| |
ஆக்கம் எண் (ID #) 1 | | | செவ்வாய், நவம்பர் 26, 2013 | | "செல்"லமே! முன்னாள் ஆசிரியர், இளந்தென்றல் / சமூக பார்வையாளர் |
| இந்த பக்கம் 497 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
இந்த கவிதை எழுத்து மேடை பகுதியில் 5-4-2012 அன்று வெளியானது. அப்பதிவினை காண இங்கு அழுத்தவும் [http://kayalpatnam.com/columns.asp?id=26]
------------------------------------------
க்ரஹெம்பெல்லால் முற்றுப்புள்ளியிடப்பட்ட
தொலைபேசி தொழில் நுட்பம்
காலம் கடந்து கம்பிகளற்ற அலைபேசியை
இயற்கையின் அழிவிற்கு
தொடக்க உரை எழுதத் தொடங்கிவிட்டது.
வராம சாபமா என்று அறியுமுன்னரே
நம் சட்டைப்பையோடு சங்கமமாகிவிட்டது.
இது
பலமான பாவம்
பாவமான பலம்.
இது வளர வளர சிதைந்த மாற்றங்கள் ஏராளம்
இயற்கையை சிதைத்த மாற்றங்கள் தாராளம்.
விண்ணை முட்டும் டவர் கேட்டது.
விண்ணில் சில இடம் கேட்டது.
கருணையற்ற கதீர்வீச்சில்
பரவையினகள் பல கருகின.
மரங்கள் மனிதனை கண்டு பயந்தது.
ஒரு மரத்தை விட்டு விடுங்கள்
உங்களின் ஒரு தெருவிற்கு
உதவியாய் இருப்போம்.
எங்களின் சில இனத்தை விட்டு விடுங்கள்........
உங்கள் இனத்திற்கே உதவியாய் இருப்போம்.
அக்சிஜென் கொடுத்து ஆயுள் நீட்டித்த காரணத்தை
காற்று மூலம் ஒவ்வொரு மனிதனின்
காதோரமும் கண்ணீரோடு சொல்லிச் சென்றது.
இரண்டு காதுகளிலும்
எலக்ட்ரானிக் எக்யுப்மென்ட் பொருத்தப்பட்டதால்
இன்று வரை இயற்கையின்
வேண்டுதல் விழவேயில்லை.
இறுதியில்
மனிதன் இயற்கைக்கு எதிரானான்........
இயற்கை மனிதனுக்கு எதிரானது.........
சாபம் வாங்கி வைத்துக்கொள்ள
வரங்களை செலவழித்தான்.........
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்..........
மனங்களை மூடிக்கொண்டே...........
மிஸ்டு காலால் சிரித்த நட்பு
மிஸ்டு வாழ்க்கையால் அழுதுக்கொண்டு இருக்கிறது............
விழாக்காலங்கள் - ஒற்றைக்
குறுஞ்செய்தியோடு தன சந்தோசங்களை
முடக்கிகொண்டது...
ஏமாந்து....... ஏமாற்றி..........
ஏமாற்றி..........ஏமாந்து......
கிட்டதட்ட கடித சந்தோசங்களே
காணாமல் போய்விட்டது.....
இனி அவை பேரன்மார்களுக்கான
பெருங்கதையின் சொல்லப்படாத - ஓர்
அத்தியாமாய் ஒதுங்கிக்கொள்ளும்..........
செல்லமாய் அலைபேசி
மனிதனுக்கு சொல்லிச் சொல்லிப்போகும்
மரணச் செய்திகள் அநேகம் உண்டு.........
இடுப்பில் வைத்தால் - கிட்னி இழப்பை...
சட்டைப்பையில் வைத்தால் - உன் இதயம் இழப்பாய்.....
பின்னே இந்த சனியன் எதற்கு.......
அகற்ற முடியாத அழிவு......
தூர வைக்கமுடியாத தொந்தரவு...........
உலகின் உன்னத விஞ்ஞாநிகளுக்கேல்லாம்
உயர்வான ஒரு வேண்டுகோள்.............
கடைசி உயிர் கருகுமுன்பாவது,
இயற்கைக்கும் மனிதனுக்கும் தோழமை ஏற்படுத்தும்
தொழில் நுட்பம் ஒன்றை கண்டுபிடியுங்களேன்........
இதற்கான ரகசியம்
அல்லாஹ்வின் வார்த்தைகள் கொண்ட
அருள்மறையின் ஏதாவது ஒரு பக்கத்தில்
இருந்துக் கொண்டேதான் இருக்கும்.
பின் குறிப்பு : சவூதி சென்ற சகோதரர் ஹாமீத் ரீபாயிக்கு,
"சாம்செங்- கலாசி - டச் ஸ்க்ரீன் ஓன்று
வாங்கி அனுப்பவும்......
ஹீ... ஹீ......
இது...
அகற்ற முடியாத அழிவு......
தூர வைக்கமுடியாத தொந்தரவு...........
அலைபேசியாய்
பறவையினங்கள் |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|