காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் - தீவுத் தெருவைச் சேர்ந்த எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத் என்ற பாஸ், இன்று 18:15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 79. அன்னார்,
வேலூர் ஆலிம் என்ற மர்ஹூம் செ.யி.முஹம்மத் நூஹ் லெப்பை ஆலிம் அவர்களின் மகள் வழிப் பேரனும்,
மர்ஹூம் ஹாஃபிழ் ஏ.கே.ஷெய்க் அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மகனும்,
மர்ஹூம் ஹாஃபிழ் தை.மு.க.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஆலிம் பக்ரீ அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் எஸ்.இ.எம்.நூஹ் லெப்பை, மர்ஹூம் ஹாஃபிழ் எஸ்.இ.எம்.அஹ்மத் ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.ஜெஸீமுல் பக்ரீ ஆலிம் ஃபாஸீ ஆகியோரின் மச்சானும்,
எஸ்.எம்.உமர் அப்துல் காதிர் ஆலிம், ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் ஃபைஸல் ஆகியோரின் தந்தையும்,
எம்.என்.டீ.ஜமால் முஹம்மத் என்பவரது மாமனாரும்,
ஜே.எம்.நூஹுத் தம்பி, ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர், ஜே.எம்.முஹம்மத் மன்சூர் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை 16:00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|