| |
ஆக்கம் எண் (ID #) 18 | | | வியாழன், டிசம்பர் 19, 2013 | | காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்த எழுத்தாளர் கே.எஸ். முஹம்மது ஷூஐப் கட்டுரை! எழுத்தாளர் / சமூக பார்வையாளர் |
| இந்த பக்கம் 2515 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டணம் .காம் முக்கு பதினைந்து வயது பூர்த்தியானதை ஒட்டி எனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதில் சந்தோஷமடைகிறேன். தங்களின் தன்னலம் கருதாத உழைப்பும், முயற்சியுமே இந்த இணையதளத்தை இத்துணைகாலம் கடந்தும் வெற்றிப்படிகளில் நிலைத்திருக்கச்செய்திருக்கிறது (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்).
இன்று காயலின் குரலாக, காயலின் அடையாளமாக, சமூக சீர்கேடுகளைத் தட்டிகேட்க்கும் ஒரு மூத்த குடும்பத் தலைவனின் பொறுப்பும் கடமையும் கொண்டு காயல்பட்டணம்.காம் வெற்றிநடை போடுகிறது எனில் அதன் பின்னணியில் ஏராளமான அதன் வாசகர்களின் நிலைத்திருக்கும் ஆர்வமும். செய்திகளை முந்திக்கொண்டு தரும் தங்களின் வேகமுமே காரணமாக இருக்க முடியும்.
உலகின் பல பகுதிகளிலும் சிதறி வாழும் எண்ணற்ற காயலர்களின் சுவாசமாக, உயிர்மூச்சாக , காயலின் காட்சிகளை அன்றாடம் தரிசிக்கும் ஒரு ஜன்னலாக - எல்லாவற்றுக்கும் மேல் காயல் நகரின் ஆன்மாவாகத் திகழும் தங்களின் இணைய தளம் இன்னும் பல படிகள் மேலேறி உயர உயரச் செல்லவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் (ஆமீன்) |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|