முகநூல் மற்றும் WHATSAPP போன்ற சமூக ஊடக சேவைகளின் வாயிலாக பல சுவராசியமான தகவல்கள் பரப்பப்பட்டாலும், அவ்வப்போது தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன.
அது போன்ற தகவல்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தும் தன்மையை கொண்டில்லா விட்டாலும், ஒரு சில சமயங்களில் அபாயகரமான புரளிகள் வேகமாக பரவும் தளங்களாகவும் அவை அமைந்து விடுகின்றன.
அவ்வாறு கடந்த சில நாட்களாக பரவி வரும் ஒரு தகவல் - மொஹ்தசீம் அலி என்பவர் ஹைதராபாத் நகரின் புதிய காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டதாக தகவல்.
முகநூல் / WHATSAPP வழியாக பரவும் தவறான தகவல்
இது உண்மை அல்ல.
மொஹ்தசீம் அலி - பாடி பில்டிங் விளையாட்டில் பிரபலமானவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பரிசுகள் வென்றவர். பொறியாளரான இவர், ரயில்வே துறையில் பணிப்புரிகிறார்.
1. Re:... posted by:சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) on 14 December 2014 IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38446
இதில் கொடுமை என்ன வென்றால் நன்கு விபரம் தெரிந்தவர்கள் கூட ஆராயாமல் உடனே மற்றவர்களுக்கும் அனுப்பி விடுகின்றார்கள்.
ஒரு சாதாரண அடிப்படை அறிவு கூட போதும். காவல் துறையில் பஞ்சாபிகளை தவிர வேறு யாரும் தாடி வைக்க அனுமதி கிடையாது என்று அறிந்தும், இதை நம்பி பரப்பிவிடுகிறார்கள். ( ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு இருந்தால், அந்த காலத்திற்கு மட்டும் தாடி அனுமதி).
2. Re:... posted by:ummuhani kareem (kayalpatnam) on 16 December 2014 IP: 117.*.*.* India | Comment Reference Number: 38486
பஞ்சாபிகளுக்கு அனுமதி அளிக்கிறார்கள் தாடி வைக்க முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லையே !
இதை பற்றி ஜியாவுதீன் காக்கா கவலையாக ஏதாவது கம்மேன்ட்சில் குறிப்பிட்டிருக்கலாம். அவர்களுக்கு என்ன கவலையோ?
உம்முஹானி கரீம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross