இந்த கவிதை எழுத்து மேடை பகுதியில் 29-12-2012 அன்று வெளியானது. அப்பதிவினை காண இங்கு அழுத்தவும் [http://kayalpatnam.com/columns.asp?id=79]
-----------------------------------------
கண்களை சற்றே மூடிட வேண்டும்.
காட்சிகள் எல்லாம் மறைந்திட வேண்டும்.
கயமையும் பொய்மையும் நாட்டியம் ஆடுது
நீதியும் நேர்மையும் கனவாய்ப் போனது.
ஏறுது பாரம் பேப்பரைப் படித்தால்
இறங்கிடுமா வெறும் கண்ணீர் வடித்தால்?
இதுதான் விதியென அனைவரும் இருந்தால்
திருந்திடுமோ நம் பாரத தேசம்?
மகளின் கற்பை திருடிய தகப்பன்
மருமகள் கழுத்தை அறுத்தான் மாமன்
ஓடும் காரிலும் பஸ்சிலும் காமம்
ஒன்னரை வயது பிஞ்சிடம் வன்மம்.
ஏறுது பாரம் பேப்பரைப் படித்தால்
இறங்கிடுமோ வெறும் கண்ணீர் வடித்தால்?
வயல்வெளி வரப்பில் வாடும் பயிர்கள்
விதைப்பவன் கழுத்தில் ஆடும் கயிறுகள்
இருந்தும் நீர்தர மறுத்திடும் அரசுகள்
இந்தியா ஒன்றென முழக்கும் முரசுகள் !
கண்களை சற்றே மூடிட வேண்டும்
காட்சிகள் எல்லாம் மறைந்திட வேண்டும்.
பள்ளிக் குழந்தைகள் விபத்தில் சாவு
பன்றிக் காய்ச்சலில் பலபேர் காவு
மாத்திரை மருந்திலும் கலப்படம் பாரு
மருத்துவ மனைகளில் லஞ்சம் ஜோரு!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross