இந்த கவிதை எழுத்து மேடை பகுதியில் 9-11-2012 அன்று வெளியானது. அப்பதிவினை காண இங்கு அழுத்தவும் [http://kayalpatnam.com/columns.asp?id=65]
-----------------------------------------
புனித ஹஜ் முடித்து தாயகம் திரும்பும் தன் பாச மூமாவை
வரவேற்கும் காயல் பேத்தியின் வாழ்த்துக் கவிதை - முஸ்தாக் அஹ்மத்
மனிதன் படைக்கப் படுவதற்கு- முன்பே
மலக்குகளால் கட்டப்பட்ட
மகத்தான கட்டிடம்...
பூமியின் மத்திய ரேகை..........
உலகமெல்லாம் இருண்ட பின்பும்
ஒளி படர்ந்த உன்னத இல்லம்.
பூமியினரின் வணக்கதிற்காய்
வல்லவன் வகுத்த
புனித ஸ்தலம்
உலக முஸ்லிம்களின் - முதன்மை
வணக்கஸ்தலம்.............
மலக்குகளின் நிரந்தர
வாசஸ்தலம்...................
பூமியின் சுவர்க்கம்……….
உலக முஸ்லிம்களுக்கெல்லாம் ஒரு உன்னத ஆசை
நிரந்தரமாய் நெஞ்சினில் உண்டு.
வாழ்வின் ஒருமுறையேனும் அல்லாஹ்வின் அழகிய வீட்டையும்
அஹ்மது நபியின் அருள் நிறைந்த கோட்டையையும்
தரிசிக்க வேண்டும் ...... என்ற தணியாத தாகம்
வாழும்போதே வரம் வாங்கி வந்த என் ஆருயிர் கம்மா.........
அல்லாஹ் விரும்பிய அற்புத ஹாஜிம்மா............
வாழ்ந்தவர்களே வாழ்த்துச்சொல்லி வரவேற்பர்.....
ஆனால் நானோ .........
வாழ்த்துச்சொல்லி வாழ ஆசைபடுகிறேன்.
மார்க்கத்தின் தந்தை.........
மகத்துவம் நிறை இப்ராஹீம் நபியின்
சரித்திர சான்றுகளை சந்தித்து
அஹமத் நபியின் ஆகிர் சொர்பொளிவினால்
மன்னிக்கும் மலை என்று
அறியப்பட்ட அரபா மலையில் தவம் இருந்து
பிழைகள் எல்லாம் பொருக்கப்பட்டவளே........
முஜ்தலிபாவில் கைகளால் கல்பொறுக்கி
முதன்மை சைத்தானை
இதயம் கொண்டு விரட்டி அடித்தவளே..............
தவாபுல் சியாராஹ்வில் தொடங்கி
தவாபுல் விதாவில் -
எல்லா பாவங்களுக்கும் விடைகொடுத்தவளே.............
பாவங்கள் மன்னிக்கப்பட்டு
இரண்டாம் முறை பிறந்தவளே....
ரஹ்மானின் ரபீக்
ரவ்ழா ஷரீபின் ரஹ்மத்
மக்களின் மன்னர்
மன்னர்களில் மனிதர்...
மஹ்மூது நபியை மதினாவில் தரிசித்தவளே...........
இதயம் நிறைந்த இறுதி தூதரின்
இல்லத்தரசிகளை இதயம் கொண்டு கண்டவளே.............
ஜன்னத்துல் பகீயில் வாழும்
சுவனத்த்துப்பூக்களான
சுந்தர ஷஹபாக்களை
சலாம் சொல்லி சந்தித்தவளே..............
ஹாஜிம்மாவே.............எங்கள்
அழகிய கம்மாவே...................
அத்தனை வரத்திற்க்கும்.................
என்
ஒற்றை முத்தத்தை............
வாழ்த்தாய் வழங்குகிறேன்..............
நீ தழுவிய - இஸ்லாத்தின்
ஐந்தாம் தூணை
நானும் தழுவ
அல்லாஹ்விடம் வரம் வாங்கித்தா..............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross