காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் நிறுவனரும், நகரின் அறியப்பட்ட வரலாற்று ஆய்வாளருமான முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் இன்று 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 81. அன்னார்,
மர்ஹூம் ருக்னுத்தீன் ஸாஹிப் அவர்களின் மகனும்,
ஆர்.எஸ்.அப்துல் காதிர், மர்ஹூம் ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப், மர்ஹூம் ஆர்.எஸ்.அப்துல் கய்யூம் ஆகியோரின் சகோதரரும்,
ஏ.எல்.அப்துர் ரஹ்மான், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் செயலாளர் ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன் காமில், ஏ.எல்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோரின் தந்தையும்,
மர்ஹூம் எம்.எல்.மூஸா நெய்னா அவர்களின் மச்சானும்,
காயல்பட்டினம் முன்னாள் தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தலைவர் மர்ஹூம் வி.எம்.எஸ்.லெப்பை அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.
அன்னாரி்ன் ஜனாஸா தொழுகை - இன்று 16.00 மணியளவில் காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியில் நடத்தப்பட்டு, பின்னர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நகரின் அனைத்துப் பள்ளிக்கூடங்களது நிர்வாகிகள், ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், வரலாற்றுத்துறையைச் சேர்ந்தவர்கள், அனைத்து ஜமாஅத்துகளின் நிர்வாகிகள் உட்பட திரளானோர் நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர்.
|