Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:03:05 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
ஊடகப்பார்வை
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Next Article
ஆக்கம் எண் (ID #) 1
#KOTWART041
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 5, 2013
தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பு சச்சினை புகழக்கூடாது என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்ததா?
இந்த பக்கம் 1689 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நவம்பர் 28 அன்று, பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இயக்கமான - தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பு - அண்மையில் கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை பாகிஸ்தான் ஊடகங்கள் புகழக்கூடாது என எச்சரித்ததாக செய்திகள் வெளியாகின.

அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித் என்பவரை மேற்கோள்காட்டி துவக்கமாக இணையதளங்களிலும், பின்னர் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களிலும் இச்செய்தி உலகெங்கும் வெளியானது.

பி.பி.சி. இணையதளம் வெளியிட்ட செய்தி
http://www.bbc.co.uk/news/world-asia-25135586


என்.டி.டி.வி. இணையதளம் வெளியிட்ட செய்தி
http://sports.ndtv.com/cricket/sachin/news/217551-stop-praising-sachin-tendulkar-taliban-warns-pakistani- media


சிட்னி மார்னிங் ஹெரால்ட் இணையதளம் வெளியிட்ட செய்தி
http://www.smh.com.au/world/sachin-tendulkar-taliban-warns-media-to-stop-praising-little-master-20131129 -2ygzg.html


தொலைக்காட்சிகளும் இது குறித்த செய்திகளை வெளியிட்டன. தொலைக்காட்சி செய்திகளில் - சாஹிதுல்லா சாஹித் பேசிய வாசகங்கள் என வீடியோ காட்சிகளும் வெளியாகியிருந்தது.

இந்தியாவின் ZEE NEWS தொலைக்காட்சி செய்தி
http://www.youtube.com/watch?v=x4L7KVDBAx4


இந்தியாவின் NEWS 24 தொலைக்காட்சி செய்தி
http://www.youtube.com/watch?v=JPQub6jRBsU


சாஹிதுல்லா சாஹித் பேசிய வாசகங்கள் என YOUTUBE இல் வெளியான சுமார் 1 நிமிட அசைப்படம்


மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊடகச் செய்திகளில் இடம்பெற்ற தகவல்கள் என்ன?

இச்செய்தியை வெளியிட்ட தி இந்து தமிழ் நாளிதழின் (நவம்பர் 29, 2013) வாசகங்களை காண்போம்:

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் 'தெஹ்ரிக் இ தாலிபன்' தீவிரவாதிகள் அமைப்பு, பாக். ஊடகங்களுக்கு எச்சரிக்கை வீடியோ பதிவு ஒன்றினை அனுப்பியுள்ளது.

அந்த வீடியோவில் தாலிபன் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித் பேசும் போது: கடந்த 3 வாரங்களாக பாகிஸ்தானின் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை கண்காணித்து வருகிறோம். சச்சின் டெண்டுல்கர் குறித்து பக்கம் பக்கமாக கட்டுரைகளும், தொலைக்காட்சிகளில் சிறப்பு செய்திகளும் தினமும் வந்து கொண்டு இருக்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை இப்படிக் கொண்டாடுவது பாகிஸ்தானுக்கு இழுக்கு. சச்சின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரை இப்படிக் கொண்டாட வேண்டாம். அவர் ஒரு இந்தியர் என்பதை பாகிஸ்தான் மறந்துவிட வேண்டாம்.

அதே வேளையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் தோற்றதற்க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், அணி வீரர்களையும் பாகிஸ்தான் ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளது. சொந்த நாட்டு வீரர்களை இப்படி விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்செய்தியை தொடர்ந்து - தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பு குறித்து பல விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.

பரபரப்பான செய்திகளை மையமாக வைத்து விளம்பர பலகைகள் வைக்கும் அமுல் நிறுவனத்தின் பலகை



ஊடகங்கள் வெளியிட்டவாறு தான் அச்சம்பவம் நடந்ததா? இப்போது பார்க்கலாம்.

தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹிதின் அன்றைய தின பேட்டி VIMEO வீடியோ பகிர்வு இணையதளத்தில் - 16 நிமிடங்கள், 40 வினாடிகள் நீளத்தில் - வெளியாகிவுள்ளது.
http://vimeo.com/80132898


இந்த வீடியோ பதிவில் துவக்கமாக - அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர், பாகிஸ்தான் அரசாங்கத்துடனான அமைதி பேச்சு வார்தைக்குறித்தும், நவம்பர் 1 அன்று அமெரிக்க படையின் டிரோன் விமான தாக்குதலில் கொல்லப்பட்ட அவ்வமைப்பின் தலைவர் ஹகிமுல்லாஹ் மசூத் மரணத்தால் பேச்சுவார்த்தை வாய்ப்புகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறித்தும், அவ்வமைப்பின் புதிய தலைவர் முல்லாஹ் பஸ்லுல்லாஹ் - தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து முடிவெடுப்பார் என்றும் கூறுகிறார். இது - 6:26 நிமிடம் வரை நீடிக்கிறது.

அதனை தொடர்ந்து, சமீபத்தில் பாகிஸ்தானில் சர்ச்சையை கிளப்பிய, அந்நாட்டின் ஜமாத்தே இஸ்லாமி கட்சியின் தலைவர் முனவர் ஹுசைனின் பேச்சு குறித்து - தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித் கருத்துக்கள் கூறுகிறார்.

அமெரிக்க படையின் டிரோன் விமான தாக்குதலில் ஹகிமுல்லாஹ் மசூத் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, முனவர் ஹுசைன் - செய்தியாளர்களிடம், மசூதை - ஷஹீத் என வர்ணித்திருந்தார். மேலும் - அமெரிக்காவுக்கு துணைப்புரிந்து மரணிக்கும் பாகிஸ்தான் ராணவ வீரர்களை ஷஹீத் எனக்கூற முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ பதிவில் - முனவர் ஹுசைனின் பேச்சை பாராட்டி பேசிய தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித், தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பினரும் இஸ்லாத்திற்காக உயிர் தியாகம் செய்வதாகவும், அவர்களை ஷஹீத் எனக்கூறுவது சரி என்றும் பேசுகிறார். இது - 9:14 நிமிடம் வரை நீடிக்கிறது.

இவ்வீடியோவின் 9:14 நிமிடங்களில் இருந்து 11:30 நிமிடங்கள் வரை - சச்சின் குறித்த கருத்துக்கள், பிற விசயங்களுடன் இணைந்து, இடம்பெறுகின்றன.

அதில் - சாஹிதுல்லா சாஹித், இஸ்லாத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் தாலிபான்கள் கொல்லப்பட்டாலும் அவர்களை சஹீத் என சொல்லக்கூடாது எனக்கூறுவது, எப்படி இருக்கிறது என்றால் - அண்மையில் ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் - நல்ல விளையாட்டு வீரர் என்றாலும், அவர் இந்தியர் என்பதால் அவரை புகழக்கூடாது என்றும், ஆனால் - பாகிஸ்தான் நாட்டு விளையாட்டு வீரர் மிஸ்பாவுள் ஹக் சரியாக விளையாடாவிட்டாலும் - அவர் பாகிஸ்தான் விளையாட்டு வீரர் என்பதால் புகழப்பட வேண்டும் எனக்கூறுவது போல் உள்ளது என்றும் கூறுகிறார்.

பெரும்பாலான ஊடகங்களில் வெளியான செய்திக்கு எதிர்மாற்றமாக இவ்வீடியோவில் சாஹிதுல்லா சாஹித் பேசுகிறார்.

சச்சினை ஆதரித்து செய்தி வெளியிடக்கூடாது என செய்தி தொடர்பாளர் சாஹிதுல்லா சாஹித் பாகிஸ்தான் ஊடகங்களை மிரட்டியதாக Press Trust of India போன்ற செய்தி நிறுவனங்கள் ("Stop praising Sachin Tendulkar: Taliban to Pakistan media") முதலில் செய்தி அனுப்பின. ஒரு சில மணி நேரங்களில் அச்செய்தி - உலகின் பிரதான ஊடகங்களில் வெளியாயிற்று.

அச்செய்தியினை மாற்றி Taliban invoke Sachin Tendulkar to defend 'martyr' tag for militants ("தீவிரவாதிகளுக்கு சஹீத் என்ற பெயர் வழங்குவதை நியாயப்படுத்த தாலிபான் சச்சின் பெயர் பயன்படுத்துகிறது") என்ற தலைப்பில் - Press Trust of India பின்னர் செய்தியை அனுப்பியது. இது ஊடகங்களால் - பெரும் அளவில் கண்டுக்கொள்ளப்படவில்லை - ஒரு சில ஊடகங்களை தவிர.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் விளக்கத்துடன் வெளியான செய்தி



--------------------------------------------------------------------------

காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் ஊடகப்பார்வை என்ற தலைப்பில் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவர உள்ளன. இதில் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் போன்ற மரபார்ந்த ஊடகங்கள், இணையதளங்கள், முகநூல் போன்ற நவீன் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகள், அவைகள் குறித்த ஆய்வு கட்டுரைகள் இடம்பெறும்.

Next Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved