உலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் அதனடிப்படையில் முடிவெடுக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நோன்பு, பெருநாள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
22.05.2020. வெள்ளிக்கிழமையன்று 29 நோன்புகள் பூர்த்தியானதையடுத்து, அன்றிரவு ஷவ்வால் மாத (நோன்புப் பெருநாளுக்கான) தலைப்பிறை காணப்பட்ட தகவலுக்காகக் காத்திருந்த அவர்கள், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் அப்படித் தகவல் பெறப்படாததால், 23.05.2020. சனிக்கிழமையன்று 30ஆவது நோன்பைப் பூர்த்தி செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, 23.05.2020. சனிக்கிழமையன்று நேற்று இரவில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஒலிபெருக்கி வழியே பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில், ரமழான் 30 நோன்புகள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதால், 24.05.2020. ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் என தெரிவித்துள்ளனர்.
|