1. Re:...வாசகர்கருத்து. posted by:kamalmusthafa (abhaksa) on 08 December 2013 IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31876
சில மின்னல் பொழுது போல் என்னை சிந்திக்க வைத்த இலக்கியம் கவிங்கர் அமீர் அப்பாஸ்சின் இலக்கியம்
அனைத்தும் மனிதர்களை சிந்திக்க வைக்கும்
அதில் உள்ள கடைசி இலக்கியம் என்னை 40வருடம். பின்னோக்கி சிந்திக்கவைத்தன
அனைத்து தாய்மார்களும் தன்குழந்தைக்கு நிலவை காட்டி சோறூட்டும் போது சொல்லும் கதைதான் அது வருடம் என்னும் செடியில் இருந்து நாள் என்னும் பூக்கள் உதிர்ந்தாலும் கூட நினைவுகள் என்ற நிலத்தி அது படர்ந்து கிடக்கின்றன
கடந்து வந்த பாதையை பின் நோக்கி பார்த்தல் புரியும் எவளவு கஷ்டத்தை தாங்கி இருக்கிறது நம் இதயம் என்று
முடிவை அறிவித்து தொடரும் ஆட்டத்தில் கூட வெற்றி என்பது ஒருவருக்கு நிச்சயம் உண்டு சிந்திக்க துண்டும் இலக்கியம்.
இது மேலும் பல இலக்கியத்தை படைக்க. கவிங்கர் அமீர் அப்பாஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
2. முத்துக்கள் பத்து! posted by:kavimagan (doha-qatar) on 13 December 2013 IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 31945
அற்புதமான கவிதைகள்.....அழகான சிந்தனை...
வாழ்ந்த,வாழும் கவிஞர்கள் மனத்திரையில்
வந்து போகின்றார்கள்.
அகல் விளக்கில்
ஏற்றி வைத்த
நட்சத்திரங்கள்
இருளைத்தின்று..
செரிமானம் ஆகாமல்
காற்றில் தள்ளாடுகின்றன..!
எனது உள்ளத்தில்
ஏற்றி வைத்த
உங்கள் கவிதைகள்
உழன்று உழன்று ....
உறங்க விடாமல் என்
இரவுகளை ஆக்கிரமிக்கின்றன...!
அமீர் அப்பாசின்
சிந்தனைத் துளிகள்
அனைத்தும் அற்புதம்...
மொத்தத்தில்
முத்துக்கள் பத்து....
3. Re:... posted by:AHAMED SULAIMAN (Dubai) on 14 December 2013 IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31954
அஸ்ஸலாமு அழைக்கும்
உரைநடை கவியாக இருந்தாலும் அதில் எதார்த்த கவி நடை உள்ளது. இது போல கருத்துகளை மக்களிடம் எதார்த்தமாக கூறும்போது அதில் தாக்கம் தானாக வந்துவிடும் .
மனித சமுதாயம்
தனக்கு தானாக
ஆற்றில் படு
குழி தோண்டுதே!
இருந்த வீட்டை
விட்டு கண்ணீர்
விட்டு கொண்டு
போகுறாள் வண்டியில்
மணல் பெண் !
நம் காயல் மக்களிடம் கவித்துவம் சாதாரணமாக குடிகொண்டுளது . காரணம் நாம் உண்மையான் தமிழ் மக்கள் தமிழ் தான் நம்முடைய தந்தை மற்றும் தாய் மொழியும் என்னற்ற தமிழ் கவிகளை தந்த ஊர் நம் காயல் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross