நான் எதிர்பார்க்கும் காயல்பட்டின நகராட்சி இந்தியாவின் தலைசிறந்த மற்றும் அழகிய முன்மாதிரியான நகராட்சியாக திகழ வேண்டும்.
நகராட்சியின் நிர்வாக கட்டமைப்பு
1. தலைவர் அவர்கள் முழு நேர நகர்மன்ற தலைவராக இருப்பதுடன் துடிப்பான, பணபலமுடன் கூடிய பொது நலவாதியாகவும், இறைவனின்
கட்டளைக்கு பயந்து நடப்பதுடன் நிர்வாகத் திறமைமிக்கவராக இருத்தல் வேண்டும். தற்போதுள்ள தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான்
அவர்களே மிக மிக பொருத்தமாக கருதுகிறேன். இருப்பினும் அவர்கள் யாரையும் முழுமையாக நம்பிவிடாமல் தம்மை சுற்றி இருக்கும் கயவர்களை
உடனேயே கண்டறிந்து கலையும் திறனை மேம்படுத்த வேண்டுகிறேன்.
2. நிர்வாகத்தில் குறைந்தது இரண்டு ஆலிம்கள் (ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் பழகும் குணமுடையா) (i) முஹம்மது பாரூக்
ஆலிம் (ii) அம்ஜத் அலி ஆலிம் மஹ்லரி
3. சமூக சேவைக்காக துடிக்கும் அன்பர்கள் (ex: N.S.E. மஹ்மூத் ஹாஜி போன்றவர்கள்)
4. பொறியாளர் (ex: ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா போன்றவர்கள்)
5. பொது நலன் கொண்ட சிறந்த மருத்துவர்கள், வக்கீல்கள்
6. ஜமாஅத்தின் உண்மையான பொது நல சேவகர், அல்லாஹ்விற்கு பயந்து மக்களுக்காக பாடுபடும் திறன் கொண்ட நபர், அவர் ஏழையாக
இருந்தாலும் சரியே! பொதுவாக நமதூரில் எண்ணற்ற ஜமாஅத்துக்கள் வெறும் பெயரளவில் தான் இயங்குகிறதே தவிர செயல் அளவில் இல்லை
என்பதே உண்மை! எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பது சொந்தம், பணக்காரன் என்பதே! இதையே நீதிபதிக்கு நிகராக இருக்கும்
ஆலிம்களும், முத்தவல்லிகளும் ஜமாஅதுக்களின் போக்கிற்கு சாய்ந்து, கற்றறிந்த மார்க்கத்தையும், அல்லாஹ்வையும் மறந்து செயல்படுவதால் தான்
தலாக்குகள் பல, பல்லாண்டு காலம் படிக்கொடுக்காத மாப்பிளைகள் பல், மானக்கேடான செயல்கள் சில!
காரணம், எந்த கொள்கையைக் கொண்ட ஜமாஅத், சங்கங்களும் குடும்ப சம்பந்தமான பிரச்சனைகளை தகுந்த முறையில் தீர்க்க விருப்பம்
காண்பிப்பது இல்லை [பல குடும்பங்கள் சேர்ந்து தான் நகரம் உண்டாகிறது]. மாறாக காவல் நிலையத்திற்கு செல்லுங்கள்! எங்களால் வெறும்
தீர்ப்புதான் தர இயலும்!! அது நிறைவேற்றப்பட்டதா? பாதிக்கப்பட்டவர் நிவாரணம் பெற்றாரா? பெறாதபோது மறு முறையீடு செய்தால் எங்களுக்கு
வேற வேலை இல்லையா! என்பது போன்ற பல கசப்பான நிகழ்வுகள்.
ஆகவே தான் இன்று பல குடும்பங்கள் ஆதரவு அட்ட்று ஒரு சில பொது தொண்டு சங்கங்களையும், பொது நலவாதிகளையும் எதிர் நோக்கி கையேந்தி
நிற்கிறார்கள். செல்வந்தர்களும் அதையே விரும்புவது போன்று செயல்படுவதாலும், பிரச்சனைகளை தீர்க்க முன்வராததாலும், சரியான முறையில்
சில ஆலிம்கள் நடகாததாலும், மிக முக்கியமாக எந்த ஒரு ஜமாஅத்திற்கும், அரசு சார்ந்த அதிகாரம் இல்லாததாலும் அரசு மற்றும் காவல் துறையின்
ஒத்துழைப்புகளைப் பெற ஜமாஅத்தின் உண்மை பிரதிநிதிகள் நமது காயல் நகர்மன்றதிற்கு மிக மிக அவசியம்!
முதலில் ஒவ்வொரு ஜமாஅத்தும் சரியான முறையில் கட்டமைத்து அவர்களில் மிக துடிப்பான அல்லாஹ்வின் பயம் தவிர வேறு பயம் இல்லாத 24
மணிநேரமும் மக்களுக்காக பாடுபடும், காயல்பட்டினத்தின் ஊழியர் தேவை நகராட்சிக்கு!
7. ஆளும் அரசியல் கட்சி பிரமுகர்கள் 3 AIADMK, 2 DMDK, 2 MMK களில் இஸ்லாத்திற்கு பயந்தும் காயல் மக்களின் நலனுக்கு மட்டும் உழைக்கும்,
சென்னையில் முதலமைச்சரிடம் மற்றும் அரசாங்கத்திலிருந்து கடமைகள், சலுகைகள் பெற்றுத்தர தங்களின் அரசியல் கட்சிகளின் கொள்கைக்கு
அப்பாற்பட்டு யார் பேசினால் நமக்கு பயன் பெறமுடியுமோ அவர் தேவை. முயற்சி செய்து பலன் கிடைக்காத சமயத்தில் அவர் காயல் மாநகர
மக்களின் நலனுக்காக கட்சியை விட்டு விலகுபவராகவும், அவர் விலகினால் கட்சியின் தலைமை பயப்படும் அளவிற்கு செல்வாக்குள்ள நல்ல
நேர்மையான, அல்லாஹ்வின் பயம் உள்ள அரசியல் வாதி தேவை. கண்டிப்பாக பொம்மை அரசியல் வாதிகள், கட்சிகள் தேவையே இல்லை!!
எனது பார்வையில் துறைகள்
மருத்துவம்
நமது அரசு மருத்துவமனைக்கு நிரந்தர அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், ஜெனரல் மருத்துவர், சேவை திறன்மிக்க மருத்துவர்கள்,
நர்சுகள், ஆம்புலன்ஸ் வசதி, சுத்தமான, சுகாதாரமான மருத்துவமனை, தேவை. இதை நகராட்சியின் மருத்துவ உறுப்பினர் நிர்வாகிக்க வேண்டும்
(கண்காணித்தல், முயற்சி எடுத்தல்)
கல்வி
இதுவரை நமதூருக்கு பொறியியல் கல்லூரி இல்லை. குறைந்த பட்சம் பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி.ஐ. யாவது அரசு மற்றும் செல்வந்தர்களின்
மூலம் நிறுவ ஏற்பாடு செய்தல். இக்ராவுடன் சேர்ந்து செயல்திட்டங்களை அமல்படுத்தும் திறமைமிக்க நிர்வாகம். உலக கல்வி மட்டும் இல்லாமல்,
மார்க்க கல்விகளுக்கும் பல பரிசுதிட்டங்களை நகராட்சியின் ஆலிம் உறுப்பினர்கள் மூலம் செயல் படுத்துதல்.
போக்குவரத்து
மிக பெரிய தலைவலி ரோடு காண்ட்ராக்ட் வேலை. தோண்டப்பட்டுள்ள ரோடுகளை உடனே சரி செய்து, இனி ஒப்பந்த காரர்களை சரியான முறையில்
தேர்ந்து எடுத்து கண்டிப்புடனும், காலவரைக்குள் செய்து முடிக்கத் தெரியும் நிர்வாகம் தேவை. ஒரு வழி பாதை அமலாக்கம், ஆட்டோ,
டாக்சிக்களின் விலைகளையும், டிரைவர்களின் நடத்தைகளையும் கண்காணித்து அவர்களின் நலனுக்கு பாடுபடுதல்.
குடித்தண்ணீர்
மிக முக்கியமாக முடிவுத் தருவாயில் உள்ள 2 ஆம் பைப் லைன் குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றல். இதற்க்கு மாவாட்ட ஆட்சி
தலைவரும் முக்கியத்துவம் கொடுப்பதாக இசைந்துள்ளார்கள். இதன் பிறகு தினசரி குடிநீர் விநியோக திட்டம் அமலாக்கல்
மின்சாரம்
விரைவில் நகராட்சி இடம் ஒதுக்கி நமதூருக்கு வரவேண்டிய தனிப்பட்ட உபமின் நிலையம் அமைதல். மின்சார கணக்கெடுப்பை பழைய முறையையே
அமல் படுத்துதல். தெரு விளக்குகளை நேர கட்டுப்பட்டு கருவி (timer control panel) மூலம் இயக்கள். தனியார் கம்பெனி காண்ட்ராக்ட் நமதூர்
எலெக்ட்ரிக் சகோதரர்களுக்கு கொடுத்தல்
நிர்வாகம்
காயல்பட்டன நகராட்சியில் நமதூர் மக்களுக்கு அதிக அளவில் அணைத்து நிலையிலும் (மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை) தகுதியானவர்களை
கண்டறிந்து பணியில் அமர்தல்; ஊழலற்ற, திறமைமிக்க, நேர்மையான, அனைத்து சமுதா மக்களையும் அரவணைத்து செல்லும், அதிகாரிகளை
நிரந்தரமாக நமதூரில் பணி புரியசெய்ய வைக்கும் நிர்வாகம் தேவை
வெளிநாடு வாழ் காயலர்களின் நல வாரியம்
அதிகளவில் அந்நிய செலவானியத்தை ஈட்டித்தரும் வெளிநாடு வாழ் காயலர்களின் எதிர் கால வாழ்க்கை மேம்பாட்டுதிட்டமாகவும், நலவாரியமும்
ஏற்படுத்தி, எதிர்பாராத உடல் சுக குறைவு, வேலை இழப்பு போன்ற அவசர கூட்டத்திற்கு உதவுவதை சட்டமாக இயற்றி செயல்படுத்துதல்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்
சுனாமி குடியிருப்பு மற்றும் ஏனைய ஆக்கிரமிப்பை துணிச்சலுடனும், மிக அறிவிப்பூர்வமாக, வக்கீல் உறுப்பினரின் ஆலோசனைப்படி சட்டரீதியாக
மிக மிக கண்காணிப்புடன் செயல்படும் நிர்வாகம் தேவை.
சுற்றுபுற மற்றும் சுகாதார சீர்க்கேடு
அதிக கதிர்வீசுடன் இயங்கும் மொபைல் டவர், நிலம், நீர், காற்றை மாசுபடுத்திக் கொண்டு இருக்கும் DCW நிறுவனத்தை CFFC மற்றும் காயல் உடல்
நல ஆய்வறிக்கை, DCWmonitor.com ஆகியோர்களின் துணையுடன் நகராட்சிக்கு வருமான இழப்பு வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் புற்றுநோய்,
குழந்தையின்மை போன்ற மக்களின் குறைப்பாடுகளை கழியும் நோக்கில், மக்களின் மனநிறைவான சுகாதாரமான வாழ்க்கையே அவசியம் என்று கருதி
முழு வீச்சில் DCW மற்றும் அதிக கதிர் வீச்சு தவர்களை நமது மண்ணிலிருந்து மாற்றி மாசு படிந்த மண்ணை மாஞ்சோலையாக்க திறமைமிக்க
நிர்வாகம் தேவை!
குடும்ப நலவாரியம் மற்றும் ஒழுக்க கட்டுப்பாடு
நமதூர் மக்கள் நீதிமன்றம் செல்லாத அளவிற்கும், சொந்தம், பந்தம், கொள்கை, ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுப்படும் இல்லாத உண்மையான
நகராட்சியின் ஆலிம் உறுப்பினர்கள், ஊரின் மற்ற ஆலிம்கள், மற்றும் மேலே குறிப்பிட்டது போல் உள்ள ஜமாஅதுக்களின் ஒத்துழைப்புடன் எந்த
குடும்ப நல பிரச்சனைகளையும், நல்ல மருத்துவர் (நகராட்சி உறுப்பினர்) ஆலிம்களின் கவுன்சல்லிங் கொடுத்து மக்களுக்கு நேர்மையான தீர்ப்பு
வழங்கவும், தீர்ப்பை மதிக்காத, பின்பற்றாத நபரின் மீது சட்டரீதியாகவும், காவல்துறையின் ஒத்துழைப்புடனும் நிவாரனதைப்பெற்று
பாதிக்கப்பட்டவருக்கு முழுமையாக கொடுப்பதுடன், அதை நிறைவேற்றும் வரை மறுமணத்திற்கு தடை, நகராட்சி மற்றும் ஊரின் எந்த நல்லது,
கெட்டதிற்கும் உதவி தடை, நேர்மையற்ற (அல்லது) தகுதியற்ற ஜமாஅத் (அல்லது) பள்ளியின் நிர்வாகிகள் (அல்லது) ஆலிம்கள் அகற்றுதல்
போன்ற செயல்திறமிக்க நிர்வாகம் தேவை!
ஆலோசனைகள்
காயல் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் முயற்சியில் அனைத்து ஜமாஅத்துக்கள் மற்றும் உலக காயல் நலமான்றங்களின் ஆலோசனைகள் படி மேலே
குறிப்பிட்டுள்ள அனைத்து துறை வல்லுனர்கள் கொண்ட நல்லதொரு நகர்மன்றம் தேவை.
காயல் நகராட்சி காலமெல்லாம்
கலைக்கட்டும் நகராட்சியாக்!
கண்டவர்களுக்கு கலங்க வைக்கும் நகராட்சியாக!!
கண்டு மகிழ கனவுடன் ஓர் கட்டுரை!
|