உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ...
சமூக ஒழுக்கம் என்பது தனிமனித ஒழுக்கத்தினாலேயே ஏற்பட முடியும்.எனவே,நாம் தேர்ந்தெடுக்கும் நகராட்சி உறுப்பினர்களின் தனிமனித ஒழுக்க நெறிமுறைகள் முறையானதாக இருந்தால் மட்டுமே நம் ஊருக்கும் ,நம் சமுதாயத்திற்கும் இந்த நகராட்சி பயனுள்ளதாகவும் மேலும் குற்றங்களை தடுக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
பணத்தை வாங்கி கொண்டு உங்கள் வாக்குகளை தவறான நபருக்கு வாக்களித்து விடாதீர்கள்.தட்டை காட்டி போட்டதை வாங்கி கொள்ளும் பிச்சைகாரன் நிலையும் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வாக்காளன் நிலையும் ஒன்று தான். எதையும் கேட்க முடியாது. அம்மா அந்த பிரிட்ஜில் இருக்கும்கெட்டித்தயிரை எடுத்துப் போடுங்கள்!’’ என்று பிச்சைக்காரன் உரிமையுடன் கேட்கவா முடியும்? தருவதை அனுபவித்து நிறைவுறும் திருவோட்டை பிச்சைக்காரன் கூட ரசிப்பதில்லை
நாமாக பார்த்து திருந்தாவிட்டால் சமூக மாற்றம் வராது என்பது மட்டும் உண்மை.
* திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"என்ற கவிஞரின் வைரவரிகள் தான் நினைவுக்கு வரும். இருப்பினும் கீழ்கண்ட சட்டங்கள் இயற்றினால் தான் தனி மனித ஒழுக்கம் வளரும் குற்றங்கள் குறையும் நாம் எதிர் பார்க்கும் நகராட்சி அமையும்.
* தனிமனித ஒழுக்ககேட்டிற்கு அடித்தளம் இடுகின்ற அனைத்து போதை வஸ்துக்களும் உடனடியாக தடை செய்யப்படவேண்டும்.இதை செய்ய கூடிய ஆற்றல் கொண்டவரையே நாம் நகராட்சிக்கு தேர்தெடுக்க வேண்டும்.
* உடல்நலத்திற்கும் உலக சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்கின்ற தேவையற்ற, தரமற்ற பொருள்கள் தயாரிப்பதற்க்கும் விற்பதற்கும் தடைவிதிக்கவேண்டும். மேலும் உயிர்கொல்லி நோயான புற்று நோயை பரப்பும் DCW நிறுவனத்தை மூட கடுமையாக போராடும் நகராட்சியாக நம் நகராட்சி அமைய வேண்டும்.
* நமதூர் நகராட்சியில் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க வேண்டும் , குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் , குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய லஞ்சம், சாலை போடுவதில் ஊழல் .. இப்படி பல விசயங்ககளில் லஞ்சமும் , ஊழலும் தலைவிரித்து ஆடுகின்றது . முதலில் இவற்றை நம் நகர்மன்றம் சரி செய்தாலே எல்லாம் சரி ஆகிவிடும்.
* நமதூர் நகராட்சி நம்முடைய கடற்கரை விசயத்தில் மிகவும் அக்கறை கொள்ள வேண்டும். சமீப காலமாக கடற்கரையில் செய்த மாற்றங்களால் மாற்று மத சகோதர்களும் , வெளி ஊர் வாசிகளும் அதிக அளவில் வர தொடங்கிவிட்டனர். இவற்றினால் நாம் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியதிருக்கின்றது .ஆகையால் நம் நகர்மன்றம் இவ்விசயத்தில் மிக கவணம் எடுத்து இதனை கண்காணிப்பதற்காக தனிப்படை மற்றும் காவல் படை ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
* வெளியூர்களை காட்டிலும் நமதூரில் ஆட்டோ கட்டணம் பன்மடங்கு அதிகமாக உள்ளது. ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவிற்கு போவதற்கே அதிக தொகை கேட்கின்றனர்.அரசு பெட்ரோல் விலையை ஒரு ரூபாய் உயர்த்தினால் இவர்கள் ஆட்டோ கட்டணத்தை ஐந்து ரூபாய் உயர்த்துகின்றனர்.நம் நகர்மன்றம் இந்த ஆட்டோ கட்டணங்களுக்கு ஒரு விலை வரம்பு கொண்டு வர வேண்டும். அதையும் மீறி அவர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் அவர்கள் ஊரில் ஆட்டோ ஓட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும்.
* நமதூர் நகர்மன்றத்தில் உறுப்பினர்கள், தலைவர் இவர்களை தவிர்த்து நகராட்சியில் அலுவலக பணிகளில் பெரும்பாலும் இருப்பவர்கள் வெளியூர் வாசிகளே.. ஏன் இந்த நிலை ..?? நம்மூரில் திறமையான படித்த பலர் இருக்கும் பொழுது அவர்களுக்கு நம் நகராட்சியில் பணி கொடுக்கலாமே...?
முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு, அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இந்தியாவின் விதி ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் குறைந்தது நம் நகராட்சியையாவது நாம் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டாமா..! அதில் உள்ள குற்றங்களையும் தவறுகளையும் மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு அரசியல் ரீதியதில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இந்த கட்டுரை வேண்டுகிறது.
நீ வெற்றியடைய விரும்புகிறாய்
ஆனால் அதற்குரிய பாதையில் செல்லவில்லை
நிச்சயமாக படகு தரையில் ஓடாது
என்று ஒரு அரபுக் கவிஞன் கூறினான்.
அதுபோல நம் நகர்மன்றம் சரியான பாதையில் சென்றால் தான் நம் நகர்மன்றத்திற்கு நிகர்மன்றம் எதுவுமில்லை என்று மார் தட்டலாம் வாருங்கள், இணைந்து செயல்படுவோம்! சிறந்ததொரு நகர்மன்றத்தை உருவாக்குவோம்..!!
|