எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே!
நமது நகராட்சியில் தற்போது 18 வார்டுகள் உள்ளன. இது 23 ஆகா உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. மிக்க மகழ்ச்சி. அதே நேரம் மிகவும்
கவலைக்குரியதாக இருக்கிறது. ஏன் என்றால் மேலும் ஊழல், லஞ்சம், அதிகரித்து விடுமோ என்ற ஏக்கம் எங்களை போன்ற இளைஞர்களுக்கு
மிகவும் கவலை அளிக்கிறது.
என்னை பொறுத்த வரையில் வார்ட் பிரதிநிதிகளை அந்த அந்த ஜமாஅத் / பொது நல அமைப்பு மூலம் தேர்ந்து எடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஏன்
என்றால் ஒருவர் ஒரு ஜமாஅத் / பொது நல அமைப்பில் உறுப்பினராக இருந்தால் அவர் எவ்வித தீய செயல் செய்ய பயப்படுவார். ஜமாஅத் தேர்ந்து
எடுக்கும் உறுப்பினர் (அவர் எந்த சமூக அமைப்பு, கட்சி, பொது நல அமைப்பு உறுப்பினராகவும் இருக்கலாம்). முதலில் அவர் அந்த ஜமாஅத்தின்
அடிப்படை உறுப்பினராக இருத்தல் கட்டாயம். அது போல் சில தகுதிகள் நிர்ணையம் செய்ய வேண்டும் (படிப்பு, அனுபவம், பேச்சாற்றல்,
நல்லொழுக்கம், அவர் மீது குறைகள் இல்லாமல் இருக்க வேண்டும்).
நாம் ஜமாஅத் மூலம் UNOPPOSED ஆக தேர்ந்து எடுத்தால் நாம் ஓட்டுப்போடும் நேரம் மிச்சம். நம் குடும்பத்தார்க்கு மத்தியில் சண்டை, செலவு
மிச்சம். ஒரே வார்டில் 2 அல்லது 3 பேர் நின்றால் இதில் கண்டிப்பாக இரண்டு நபர் ஒருவருக்கு ஒருவரை நன்கு தெரிந்து இருப்பார். மேலும்
அவர்களின் குடும்பத்தில் பிரச்னை வர அதிக வாய்ப்பு உள்ளது. (உதாரணமாக - என் மச்சான், காக்க, மாமா, மாப்பிள்ளை எலக்சன் நிற்கிறார். நீ
எனக்கு தான் ஒட்டு போட வேண்டும் என்று நம் ஊரில் பெண்கள் மத்தியில் சண்டை வரும்). இதை தவிர்த்தல் நம் ஊர் மக்கள் சந்தோசமாக
வாழ்வார்கள்.
எவர் ஒருவர் ஜமாஅத் / பொது சேவை அமைப்புகள் மூலம் தேர்ந்து எடுக்கு வேட்பாளர் அவர் கீழ் கண்டவாறு தன கைப்பட / டைப் செய்து அந்த
ஜமாஅத் தலைவர்களிடம் சமர்பிக்க வேண்டும்.
நான் நேர்மையாக, மக்களுக்காக எல்லா விதத்திலும்/நேரத்திலும் உழைப்பேன், ஊழல், லஞ்சம், ஊழல் அற்ற நிர்வாகம் செயல்பட, சொந்த
வெறுப்பு, சண்டை இன்றி நம் காயல் மாநகர ஒற்றுமைக்காகவும் என வார்ட் வளர்ச்சிக்காகவும் உழைப்பேன் என்றும் அப்படி செயல்படவில்லை
என்றால் தாங்கள் (ஜமாஅத்/பொது சேவை அமைப்பு) எடுக்கும் எந்த முடிவுக்கும் எந்த நேரத்திலும் கட்டுபடுவேன் என்று எழுது பூர்வமாக கொடுக்க
வேண்டும்.
தலைவர் / துணை தலைவர் பொறுப்பை நமது காயல் ஐக்கிய பேரவை முடிவு செய்யவேண்டும். மற்ற வார்ட் உறுப்பினர்கள் அந்த ஜமாஅத்/சமூக
அமைப்பு மூலம் தேர்ந்து எடுத்து ஊர் ஐக்கிய பேரவையில் தெரியபடுத்த வேண்டும்.
மேலும் அதிக அளவில் UNOPPOSED வேட்பாளர் நிறுத்துமாறு அனைத்து ஜமாஅத், சமூக அமைப்புகளை இந்த நல்ல நேரத்தில் மிக தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
எனது பார்வையில் வேட்பாளர்கள் ... இப்படி இருக்க கூடாதா இறைவா!!
1) QYSS
2) AYWA
3) YUF
4) RED STAR
5) TMMK
6) IIM
7) IQRA
8) TNTJ
மேலும் எனக்கு தெரியாத பல நல்ல அமைப்புகள் உள்ளன. இந்த அனைத்து அமைப்புகளும் தங்கள் ஜமாஅத் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு
உங்களுக்குள் மசூரா செய்து ஒரு நல்ல வேட்பாளரை, சமூக பார்வையாளர் / ஆலிம்கள் போன்றவர்களை தேர்ந்து எடுத்து முடிந்த அளவு
UNOPPOSED மூலம் தேர்ந்து எடுத்து நமது நகரின் ஒற்றுமையை இந்த தமிழகத்திற்கு காட்டுவோமாக.
எல்லாம் வல்ல இறைவா! எங்கேயும், எங்களை சார்ந்த உறவினர்களையும், எங்கள் ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மத்தியில் நல்ல
ஒற்றுமையும், ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நல்ல வழியில் வாழ எல்லாம் வல்ல இறைவா நீ அருள் புரிவாயாக ஆமீன்.
வஸ்ஸலாம்
|