முதலாவதாக தங்களின் 15 ஆண்டு சர்வீஸ் பூர்த்தி அடைந்து 16 லில் அடியெடுத்து வைக்கும் காயல்பட்டணம் டாட் காமிற்கு எனதின் முதற்கண் வாழ்த்துகளோடு எனது கருத்தினை பதிவு செய்கிறேன்.
நிறைகளை என்னைப்போல் வெளிவாழ் காயல் வாசியிடம கேட்டால் உண்மையிலேயே எங்களுக்கு அதிக உள்ளூர் மற்றும் முக்கியமான உள்ளூர் விசயங்களை காயல்பட்டணம் டாட் காமிலிருந்துதான் அறிய முடிகிறது. சுருங்க சொல்லபோனால் காலையில் எங்களின் ஆபீஸ் வேலையை தொடங்குமுன் தங்களின் டாட் காமை எங்களின் கை விரல்கள் அலுத்தி (browse) விட்டுதான் மற்ற வேலைகளுக்கு செல்லும் என்று கூறுவதில் நான் பெருமை படுகிறேன்.
எதிர்பார்ப்பு: முக்கியம் மாணவர்களின் கல்விக்காக தாங்கள் இன்னும் கவனம் செலுத்தலாம். +2 எழுதும் மாணவர்களுக்கு இப்பொழுதே எங்கு எங்கு மருத்துவம் மற்றும் பொறியில் போன்ற ஆல் இந்திய entrance எக்ஸாம் எப்பொழுது உள்ளது, அதற்கொரிய வழிகாட்டுக்களை ஸ்பெஷல் பார்வையாக ஒவ்வொரு வருடமும் வெளியிடலாம்.
உள்ளூர் வாசிகளிடம் நெறைய பேர் நெட் இல்லாத வசதியால் (முக்கியமாக ஏழ்மை மக்கள்) தங்களின் செய்தியினை அறிவதற்கு தாங்கள் ஒரு உள்ளூர் வாரபத்திரியாக வெளியிடலாம். எங்களைபோல் வெளிநாட்டவர்கள் அதற்கு சந்தா செலுத்தி பொது நூலகத்திற்கு அல்லது வீடுகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
குறைகள் என்று சொல்லபோனால் தற்காலங்களில் காயல்பட்டணம் டாட் காமில் வருகின்ற கடல், மழை, பாபநாசம், தாமிரபரணி, மாவட்ட மழை அளவு போன்ற செய்திகளை தினந்தோறம் வெளியிடாமல் வாரத்திற்கு ஒருமுறை வருமேயானால் எங்களை போன்ற நாள்தோறும் படிக்கும் ரசிகர்களுக்கு மற்ற உள்ளூர் செய்தியினை தேடி வேற பிற உள்ளூர் இணையதளங்களை அழுத்தாமல் எங்களின் கைவிரல்கள் வழமைபோல் எப்பொழுதும் தங்களின் காயல் டாட் காமிலேயே அலைபாயும், முன்னுர்மை கொடுக்கும்.
எங்களின் கருத்தினை கேட்கும் அணுகுமுறைக்கு மீண்டும் நன்றி கூறுவதோடு தங்களின் இந்த பொது சேவைக்கும், இந்த காயல்பட்டணம் டாட் காமின் வளர்ச்சிக்கும் இறைவனிடம் கையேந்தும் முகமாக விடைபெறும் உங்கள் வாசகர் அன்பின் மீரான் மூசா, ஜித்தா.
|