2. Re:...இளமை இனிமை புதுமை posted by:mackie noohuthambi (chennai) on 22 October 2014 IP: 180.*.*.* India | Comment Reference Number: 37866
நமதூர் இளைஞர்களின் கற்பனை வளங்கள் நம்மை அதிர செய்கின்றன. பனை மர கவிதைகள் ஒரு பக்கம். இப்படி அற்புதமான புகைப் படங்கள் ஒரு பக்கம்.
கவிஞர்கள் வாழ்ந்தார்கள் என்று அவர்கள் புகழை பாடிக் கொண்டிருந்த போது ஒரு மஹ்மூது ஹுசைன் நம் வாழ் நாளில் அதை உறுதிப் படுத்தினார். இப்போது இணையதளங்களில் வரும் புகைப்படங்களும் இயற்கையை அற்புதமாக படம் பிடித்து காட்டி அதற்கு விளக்கமும் தரும் இளைஞர்களை பார்க்கும்போது மனம் மிகவும் பூரிப்பு அடைகிறது.
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வித்தியாசமான திறமை வெளிப்படுகிறது. அவர்கள் திறமைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தால் நிச்சயம் அவர்கள் புது புது சாதனைகளை படைப்பார்கள். 21ம் நூற்றாண்டில் நாம் பல் வேறுபட்ட துறைகளில் தடம் பதிப்பவர்களை சாதனை படிப்பவர்களை இந்த உலகுக்கு அறிமுக படுத்த முடியும்.
இவர்களுக்கு ஒரு பரிசு திட்டத்தை அமுல் படுத்தினால் நல்லது. உலக காயல் நல மன்றங்கள் இந்த விஷயத்திலும் தங்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். வித்தியாசமாக சிந்திப்பவர்கள் எதிர்மறையான கருத்துக்களை தங்களுக்கு சாதகமான கருத்துக்களாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள்.
"மாற்று திறனாளிகள்" எதையும் "மாற்றும் திறனாளிகள்" என்று இப்போது அழைக்கப் படுகிறார்கள். அதுபோல் இப்போது சமுதாயத்தில் ஒரு மௌன புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இப்போது எல்லா துறைகளிலும் விழிப்புணர்வு தலை தூக்கி உள்ளது நல்ல முன்னேற்றத்தின் அறிகுறி.
இந்த படத்தில் மின்னலுக்கு ஒரு புதிய விளக்கம். ஒரு இளைஞரின் பார்வையில் மின்னலே ஒரு இனிமையான புதுமையான விஷயமாக இங்கே கூறப் பட்டுள்ளது. அல்லாஹ்வின் படைப்பில் எல்லாமே புதுமைதான். அதை விளங்கி கொள்ள நமக்கு சக்தி இல்லாமல் இருக்கிறது அவ்வளவுதான்.
முஹம்மது முர்ஷிது நவ்ஷாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross