இந்த கவிதை எழுத்து மேடை பகுதியில் 11-6-2013 அன்று வெளியானது. அப்பதிவினை காண இங்கு அழுத்தவும் [http://kayalpatnam.com/columns.asp?id=89]
-----------------------------------------
பறந்து விடாதே மண்டேலா...
பறந்து விடாதே.....
வெள்ளை இருட்டினை
விரட்டி அடித்த
கருப்பு வெளிச்சமே
கரைந்து விடாதே!
தூக்கிக் கொன்று விட
தீர்ப்பளித்த அகங்காரம்...
ரத்த வெறியர்களுக்கு மத்தியில்
ரிவோநியாவில் உந்தன் ரீங்காரம்
நிறவெறிக்கெதிரான புதிய ராகம்...
கருப்பும் வெள்ளையும்
கலப்பதுவே குற்றமெனில்
கயிறுகள் கழுத்தினை இறுக்கட்டும்..
அலை அடித்தது ஆப்பிரிக்காவில்
நுரை தொட்டது அகிலமெங்கும்..
இருபத்தேழு ஆண்டுகள்
இரும்புக் கம்பிகளுக்குப் பின்..
சங்கிலிகள் அறுந்த போது
சிறகுகள் முளைத்தது
தென்னாப்பிரிக்க தேவதைக்கு...
கருங்குயிலே பறந்து விடாதே...
கருகும் நிலத்திற்கு நீ தேவை..
கருப்பு நதியே.. உன் நீர் தேவை....
எறிந்து விட்டாய் கிரீடத்தை
ஐந்தே ஆண்டுகளில்......
சொன்னபடி செய்ததனால் உன்
தலைமுடி கூட மணி முடியானது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross