காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி (Administrative Officer)யும், ஊரறிந்த எழுத்தாளரும், சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் நிறுவனரும், அல்ஹிதாயா என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த மாத இதழின் ஆசிரியரும், காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலரும், சமூகப் பார்வையாளருமான – அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த ஏ. தர்வேஷ் முஹம்மத், இன்று 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 52. அன்னார்,
மர்ஹூம் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் மகனும்,
நஃபீக் இஸ்மாஈல் என்பவரது மருமகனாரும்,
அமீர் ஜான், அப்துல் கரீம், இஸ்மாஈல் ஆகியோரின் சகோதரரும்,
இக்ராஃ கல்விச் சங்க பெண்கள் தன்னார்வலர் குழு உறுப்பினர் ஆயிஷா என்பவரது கணவரும்,
இர்ஃபானா என்பவரது தந்தையும்,
ஃபைஸல், மூஸா ஆகியோரது சகோதரியின் கணவரும்,
தங்கத்தம்பி காதிர் ஸாஹிப் என்பவரது மருமகனும்,
காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஏ.கே. அபூ மன்ஸூர் மஹ்ழரீயின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.
அவரது ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சிறிய குத்பா பள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு, பின்னர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
|