Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:44:02 PM
வியாழன் | 17 ஆகஸ்ட் 2017 | துல்கைதா 25, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:2715:4218:3919:51
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:34
மறைவு18:33மறைவு14:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:21
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5519:2019:45
 (1) {17-8-2017} விளக்கு S.D.ஷெய்க் அப்துல் காதிர் ACCA., {S/o. அல்ஹாஜ் V.S.A.ஷெய்க் தாவூத், காயிதேமில்லத் நகர்} / A.M.T.கதீஜா B.Sc., {D/o. M.I.அஹ்மத் மீராத்தம்பி, காயிதேமில்லத் நகர்}
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous Article
ஆக்கம் எண் (ID #) 46
#KOTWART0246
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 24, 2017
சென்று வா காதலே! சென்று வா!!
இந்த பக்கம் 827 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}





***ஆனந்தம்***

பதினோறு மாதங்கள்
பரிதவிக்க விட்டுச் சென்று
பங்கங்கள் போக்கிடவே
பரிவோடு வந்தாயே

தாய் கண்ட சிசுவே போல்
மழை கண்ட பயிரே போல்
மனமகிழ்ந்து நின்றேனே
கவி பாடி திளைத்தேனே

இறை தந்த அற்புதமே
இகம் தேடும் பொக்கிஷமே
இறையவனின் பெருவிருந்தாய்
இகமதனில் வந்தனையே

பாக்கியங்கள் சூழ்ந்த மாதம்
பாங்காக பாரினிலே
பாவங்கள் அழித்திடவே
பாசமுடன் வந்தாயே

இரஜபு திங்கள் மலர்ந்ததுமே
மாநபியும் தோழர்களும்
இதயமலர் பூத்துப் பொங்க
இன்பமுடன் வரவேற்பர்

***மாண்பு***

முப்பது நாட்களுமே
முழுதான மகத்துவங்கள்
முன்னோனின் அருள் சுமந்து
முனைப்புடனே வந்தாயே

முற்பத்தில் அருள் தனையும்
பிற்பத்தில் விடுதலையும்
நடுப்பத்தில் பிழை பொறுப்பும்
நயமாக தந்தாயே

முன் சென்ற வேதங்கள்
முறையாக உன் வழியே
முன்னவனும் அனுப்பியதால்
முக்தி நிலை அடைந்தாயே

கண்மணியாம் காஸிமவர்
தனியனுடன் ஹீராவில்
தனித்திருந்த பொழுதினிலே
கவின் மறையை கண்டாயே

நிகரில்லாப் பொது மறையாம்
நிமலோனின் குர்ஆனை
நின்னளவில் அருளியதால்
நிறைவுதனைக் கொண்டாயே

வறியவர்க்கும் எளியவர்க்கும்
வாரி வாரி வழங்கச் செய்தாய்
வான் மறையாம் புர்கானை
வாஞ்சையுடன் ஓதச் செய்தாய்

பத்து நூறு மாதங்கள்
இறைபணிந்த பெரு நன்மை
பவம் தீர்க்கும் ஓர் இரவில்
பரிசெனவே தந்தாயே

நரகங்கள் பூட்டுண்டு
சொர்க்கங்கள் திறந்தனவே
நலம் கெடுக்கும் இப்லீஸும்
சிறைப்பட்டுப் போனானே

***கருணை***

உன்னிரவுப் பொழுதுகளில்
உயர்வான பெரியோனும்
உவகையுடன் நெருங்கி வந்து
உரைத்திடுவான் மனு அளவில்

என்னிடத்தில் இரந்திடுவோர்
எவருமுண்டோ ஜகம் தனிலே
எப்பிழையும் நான் பொறுப்பேன்
என இரங்கி அருள்வானே



வணக்கங்கள் அத்துனைக்கும்
வல்லவனே கொடை அளிப்பான்
அருள் சூழ்ந்த நோன்பதற்கோ
அவன் தனையே தந்திடுவான்

நபியவர்கள் பகர்ந்தார்கள்
திடுக்கந் தரு மறுமையிலே
நன்மைகள் சூழ்ந்தொருவன்
நயமுடனே வருவானே

பாரினிலே பகை கொண்ட
பாதகத்தின் பலனாக
பாக்கியங்கள் இழந்திடுவான்
பாவங்கள் சுமந்திடுவான்

நோன்பதனின் கூலிகளும்
பறித்திடவே நேர்ந்திடுங்கால்
பரிவான இறையவனோ
பாங்காக மறுத்திடுவான்

***பாக்கியம்***

நோய் தீர்க்கும் சஞ்சீவி
நோன்பிருப்போர் மாண்புகளை
நறுமணங்கள் சூழ்ந்த நபி
நவிலுவதைக் கேட்டிடுவோம்

நோன்பதனை நிறைவேற்ற
நீர் உணவு புகட்டுபவர்க்கு
இறை அவனின் தடாகத்திலே
இறுதி வரை புகட்டிடுவான்

அடி பணியும் அமரரிடம்
அருளாளன் பகர்ந்திடுவான்
அடியாரின் பிழை யாவும்
அன்புடனே பொறுப்பேனென

உண்ணாமல் பருகாமல்
உறுதியுடன் இறையினுக்காய்
மண்ணில் நோன்பு பூண்டவர்க்கு
இன்பங்களோ இரண்டு என்றார்

இப்தாரின் பொழுதினிலே
இனிதான ஓரின்பம்
நிலையான ஓரிறையை
காண்பதுவே பேரின்பம்





சுவனத்து ரய்யானை
சுந்தரமாய் திறந்து வைப்பான்
சுடர் வீச சுவனத்திலே
சுபிட்சமுடன் வாழ்ந்திடுவர்

வான் படைத்த இறையிடமோ
வாய் வாடையும் நறுமணமே
கஸ்தூரியை விஞ்சிடுமே
கருணை நபி பகர்ந்தனரே

***ஏக்கம்***

ஆனந்தக் களிப்பினிலே
அகமெல்லாம் திளைத்திருந்தேன்
ஏனோ என் கண்மணியே
ஏங்க விட்டுப் போகின்றாய்

படபடத்தென் நெஞ்சமது
பல நூறாய் பிளப்பது போல்
பரி தவித்து நிற்கின்றேன்
பார்க்காமல் போகின்றாய்



நீ வந்த சுவடுகளே
நீங்கி இன்னும் போகலையே
நீசம் எமில் நீக்கிய பின்
நீதனிடம் போறாயோ

தழல் விழுந்த புழு போல
துடி துடிக்கும் காதலர்கள்
துயரத்தில் ஆழ்ந்திடவே
துய்யனிடம் போறாயோ

உன் பிரிவை ஏற்றிடவே
உவக்குதிலை என் மனமே
உம்மத்தை நீ பிரிந்து
உயர்ந்து இன்று போறாயோ

நேசர்களை கலங்க விட்டு
நேத்திரங்கள் நனைய விட்டு
நேர்மையான ரப்பிடமே
நேர்த்தியுடன் போறாயோ

மண் விட்டு சென்றி்டவே
மனம் வந்ததெப்படியோ
மன்னனிடம் மீண்டிடவே
மணமாக போறாயோ

போறாயோ ரமழானே
போறாயோ போறாயோ
பவக் கறைகள் நீக்கி இன்று
போறாயோ போறாயோ

இஃப்தாரின் நினைவலைகள்
இதமாக படர்கிறதே
இன்பமூட்டும் ஸஹ்ர் பொழுது
இதயமதை வாட்டிடுதே

தராவீஹ் வணக்கங்கள்
தந்த இன்பம் நிலைக்கிறதே
தனியோனின் திக்ரோசை
செவி மடலில் ஒலிக்கிறதே

கரை தெரியா கலம் போல
கதி கலங்கி நிற்கின்றேன்
கரை சேர வழி காட்ட
கனிவுடனே மீள்வாயோ

***முறையீடு***

என்னிதயத் துயரங்களை
எவரிடம் போய் முறையிடுவேன்
என்னிறையே! நல் மாதம்
எமை விட்டு போகிறதே

உயிரினிலே உறைகின்ற
உத்தமரே நாயகமே!
உம் பிரிய மாதம் எமின்
உளம் நோகப் போகிறதே

இருள் நீக்க மகியினிலே
இகபரனே தேர்ந்தெடுத்த
இகம் ஆளும் தூதர்களே!
இன்மாதம் போகிறதே

முகமலர முஸ்ஃதபாவை
முழுதாகக் கண்டோரே!
முழுமதியின் தோழர்களே!
முறைமாதம் போகிறதே

ஆதியிலே ஆழ்ந்திட்ட
அஹ்மதரின் நேசர்களே!
சோதியான திருமாதம்
சோகமாக்கி போகிறதே

***ஆதரவு***

சென்றமுறை கடந்த போது
ஏதேதோ வாக்களித்தேன்
ஒன்றுகூட நிறைவேற்றாப்
பாவியாகிப் போனேனே

நயனத்தில் கசிந்த துளிகள்
அன்றி நன்மை வேறில்லை
கருணையான ரஹ்மானே!
கரையேற்றி காப்பாயே

மீண்டும் உனைக் கண்டிடவே
மீளும்வரைக் காத்திருப்பேன்
மீண்டு நீயும் வந்திங்கே
மீட்சிதனை தருவாயோ



மருட்டும் அந்த மஹ்ஷரிலே
மறந்திடாதே பாவி எனை
மணமான வாழ்வு பெற
மன்றாடி இறைஞ்சிடுவாய்

ஆரம்பம் முடிவில்லா
ஆதி இறை பெரியோனே
ஆரோக்கிய வாழ்வுடனே
ஆயுள் தனை நீட்டிடுவாய்

வரும் வரும் ஆண்டுகளில்
வசந்த மாதம் காட்டிடுவாய்
வரிசை நபி ரவ்ழாவில்
வடிவுடனே சேர்த்திடுவாய்

சென்று வா காதலே
நீ சென்று வா!
மீண்டு வா காதலே
நீ மீண்டு வா!

Previous Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அன்பான முறையீடு!
posted by: YAHYA MOHIADEEN (Dubai) on 27 June 2017
IP: 31.*.*.* Romania | Comment Reference Number: 45628

குரலாலே தமிழுலகை
குறிவைத்து தாக்கிய நீர் - இன்று
விரலாலே எம் பிழைப்பில்
வீணே நுழைகின்றீர்

உம் வணிகம் எது அதுவோ
உவகையுடன் நீர் செய்யும் - அஃதன்றி
இத் தொழிலை நீர் செய்தால்
எம்பிழைப்பு எனவாகும்?

உம் தொழிலை என்றேனும்
யாம் இங்கு செய்தோமா
செய்தால் தான் மக்களெமை
மனதார ஏற்பாரா?

பெட்டிக்கடை போலசிறு
தொழில் செய்து வருமெமக்கு
போட்டியாய் நீர் வணிகம்
செயதுணிச்சல் வந்ததுவோ?

நற்குணமாய் நானுமக்கு
நயமுடனே வேண்டுகிறேன்
எக்கணமும் இதுபோன்ற
காரியத்தில் இறங்காதீர்!

இதயத்தின் ஓரத்தில்
ஈரம் சிறு வைத்திருந்து
இதுபோன்ற செயல்களிலே
இனிமேலும் இறங்காதீர்

கவிக்கோவின் கண்ணயர்வில்
கவியெழுத துணிந்தீரோ?
கவிமகனார் களத்தினிலே
கம்பீரமாய் நிற்கின்றார் - எச்சரிக்கை

யாம் எழுதி தந்த தந்த கவி உம்
கருவரையில் இனுமிருக்க
நீர் சுயமாய் இயற்றுவது
நியாயமாய் படுதாமோ?

சென்று வா காதலே! சென்று வா!!
உம் கவியழகை கண்டேன்
எம் குழுவில் இளந்தம்பி நீ
இணைந்ததால் மன மகிழ் கொண்டேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. யஹ்யா காக்காவிற்கு....
posted by: பா.சா. அஹ்மது ஸாலிஹ் (ஹாங்காங்) on 28 June 2017
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 45635

உயர உயர பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகா
பல மரமது கண்ட தச்சனோ
ஒரு மரமும் வெட்டிட மாட்டான்

பழ மொழிகள் பகர்வதையே
பலமாக நீர் உரைத்தீர்
பல பேர்கள் பகர்ந்திடினும் (யான்)
முனைந்ததுவும் புதுமைன்யன்றோ

பாடுவதில் அறை குறை நான்
பாவம் அதை செவி மடிப்போர்
துறை மாறி சென்றவுடன்
பெரு மூச்சு விடுகின்றார்

உம் சொத்து மட்டுமிலை
என் அப்பன் பாட்டன் சொத்து
உமக்கு வந்த தைரியம் தான்
எமக்கும் வந்ததுண்மையன்றோ

கவிக்கோவின் கண்ணசைவில்
கவி மகனின் தூண்டுதலில்
கவி புனைய துணிந்தேனே
களிப்பினிலே திளைத்தேனே

தேனூறும் தமிழ் மொழியில்
பானூறு படைத்திடுவீர்
பாவம் இந்த சது வரிகள்
பயல் எனக்காய் விட்டு விடும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersFaams
DanubeWavoo Jewellers
FaamsAKM Jewellers
Cathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2017. The Kayal First Trust. All Rights Reserved