தும்பியின் வாலில்
நூலைக் கட்டிப் பறக்கவிட்ட
பழைய செயல்களை
மனதை விட்டும்
அகற்றிட முடியுமா?
நெல்லைத் தூவி
தொல்லை கொடுத்து
சிட்டுக்குருவியைப் பிடித்து
கூண்டில் அடைத்தது
உள்ளம் மறக்காத ஒன்று!
கொச்சை மொழி பேசும்
பச்சைக் கிளியைக்
கொஞ்சி மகிழ்ந்த
காலத்தை மனம் மறவாது!
சிரம் உயர்த்திப் பார்த்து
மரம் ஏறி
காகத்தின் முட்டையை
எடுத்த சம்பவத்தை
கரம் நினைத்துப் பார்க்கின்றன!
வீட்டு மடைக்குள் வைத்து
பட்டாசை வெடித்துவிட்டு
ஓடி ஒளிந்த செயல்கள் இன்று
தேடி வந்து நினைவூட்டுகின்றன!
செல்லச் சண்டையிட்டு - அதை
மெல்ல மறந்துவிட்டு
நட்பை மீண்டும் தொடர்ந்த காட்சி
மனதில் படரும் சாட்சி!
தோளுக்கு மேல் கரம்போட்டு
மச்சான் மக்காயென்று
உரிமைக் குரல் முழங்கிட
மகிமை பொங்கப் பழகியதை
மண்ணறை செல்லும் வரை
மனம் என்றுமே மறவாது!
என் இனிய
இளம்பருவ நண்பர்களே!
சிந்துகின்ற கண்ணீரோடு
சிந்திக்கின்றேன் இந்நாளில்!
சிறகு முளைத்த
பறவை போல் - இன்று
பறந்து சிதறிக்கிடக்கும்
உங்களை மீண்டும் சந்தித்து
மகிழ்வென்னும் ஆனந்தக் கடலில்
நீராடுவது எந்நாளோயென்று
ஏங்குது என் மனது!
இது எப்படி சாத்தியமாகும்?
வல்லிறையேகன் நாடினால்
என் நாட்டம் நிறைவேறும்!
இதுவே உண்மை சத்தியமாகும்!!
என்றே நன்றே கூறியவனாய்
நிறைவு செய்கின்றேன்
என்னிளமைக் காலத்தின்
இந்த நினைவுக் கவிதையினை!
முன்னால் சென்றுவிட்ட
முன் நாட்களை நண்பா
உன் வெண்பாவால்
முன்னால் காண்பித்திருக்கிறாய்.
விழிவழிகிறது கவி பொழிகிறது
மலர் தூவி தாவியணைக்கிறது
தேன் திணைவளைகிறது
மனைவாழ்கிறது துணை படர்கிறது,
நெய்யாக நீயுருகி ஏற்றிய விளக்கால்
இருள்மறைந்து உன் இல்லம்
சுடர்விட்டஒளி நிறைந்திருக்கிறது
களை களையெடுக்கப்பட்டிருக்கிறது
கலை கலைகட்டி முலையிட்டிருக்கிறது
நீ முன்மொழியப்படுகிறாய்
ஆமாம்
எங்கஅப்பா எங்க வாப்பா
எங்கமாமா எங்ககாக்கா
எங்க மச்சான் எங்க தம்பி
உன்னால்தான் எல்லாம்
உறவின் உள்ளம்பூரிக்க
அன்போடு அழைக்கப்படுகிறாய்
நம்மைத்தாலாட்டிய அன்னையையும்
நம் தியாகத்தால் தான் தல்லாட்டமுடியும்.
சொல்லால் முள்ளாய்த்தைக்கும்
அரவுகளுக்கிடையில்
முல்லையாய் வருடியிருக்கிறாய்
நினைவுகள் வடமாய்த்தொடர
படமாய்அசைகிறது
படமாகிடவில்லை
பாடமாகிப்பாடமாகியிருக்கிறது
நாம் இடம் மாறியபோதும்
உணர்வுகள் முடமாகிப்போய்
தடமாறிடவில்லை
மடமாகவே திறந்திருக்கிறது
அல்ஹம்துலால்லாஹ் .
இன்ஷா அல்லாஹ்
மற்றுமொரு பாமலையோடுவா
நண்பா
நானுமொரு பூமாலையோடு காத்திருக்கிறேன்.
என்றும் நினைவலைகளோடு.
இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.
இறைவன் மிகப்பெரியவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross