள் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறை பார்த்தால் தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள்
99942 06516,
98421 82780,
96776 27386,
98657 59092
எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் நம்மையும், நம் ஊரையும் ஆலத்து மக்களையும் கொடிய நோய் நொடிகளிலிருந்தும் அவனது கோபத்திலிருந்தும் பாதுகாத்து பிழை பொறுத்து கிருபை செய்து நமது வணக்க வழிபாடுகளை மஸ்ஜிதுகளில் முறையாக நிறைவேற்றிடவும் அருள்புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
தங்களன்புள்ள,
அபூமன்ஸூர் ஆலிம் மஹ்ழரி.
காயல்பட்டணம்.
22.04.2020.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
|