ஒரு 7 அல்லது 8 ஆண்டிருக்குமென நினைக்கிறேன். வறிய குடும்பமொன்று நம் KMT யில் அட்மிட்டாகி - அவர்கள் சக்திக்குட்பட்டவரை காசு செலவு பண்ணி - மருத்துவம் பார்க்கிறார்கள். அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகும் அன்று ஏறத்தாள அய்யாயிரத்தி ஒருநூறு ரூபாய் கட்டசொல்லி பில் வருகிறது KMT அலுவலகத்திலிருந்து. அவர்களால் அவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாத சூழல்.
என் தங்கை மூலம் எனக்கு இச்செய்தி கிடைக்கிறது. அச்சமயம் தாயகத்திலிருந்த நான் KMT விரைந்து அக்குடும்ப நிலையை அறிந்தேன். அங்கு KMT அலுவலகம் சென்று அவர்கள் சூழலைச்சொல்லி தொகையை கொஞ்சம் குறைக்கலாமே என்றேன். “அதற்கவர்கள் ஐநூறு, ஆயிரமென்றால் ஏதாவது பண்ணலாங்க. ஏறத்தாள அய்யாயிரம் ரூபாய்ங்க என்றனர். “இந்த மாதிரி PATIENT களுக்கு ZAKATH FUND திலிருந்து ஏதாவது செய்யலாமே என்றேன்” அதற்கவர்கள்; ‘ஹாஜியார் வந்த பிறகுதான் அதை கேட்கணும்' என்றார்கள்.
காத்திருந்தேன் ஹாஜியார் வரும்வரை. லுஹர் பாங்குக்கு சற்று முன்பு வந்தார் ஹாஜியார். PATIENT உடைய குடும்ப சூழலை அவரிடம் கூறினேன். கவனமாக கேட்டார். அலுவலரை அழைத்தார். எவ்வளவு..? என வினவினார். அலுவலர் தொகையை சொன்னார். பிறகு என்னிடம்; “சரிங்க... பாதி தொகையை ZAKATH FUND டிலிருந்து நாங்க கட்டிவிடுகிறோம். மீதியை எப்படியாவது முயற்சிபண்ணி அவர்களை கட்டச்சொல்லுங்கள்” என்றார்.
ஹாஜியார் அதைக்கூட அவர்களால் கட்டமுடியாது. அதை நான் பொறுப்பேற்கிறேன். அவர்களை அனுப்பிவிட்டு வந்து அப்பணத்தை நான் கட்டுகிறேன் எனக்கூறி அந்த PATIENT இருக்கும் வார்டுக்கு சென்றுவிட்டேன்.
அவர்களை ஆட்டோவில் அனுப்பி விட்டு அந்த மீதி பணத்தை கட்ட அலுவலகம் சென்றேன். ஹாஜியார் வெளிமணலில் நாற்காலியில் அமர்ந்து ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரை கடக்க முயற்சிக்க “தம்பி இங்க வா...” அழைத்தார் ஹாஜியார். “அவங்கள அனுப்பீட்டீங்களா...” எனக்கேட்டார். “ஆம்...” என்றேன்.
“வாப்பா, நீ யார் வூட்டு புள்ளே...” எனக்கேட்டார். என்னைப்பற்றி சொன்னேன். மேலும் சொன்னேன், நாங்கள் எம் மன்றம் மூலம் நலிந்தோருக்கு நிறைய உதவிகள் செய்கிறோம், நம்ம KMT க்குகூட இன்னின உதவிகளை செய்துள்ளோம், இன்னும் சில செய்திகளும் சொன்னேன். அவர் அனைத்தையும் “ம்” போட்டு கேட்டுக்கொண்டார்.
“இப்ப எங்க பணம் கட்டவா போறீங்க...”, “ஆமாம்” என்றேன். “சரி...” என்றார்.
நான், கட்ட வேண்டிய மீதி பணத்தை எடுத்து அந்த PATIENT உடைய பில்லுடன் இணைத்து CASH கவுண்டரில் கொடுத்தேன். CASHIER சொன்னார் “அந்த பில்லுடைய முழுத்தொகையையும் ZAKATH FUND டிலிருந்து கட்டும்படி ஹாஜியார் சொல்லிவிட்டார், அந்த பில் அப்பவே CLEAR ஆகிவிட்டது” என்று.
உடனே நான் CASH COUNTER ரிலிருந்து ஹாஜியாரை திரும்பிப்பார்த்தேன். அவர் சுவராஷ்யமாக அந்த நபருடன் சாதரணமாக பேசிக்கொண்டிருந்தார்.
“நான் மனதில் சொல்லிகொண்டேன்; எவ்வளவு நல்ல மனிதர். அந்த ஏழையின் நிலை அறிந்து உதவியுள்ளாரே’ என்று.
படியிறங்கி ஹாஜியாரிடம் சென்று “ஜஸாகல்லாஹ்.......” சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு; “தம்பி அந்த பணத்தை அவங்களுக்கே கொடுத்துடு, துவா செய்யச்சொல்லு...” என்றார். “சரி ஹாஜியார்...” என்று சொல்லிவிட்டு நகன்றேன்.
உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் நமதூரில் என்று எனதுள்ளம் சொல்லிக்கொண்டே வந்தது. நான் அறிந்து இதுபோல் அவர் பலருக்கு உதவியுள்ளார்.
இரக்கமுள்ளோர் இறப்பதில்லை. அவர் உயிர் வீழ்ந்தாலும், அவர் செயல் வாழ்கிறது.
அன்று என்னை விசாரித்த உவைஸ் ஹாஜியார் இன்னும் என் கண் முன் நிற்கிறார்...!
“அவனிடமிருந்தே வந்தோம்... அவனிடமே திரும்புகிறோம்...” மறைந்த அன்னாரின் ஆத்மா சாந்தி பெறட்டும்.
----------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 17 அன்று காலமான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - அதன் தலைவரும், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிறுவனர் தலைவருமான ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் பற்றிய கட்டுரை
[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 5:30 pm / 18.12.2013] |