Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:13:52 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 104
#KOTWART01104
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 3, 2016
வாப்பா...! கொஞ்சம் பேசக் கூடாதா...?
இந்த பக்கம் 4560 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமகால வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்திட பெரும்பாலும் பெண்களை வைத்து காணக் கூசும் காட்சிகளையே தொலைக்காட்சி விளம்பரங்களாய் தயாரிக்கின்றன.

அதில் வரக் கூடிய காட்சிகள் வரம்பு மீறியதாகவும், அந்தப் பொருளோடு எவ்வித தொடர்பின்றியும் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இத்தகைய பண்பாடற்ற சந்தைக் கலாச்சாரச் சூழலில் இப்படி ஒரு அழகான தொலைக்காட்சி விளம்பரமா?

பெண்களை அரை குறை ஆடையோடு அசிங்கப்படுத்தாமல் அதே நேரம் சமூக மேம்பாட்டிற்கான நல்ல ஒரு சிந்தனையை {MESSAGE} ஒரு விளம்பரத்தினூடாக மக்கள் மனங்களில் விதைக்க முடியுமா?

நிச்சயம் முடியும்! என்று சொன்ன அந்தத் தனியார் வர்த்தக நிறுவனத்தின் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை தற்செயலாகக் காண நேர்ந்தது ...

அது ஒரு அழகிய வீட்டின் அலுவல் அறை....

கணணி முன்னால் கருமமே கண்ணாக
அலுவலக வேலையில் மூழ்கியிருக்கும்
கட்டிடக் கலைஞரான ஒரு தந்தை...

அவரை நோக்கி கவலை தோய்ந்த முகத்துடன் ஓடோடி வரும்
ஏழு வயதே மதிக்கத் தக்க அவரது மகள்....
அங்கிருக்கும் நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொள்கிறாள்.



தந்தையின் முகத்தையே ஏக்கத்துடன் உற்று நோக்கிய வண்ணம்
அங்குள்ள மேசையில் கிடக்கும் ஒரு பென்சிலை
தன் பிஞ்சுக் கரத்தால் முன்னும் பின்னும் உருட்டி விளையாடிக் கொண்டே
தன் தந்தையுடன் உரையாடத் தொடங்குகிறாள்
அந்தக் குழந்தை.... இப்படி

அப்பா...!

ம்ம்ம்...

அப்பா! வேலையா?

ம்ம்ம்...

முக்கியமான வேலையா?

ம்ம்ம்...

என்ன வேலை அப்பா..?

என் வாடிக்கையாளரின் புதிய வீடு ஒன்றை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன்.... ஏன் ?

அப்பா..! அப்பா..! அந்த வீட்டிலாவது இதைப் போன்ற அலுவல் அறை ஒன்றை வைக்காதீங்கப்பா ...

ஏன்..?

அப்பத்தான் அந்த வீட்டிலுள்ள அப்பாவாவது அவரோட மகளை கண்டும் காணாமல் இருக்க மாட்டார்...

என்று சொன்னதும் நொறுங்கிப் போன அந்தத் தந்தை தன் அன்பு மகளை அப்படியே அள்ளி அணைத்து ஆரத் தழுவி முத்தமிடுகிறார்.







தனக்கென ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தை இன்னொன்று விழுங்கி விட்டதை தன் தந்தையிடம் எவ்வளவு நேர்த்தியாக உணர்த்தி விட்டாள் அந்தச் சின்னஞ் சிறுமி.

இதனை ஒரு சாதாரண விளம்பரப் படம் என உதறித் தள்ளிவிட முடியவில்லை.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் குழந்தைகளில் பலருக்கும் தம் உரிமையைக் கேட்டுப் பெற வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். ஆனாலும் அதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

இந்தத் தந்தையைப் போவே நம்மில் சிலர் நம் குழந்தைகளைப் புரிந்து கொள்ள மறந்து விடுகிறோம். அன்றாடம் குழந்தைகளில் பலர் தம் பிஞ்சு உணர்வுகளை சுமந்த வண்ணம் தங்கள் அன்புக்குரிய பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள ஆவலாய் காத்துக் கிடக்கின்றனர்.

ஆனாலும் சிலர் தங்கள் குழந்தைகளின் காத்திருப்புக்களை கண்டு கொள்வதில்லை
அல்லது அவர்களால் அதற்கான நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனம்.

பாடசாலை சென்று வரும் ஒவ்வொரு குழந்தையும் தன்னில் பதிந்து கொண்ட அன்றாட வகுப்பறை நிகழ்வுகளை, அதை ஒட்டிய அனுபவங்களை தன் நம்பிக்கைக்குரிய தந்தையிடம் (SHARE) பகிர்ந்து கொள்ள ஆர்வமுடன் வீடு வருகின்றனர். தன் சின்னச் சின்னச் சாதனைகளை மட்டுமின்றி அதன் ஆழ்மனதில் புதைந்திருக்கும் சின்னச் சின்ன வேதனைகளையும் சேர்த்தே. இத்தகைய உணர்வுகளை அது யாரிடம்தான் கொண்டுபோய் சொல்லும்...? அது எப்படித்தான் ஆறுதல் அடையும்? பாவம்.... அந்தப் பிஞ்சுகள்!!!



மனச் சுமைகளை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புகள் மறுக்கப்படும்போதும் அதற்கான வாசல்கள் மூடப்படும்போதும் குழந்தைகள் வடிகால் தேடி பாதை மாறிப் போய் விட நாமே காரணி ஆகிவிடும் அபாயத்தை இங்கே மறுப்பதற்கில்லை.

தம் சாதனைகளை தங்கள் தந்தையரிடம் மட்டுமே காதோடு காதாகச் சொல்ல வேண்டும். அவரின் பாராட்டு (LIKE) மழையில் நனைந்திட வேண்டும் என்ற கனவோடு ஆசை ஆசையாய் ஓடோடி வருகின்றனர்.

அவ்வாறான பொழுதில் அந்தத் தந்தையோ நவீன தொடர்பு சாதனத்தில் தன்னைத் தொலைத்திருப்பார். ஒன்று முகநூலில் முகம் புதைத்திருப்பார். அல்லது வலை தள மெங்கும் வலம் வந்து கொண்டிருப்பார். கரை கடந்து கடல் கடந்து யாரோ ஒருவரோடு அளவளாவிட ஆன்லைனில் அசராமல் காத்திருப்பார்.



படித்ததை, பார்த்ததை, பிடித்ததை, பிடிக்காததையும் SHARE செய்வார். அவர் பகிர்ந்ததை, சரியோ பிழையோ LIKE செய்வார். அதற்கென அன்றாடம் மணிக்கணக்கில் நேரம் ஒதுக்குவார். ஆனால் தான் கண்டதை, கேட்டதை SHARE செய்து LIKE தேடும் ஆவலில் தன் குழந்தை தனக்காக காத்திருப்பதை கண்டு கொள்ள மறந்திடுவார்.

பொதுவாக குழந்தைகளின் உலகம் ஆனந்தமானது அதில் அவர்கள் உலா வரும் அழகே அலாதியானது. அதிலும் தம் தந்தையரிடம் தனக்குள்ள முன்னுரிமையை எளிதில் விட்டுக் கொடுப்பதில்லை. அதனை எதிர்பார்ப்பதும் இயல்பு. அதே வேளை அவர்களின் முன்னுரிமை மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் மலரினும் மெல்லிய அந்தப் பிஞ்சுகளின் உணர்வுகள் ஊனமாகிப் போகாதா ? அது பிரசவிக்கும் மன வேதனையை எந்தக் குழந்தையால் தாங்கிக் கொள்ள முடியும்?

நம் நேசத்துக்குரிய குழந்தைகளை நாம் வேண்டுமென்றே காயப்படுத்த மாட்டோம். இருந்தபோதும் நம்மை ஆக்கிரமித்துள்ள தொடர்பாடல் எனும் நவீன போதை எத்துனை ஆபத்தானது. அது நம்மை எந்தளவு அடிமையாக்கி தனிமைப்படுத்தி இருப்பதை நாம் இன்னும் உணரவில்லை. இல்லையா?

நம் வீடுகளைப் பாருங்கள். ஒவ்வொருவரிடமும் TAB என்றும் SMART PHONE என்றும் வித விதமான நவீன டிஜிட்டல் ஆயுதங்கள். இவைகளை கையில் எடுத்து விட்டால் குனிந்த தலை நிமிராது . நம் பேச்சும் மூச்சும் நின்று போய் விடும். மௌன விரதம் அனுஷ்டிப்பதைப் போல் வீட்டில் அப்படி ஒரு மயான அமைதி.



ஆளுக்கு ஒரு மூலையில் போனோடு புதைந்து போவதில் அப்படி என்ன இலாபம்? மனைவியோ கணவனோ ஒருவர் மற்றவரை அழைத்தால் அது அவர்களின் காதுகளில் விழுவதில்லை. கொஞ்ச நேரம் முகத்தோடு முகம் பார்த்து பேச முடிவதில்லை. எங்கே ஒரு உறவுக்குள் பேச்சு சுருங்கி விடுகிறதோ அங்கே விரிசல் விழத் தொடங்கி விடும். அல்லவா ? .

உறவுகளை வலுப்படுத்திட, குடும்பத்தோடு கூடியிருந்து அளவளாவிய அருமையான பொழுதுகளெல்லாம் பழங்கதையாகிப் போனதோ... எனப் புலம்பத் தோன்றுகிறது.

இந்த நவீன தொடர்பாடல் வசதி பல்வேறு நன்மைகளை இந்தச் சமூகத்திற்கு வழங்கி இருக்கும் அதே வேளை தூர இருப்பவர்களை கிட்டேயும் , நெருங்கி இருப்பவர்களை தொடர்பு எல்லைக்கு வெளியேயும் தள்ளியிருக்கிறது . இது நவீன சாதனங்களின் பிழை அல்ல . மாறாக நேரத்தை, நவீனத்தை, முறையாக கையாளத் தெரியாமல் தினறும் அறியாமையின் விளைவு.

இன்றைய நவீன வாழ்வியல் முறையில் குடும்பத்தினரோடு கூடி இருந்து பேசி மகிழ்ந்திட மட்டுமின்றி குறித்த நேரத்தில் நம்மைப் படைத்த இறைவனை வணங்கி வழிபட நேரம் ஒதுக்குவதும் நமக்கு மிகக் கடினமான காரியமாய் போய் விட்டதே.. ! இல்லையா ? இதிலிருந்து நாம் எந்த அளவுக்கு வரையின்றி, முறையின்றி நவீனத்தில் சிக்கித் தொலைந்து கொண்டிருக்கிறோம் ? என்பது புரிகிறதல்லவா?

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்று சொல்லும் இது போன்ற பாலர் பாடங்களை புரட்டிப் பார்ப்பது சில வேளை நம்மில் சிலருக்குப் பயன் தரக்கூடும் .

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,

"இறைத் தூதர் அவர்களே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்?” என்று கேட்டார்.

"உன் தாய்" என்றார்கள்.

“பின்பு யார்?” என்று கேட்டார். "உன் தாய்" என்றார்கள்.

பிறகு யார்? என்று கேட்டார். "உன் தாய்" என்றார்கள்.

பிறகு யார் ? என்று கேட்டார். "உன் தந்தை" என்று கூறினார்கள். (புஹாரி :5971)

மேற்கண்ட நபிமொழி பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் பேணப்பட வேண்டிய உறவு முறையை எவ்வளவு அழகாக எடுத்தியம்புகிறது பாருங்கள்? சமகால முதியோரிடம் கொஞ்சம் காதுகொடுத்துப் பாருங்கள். உங்களின் தேவை என்ன? என்று. அது உங்கள் தாயாகவோ தந்தையாகவோ இருக்கலாம். அவர்கள் பொருளை, பணத்தை, கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. மாறாக உங்கள் பொழுதை, பாசத்தை அவர்களுடன் பகிரக் கேட்பார்கள். உங்களின் அருகாமை, அரவணைப்பை மட்டுமே வேண்டி நிற்பார்கள்.

மனிதனின் இரண்டாவது குழந்தைப் பருவத்தை அல் குர் ஆன் இப்படிச் சொல்கிறது. "அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரை விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர்" (அல் குர்ஆன் 22:5)

இத்தகைய தள்ளாமையின் விளிம்பில் நிற்கும் நம் பெற்றோரின் இறுதிப் பகுதியில்எஞ்சி நிற்கும் எதிர்பாப்புகள் என்னவாய் இருக்கும்? சற்றே சிந்தித்துப் பார்த்ததுண்டா...?

பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனாலும் நீங்கள் அருகிருந்து ஆதரவாய் பேச வேண்டும் என ஆவலாய் துடிப்பார்கள். தொலை தூரத்தில் இருந்தால் தொலை பேசியினூடாவது பேச வேண்டும் எனத் தவிப்பார்கள். உங்கள் முகம் காண நீங்கள் வரும் நாளை எண்ணி ஏக்கத்துடன் காத்திருப்பார்கள். இது போன்ற சின்னச் சின்ன ஆசைகளே அவர்களின் இதயத்தை இயங்கச் செய்யும் பிராணவாயு. ஏனெனில் நீங்களே அவர்கள் பெற்றெடுத்த செல்வங்கள்.

இன்று நமது குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் வேண்டி நிற்கும் பாசப் பிணைப்பை நேரப் பகிர்வை நமது பெற்றோர் அவர்களின் குழந்தைகளிடம் தேடி நிற்கின்றனர். இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள். நாளை ஒரு நாள் நாமும் முதுமை அடையலாம். இன்றைய நம் பெற்றோரின் தேடல் நாளை நமது தேடலாகவும் மாறலாம். அந்தத் தேடலின் இலக்காக இருக்கப் போவது நம் அன்புக்குரிய குழந்தைகளே...!

அவர்கள் நம்மிடம் வேண்டி நிற்கும் நேசத்தை, நேரத்தை இன்று நாம் சரியான முறையில் பகிர்ந்து கொண்டால் நாளை நமக்கு வேண்டியதை அவர்களும் பகிர்ந்து கொள்வார்கள். அத்தோடு அவர்களின் இளம் பிராயம் தொட்டே இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை கற்பிப்பதினூடாக முதுமையில் நம் நிலை அறிந்து நம்மைப் புரிந்து நடக்கும் நன் மக்களாக உருவாக்கலாம் இன்ஷா அல்லாஹ். இப்போதே அதற்கான விதை விதைக்கப்பட வேண்டும்.

இருந்த போதும் சமகால நவீன தொழிற் நுட்பத்தின் அசுர வளர்ச்சி இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை....

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) on 03 April 2016
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43432

"Assalamu alaikum."

Masha Allah. Fruitful Topics and Must be followed by every one. Thank you soooooo much Buhari Kakka.

All the best!!!

SUPER IBRAHIM S.H.
RIYADH. K.S.A.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Facebookஇல் பதிந்த எனது கருத்தை இங்கும் பதிவிடுகிறேன்...
posted by: S.K.Salih (Kayalpatnam) on 03 April 2016
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43433

08.03.2015. அன்று எனது facebook பக்கத்தில் நான் வெளியிட்ட (இக்கட்டுரையுடன் தொடர்பானதாக நான் கருதும் எனது) பதிவு:-

மூன்று நாட்களுக்கு முன் ஒருநாள் மாலையில் என் ஐந்து வயது (மூன்றாவது) மகள் சித்தி ருஸ்னா என்னிடம் வந்தாள்...

“வாப்பா! எங்க டீச்சர் எனக்கு பரீட்சை வச்சி, மார்க் போட்டிருக்காங்க... காட்டுறேன்...”

என் பதிலை எதிர்பார்க்காமலேயே சென்று, தன் பள்ளிப் பைக்குள் கைவிட்டு, ஒரு பாடக் குறிப்பேட்டை எடுத்து வந்து, அதன் துவக்கப் பக்கத்திலிருந்து காண்பித்தாள்...

“பார்த்தீங்களா வாப்பா இதுல 10க்கு 10... இதுல V.Good...”

இப்படியே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பக்கங்கள்...

அவள் காட்டியது அனைத்தும் இவ்வருட துவக்கத்திலிருந்து உள்ளவை.

“இத்தனையையும் இப்போது காட்டுகிறாளே... அதுவும் இந்த வருடத் துவக்கத்திலிருந்து உள்ளதையெல்லாம்...??? என் வேலையையெல்லாம் விட்டுவிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறதே...” என்று என் மனம் சொன்னபோதிலும், “எது எதற்கோ நேரம் ஒதுக்குகிறோம்... என் பாச மகளுக்காக சில நிமிடங்கள் ஒதுக்குவதற்கு இவ்வளவு யோசனையா?” என என்னை நானே கண்டித்தவனாக அவள் காண்பித்ததையெல்லாம் பத்து நிமிடங்களில் பார்த்து முடித்துவிட்டு, அன்பாய் அவளை முத்தமிட்டுப் பாராட்டினேன்.

அவள் பிறந்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான்காவது மகளும் பிறந்துவிட்டாள். எனவே, மூன்றாமவளான இவள் என்னையுமறியாமல் பலமுறை கண்டுகொள்ளப்படாமல் இருந்திருக்கிறாள்... அதை நான்தான் உணரவில்லையே தவிர என் அணைப்பிற்காக அவள் அன்றாடம் ஏங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவ்வப்போது உணர்வேன். உடனேயே அவளைக் காரணமின்றி அழைத்து, முத்தமிட்டோ - அணைத்தோ என் பாசத்தைப் பதிவு செய்வேன்.

தான் பெற்ற மதிப்பெண்களை என்னிடம் அவள் காண்பித்த அந்நாளிலும் காலையில் இதுபோன்ற உணர்வு மிகுதியால் அவளையணைத்து முத்தமிட்டிருந்தேன். (அன்றாடம் பள்ளி செல்லும்போது என் மக்களுக்கு நானும், அவர்கள் எனக்கும் அளிக்கும் முத்தம் வழமையானது... அதையும் தாண்டிய சிறப்பு முத்தம்தான் இது!) பள்ளிக்கூடம் சென்ற பிறகு அதையே நினைத்துக் கொண்டிருந்தாள் போலும். அதுதான் மாலையில் அவளுக்கு அத்தனை ஆர்வம் என்னிடத்தில் பேச!!!

ச்சே... எத்தனை நாட்களை இழந்திருக்கிறேன்...? நம் குழந்தையிடம் நாம் மனம் விட்டுப் பேசினால், அது தன் மனதில் உள்ளதையெல்லாம் நம்மிடம் திறக்கும் என்ற உண்மையை உணர்ந்தும் மறந்திருந்த எனக்கு, உரிய நேரத்தில் மீண்டும் உணர கிடைத்த வாய்ப்பாகவே இந்நிகழ்வைக் கருதுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...குழந்தைகள்
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 03 April 2016
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43434

உம்மா.. ஸே.. மாஷா அல்லாஹ்...என்ற சகோதரி உம்மு நுமைராவின் கட்டுரையை தொடர்ந்து இந்த ஆக்கம் வெளியாகியுள்ளது. அது ஒரு தாயின் உணர்வுகளின் வெளிப்பாடு. இது ஒரு தொழிலதிபரின் இதயம் பேசுகிறது. விளம்பரங்களை எவ்வளவு உன்னிப்பாக கவனித்து வருகிறார் இவர் என்பது தெளிவாகிறது .

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.அதனதன் கதைகளை. ஒவ்வொருவருக்குள்ளும் இந்த குழந்தைகளின் தாக்கம் இருக்கவே செய்கிறது. ஆனாலும் இந்த வலைத்தளங்கள் முக நூல்கள் அவற்றை மழுங்கடிக்க செய்து விடுகிறது என்பதே உண்மை.

உறவினர்களை வாருங்கள் என்று முகம் மலர அழைக்க முடியவில்லை. முகநூலில் முகம் புதைத்துக் கொண்டிருக்கிறோம். தொலைக் காட்சியிலே தொடர் நிகழ்ச்சி பார்க்கும்போது முக்கியமான நபர்களைக் கூட நாம் கண்டு கொள்வதில்லை.

குழந்தைகள்...அல்ஹம்து லில்லாஹ். அவர்களின் பேச்சைக் கேட்பதற்கும் பிஞ்சு மொழிகளை பகிர்ந்து கொள்வதற்கும் கூட அல்லாஹ்வின் கருணை வேண்டும்.

எனது பேத்தி 2 ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு அவளது தாய் உணவு வூட்டுகிரார்கள் மார்க்கக் கல்வி ஊட்டுகிறாள். பள்ளி பாடங்களையும் ஓட்டுகிறார்கள். அப்பா பாருங்கள் எனது GRADE SHEET என்று திறந்து காட்டினால். எல்லாமே A GRADE அள்ளி அணைத்துக் கொண்டு முத்தமிட்டு விட்டு அதிக பிரசங்கி தனமாக ஒரு வார்த்தை சொன்னேன். புள்ளே, உனது உம்மாவோடு நீ எப்போதும் அன்பாக இருக்க வேண்டும். கோபப் படக் கூடாது..அவள் படித்து தந்ததால்தான் நீ இவ்வளவு GRADE எடுத்திருக்கிறாய் என்றேன்.

உடனே அவள் அடுத்த வார்த்தை உதிர்த்தாள்,''என்ன அப்பா சொல்றியோ உம்மா என்னதான் படித்து தந்தாலும் நான்தானே பள்ளிக் கூடத்தில் போய் எழுத வேண்டும் உம்மாவா வந்து எழுதுவா?''..நான் ஆடிப் போனேன். என்ன அழகாக பேசுகிறாள்...விவரமாக, நெற்றி யடி என்பார்களே அப்படி. மாஷா அல்லாஹ்.

கடற்கரையில் ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்தவர் உட்கார்ந்து கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன சுகமாக இருக்கிறீர்களா என்று என்னை அறிமுகம் செய்து கொண்டு என்ன அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் யாரை தேடுகிறீர்கள் என்றேன். ஒன்றுமில்லை. இங்கு எவ்வளவு குழந்தைகள் ஓடி ஆடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பெற்றோருடன் கொஞ்சி குலாவிக் கொண்டு, எனக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போய் விட்டதே என்று ஓர் ஏக்க பெருமூச்சு விட்டார். எனது கண்களில் நீர் கசிந்து விட்டது. அல்லாஹ்வுடைய நாட்டம் கவலைப் படாதீர்கள் என்று சமாதானம் சொன்னேன்.அந்த வலி 70 வயதிலும் அவரை பாடாய் படுத்துகிறது...

பாரா முகமாய் இருக்கும் பெற்றோர்களே ஜாக்கிரதை நமது திருமணத்துக்கு எவ்வளவோ நண்பர்கள் உறவினர்கள் விலை உயர்ந்த பொருட்களை அன்பளிப்பாக அளிப்பார்கள். பெருமையுடன் பெற்றுக் கொண்டு நன்றி சொல்வோம். அல்லாஹ் நமக்கு திருமண அன்பளிப்பாக தருவது இந்த மழலை செல்வங்கள். எத்தனை பேர் அவனுக்கு நன்றி சொல்கிறோம்.

என்னவோ திருமணம் முடிந்து பாத்து மாதங்களில் குழந்தை வந்து விடும் வளர்ந்து விடும் வாழ்ந்து விடும் என்று நினைத்துக் கொள்கிறோம். அல்லாஹ்வின் மாபெரும் கருணை அது.தனிப் பெரும் கொடை அது. அதை அன்புடன் வருடுவோம். அவர்களுடன் உறவாடுவோம்.அவர்களுக்காக நேரம் ஒதுக்குவோம்.

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர்

என்று தமிழ் கூறும் வள்ளுவம் சொல்கிறது..

கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. இணையதளத்தைக் காட்டிலும் இளந்தளிர்கள் இணையில்லாத பலம்!
posted by: Sheikh Abdul Qader (Riyadh) on 03 April 2016
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43435

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு. இறையருள் நிறைக.

ஒரு கொஞ்சும் மழலை கெஞ்சிக்கேட்கும் நிலைக்குத்தள்ளப்படுவதை பிரதிபலிக்கிறது இந்தப்பதிவு .

"நாம் குழந்தைக்களுக்காத்தேடுகிறோம் நம் குழந்தைகள் நம்மைத்தான் தேடுகிறதென்பதைமறந்து".

தேவையான கட்டுரை நம்மில் எல்லோரும் படித்து உணரவேண்டிய விஷயம். ஏனென்றால் பெரும்பாலும் நம்மில் ஏதாவது தேவையில்லாத ஒன்றுக்கும் உதவாத பலபாஷைகளில் பலமுறைவந்த புளித்துப்போன விஷயங்களை ஏதாவதொரு அட்டு ஊடகத்தில் ஆராய்ந்துகொண்டிருப்போம் அந்தநேரம் குழந்தைவந்து உம்ம,வாப்பா,மாமா,காக்கா,ராத்தா இந்தக்கண்க்கு புரியல கொஞ்சம் சொல்லித்தாவேன் என்றுகெஞ்சும்போது ஸ்கூல்ல மிஸ்கிட்டே சொல்லிக்கேக்கவேண்டியதுதானே இங்கவந்து ஏன்உயிரே எடுக்கிறேன்னு குழந்தைக்கிட்டே எரிந்துவிழுதல் இதுபெரும்பாலும் சகஜமாக நடக்கிறது.

சிலகுழந்தைகள் தூக்கத்தில் பற்களைக்கடிக்கும் அதற்குகாரணம் இப்படி ஆதரவுஇல்லாமல் பள்ளியிலும் வீட்டிலும் ஒதுக்கப்படுவதே காரணம். பிள்ளையின் மனதில் இப்படியொருபயமிருக்கும் நாளை மிஸ்கிட்டே இந்த சம்ம எப்டி சால்வ்பண்ணிக்காட்டுவேன்.

"கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது அன்புப்பேரக்குழந்தைகள் ஹசன்,ஹுசைன் ரழியல்லாஹு தஆலா அன்ஹுமா நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்மீது சுஜூதிலுருக்கும்போதும் ஏறிவிளையாடுவார்களாம் அந்தவேளையில் எழுந்து அமர்வுக்குவரமாட்டார்களாம் அப்பொழுது அன்னையர்த்திலகம் ஃபாத்திமா ரழியல்லாஹு த ஆலா அன்ஹா அவர்கள்வந்து குழந்தகளை இறக்கிவிடுவார்களாம் அதன்பிறகே தொழுகையின் மறு நிலைக்குவருவார்களாம் இறைவனின் சன்னிதானத்தின் போதே குழந்தைகளுக்கு இவ்வளவு உரிமைகொடுத்து வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள் நமது நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் எவ்வளவு அழகிய வரலாறு ஆனால் நாம் நிதானம் இழந்தே பழகிவிட்டோம் பிறகு நமக்குஏது சந்நிதானம்.

"தானத்தில் சிறந்த தானம் நிதானம்"

"முந்தைய உம்மு நுமைரா அவர்களின் உம்மா ஸே மாஷா அல்லாஹ்....! கட்டுரையில் உம்மாவிற்கெல்லாம் மகன்தான் செல்லம்"

"இந்த எஸ்.ஐ.புகாரீ அவர்களின் வாப்பா...! கொஞ்சம் பேசக் கூடாதா...?கட்டுரையில் வாப்பாவிற்கெல்லாம் மகள்தான் செல்லம் எல்லாபடங்களுமே பெண்குழந்தைகள்தான்"

இது ஒருதலைபட்சமா இல்லை உறவின் வெளிச்சமா அல்லாஹ்வுக்கே வெளிச்சம்..

"இந்த நவீன தொடர்பாடல் வசதி பல்வேறு நன்மைகளை இந்தச் சமூகத்திற்கு வழங்கி இருக்கும் அதே வேளை தூர இருப்பவர்களை கிட்டேயும் , நெருங்கி இருப்பவர்களை தொடர்பு எல்லைக்கு வெளியேயும் தள்ளியிருக்கிறது . இது நவீன சாதனங்களின் பிழை அல்ல . மாறாக நேரத்தை, நவீனத்தை, முறையாக கையாளத் தெரியாமல் தினறும் அறியாமையின் விளைவு."

மாஷா அல்லாஹ் ஆசிரியரின் மேலே அடைப்புக்குளுள்ள இந்தவரிகள் என்னைமிகவும் கவர்ந்தவரிகள்.

இன்ஷா அல்லாஹ் தொடரட்டும் கருத்துடன் கவரும் வரிகள் ஜஃஜாக்கல்லாஹ் க்ஹைர். இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. தொலைத்தும் தொலைந்தும் தொலைதூரம் போய் கொண்டிருக்கின்றோம்...
posted by: M.N.L.Mohamed Rafeeq (Singapore) on 06 April 2016
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 43441

நவீன உலகத்தில் நம்மை நாமே தொலைத்து இணக்கத்தையும், நெருக்கத்தையும் இழந்து நாசமாய் போய்க் கொண்டிருக்கின்றோம் என்பதை நெற்றிப் பொட்டில் நச்சென்று அடித்தாற் போல நறுக்கென்று சொல்லியிருக்கின்றார் கட்டுரை ஆசிரியர்...!

முகநூல் வாட்ஸ்அப் போன்றவற்றில் நாம் மூழ்கி அருகில் இருக்கும் உறவுகளைப் பேணாமல் முகம் தெரியாத யாருக்காகவோ எதுக்காகவோ நம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். அதையும் மீறி நாம் நெருங்க நினைத்தால் ஒருவகை எரிச்சலும், கோமும்தான் வருகின்றது.

எனது நண்பர் சாலிஹ் வீட்டிற்கு இணையதள செய்தி மற்றும் கட்டுரை விஷயமாக நான் அடிக்கடி செல்வதுண்டு. அங்கு செல்லும் போதெல்லாம் நல்ல பல படிப்பினைகள் எனக்கு கிடைக்கும். உண்ணும் உணவு முதல் உறவுகளைப் பேணுவது, இல்லற உக்திகள், பிள்ளை வளர்ப்பு, எளிமையான வாழ்க்கை, கடைபிடிக்க வேண்டிய நேரத்தின் அவசியம், இப்படித்தான் வாழ வேண்டும் எனும் மனஉறுதி என ஏராளமான விஷயஙகளை நான் அவரிடம் கற்றதுண்டு. அவரைப் போல் நம்மால் வாழ முடியுமா என அதிசயத்த தருணங்களும் உண்டு.

தம் பிள்ளைகளை அவர் பெயர் சொல்லி வா போ என்று அழைத்ததே கிடையாது. உம்மா ஏன்மா இப்படி செய்றீங்க...வாங்கம்மா போங்கம்மா என்று பிள்ளைகளிடம் பேசுவதில் ஒருவித கண்ணியத்தைப் பேணுவார். அதிகமான வேலைப்பளு, இயைதள செய்தி, நிருபர் பணி, பொது காரியங்கள் இப்படி எப்போதும் ஓய்வு ஔிவில்லாத பிஸியில்கூட பிள்ளைகளின் கேள்விக்கு நிதானமாக பதில் கொடுப்பார்.

ஒருமுறை மிக அதிகமான வேலை, சில பணிகளை முடித்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம். அவர் வீட்டு குட்டி வரவேற்பறையில் கதவை தாழிட்டு பணியில் மும்முரமாக இருந்து கொண்டிருந்தோம். அவரது இரண்டரை வயது இளைய மகள் வாப்பா வாப்பா என அழுது கொண்டு கதவைத் தட்டுகிறாள். இவரோ கடும் வேகத்தில் கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டிருந்தார். நான்கு கைகள் இருந்தால் அந்த நான்கிற்கும் பதினாறு வேலைகளைக் கொடுத்திருப்பார். பிள்ளையின் அழுகுரல் கேட்டு கதவைத் திறக்கின்றார். இரு கரம் நீட்டிக் கொண்டு அந்த மழலை இவரது மார்பில் தஞ்சமடைகிறது. அத்தனை வேலைகளையும் அப்படியே ஓரங்கட்டி விட்டு பிள்ளையை நெஞ்சோடு அணைத்தபடி முதுகில் தட்டிக்கொடுத்து கொஞ்சுகிறார். அதுவும் தக்கா பிக்கா என்று மழலை மொழியில் ஏதோ பேசுகிறது. அந்த மொழி அவருக்கு நன்றாகப் புரிகிறது. பதில் கொடுத்து உரையாடுகிறார்.

இப்படியே சுமார் பத்து நிமிடங்கள் மழலை அதுவாக கீழிறங்கும் வரை அணைத்துக் கொண்டே இருந்தார். மேசையில் இருந்த முக்கியமான பேப்பர்களை குழந்தை கேட்டது, பேனாவை எடுத்தது, கம்ப்யூட்டர் கீ போர்டை காலால் மிதித்தது இவர் எரிச்சல் அயைவில்லை! மாறாக அது கேட்டையெல்லாம் கொடுத்தார். பிறகு அது கீழே இறங்க கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து ஆறுதல் சொல்லி உம்மாவிடம் போங்க என அனுப்பி வைத்துவிட்டு, தாம் விட்ட வேலையைத் தொடர்ந்தார். இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை தரவே, எப்படி இவ்வளவு பிஸியிலும் பொறுமையாக பிள்ளைகளைக் கையாளுகின்றீர் என நான் வினவ,

இந்த வேலைகலெல்லாம் என் கால்தூசுக்கு சமம்! இது எனக்கு நிரந்தரம் கிடையாது. ஆவலோடு ஆதரவு தேடி வரும் என் பிள்ளையை நான் இப்போது உதாசீனப்படுத்தினால் அதன் உள்ளத்தில் வெறுப்பும் ஏமாற்றமும் அழமாகப் பதிந்துவிடும். நாளடைவில் அதுவே வேர் விட்டு விருடச்சமாக வளர்ந்துவிடும். அப்போது எனக்கு அது நிழல் தராது என்று சாதாரணமாக அழுத்தமான ஒரு தத்துவத்தைக் கூறி விட்டு வேலையில் மூழ்கி விட்டார். அவரிடம் நான் கற்ற நூற்றுக் கணக்கான பாடங்களில் இது வெறுமொரு அரிச்சுவடி மட்டுமே...

இந்த கட்டுரையின் வாயிலாக நான் அதை உணர்கிறேன். அருமையான அவசியமான காலத்திற்கேற்ற கட்டுரை!

பிள்ளைகளின் அன்பு என்பது இருப்பவனை விட இழந்தவனுக்குத்தான் அதிகம் தெரியம். அல்லாஹ் நம் அனைரையும் பாதுகாப்பானாக ஆமீன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. அருமையான பதிவு
posted by: Habeeb Ibrahim (kayalpattinam) on 06 April 2016
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43442

இன்றைய the so-called "tech-savvy" சமுதாயத்திற்கு அவசியமான பதிவு. வாழ்த்துக்கள் சகோ!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:... வாப்பா...! கொஞ்சம் பேசக்கூடாதா?
posted by: சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (காயல்பட்டணம்.) on 06 April 2016
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43443

அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்...ஹு.

வாப்பா...!கொஞ்சம் பேசக்கூடாதா..?! இந்த ஆக்கத்தின் இடையிடையே பதித்துள்ள  போட்டோக்களை பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் ஞாபகத்திற்க்கு வந்தது நான் விடுமுறைகளில் என் குழந்தைகளை கடலின் அலைக்கரைக்கு அழைத்துச் சென்று பிஞ்சு குழந்தைகளின் பஞ்சு பாதங்களை தொடர் அலைகளால் முத்தமிடச் செய்ததும், பந்தாட்டம்,கபடி,நொண்டியடித்து ரட்டாங்கோடு, கண்கட்டி தேடுவது, யுனொ கார்ட் போன்ற விளையாட்டுக்களை விளையாடினவைகள்தான் ஞாபகம் வந்தது.இவர்களோடு விளையாடும் இவ் விளையாட்டுக் களில் மிக அதிகமாக நான் தோற்று அவர்களின் வெற்றியை ரசிப்பதுண்டு.

மிகச் சில சமயங்களில் அவர்களைத் தோற்க்கடித்து தோல்வியைும் தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும் அவர்களுக்கு புகட்டுவதுமுண்டு. அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்கால வாப்பாக்களில மிகச்சிலர் தன்னை சுற்றி சுற்றி வந்து பாசத்திற்க்காக ஏங்கும் தன் குழந்தைகளின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு அன்பு காட்டுவதில் வீழ்ச்சி அடைந்தும்; கடல் கடந்து கரை கடந்து நேரில் பார்த்திராத யாரோ ஒருவரின் மனநிலை புரிந்துஅவர்களிடம் அன்பு காட்டுவதில் எழுச்சிஅடைந்திருக்கும் வாப்பாக்கள் இந்த ஆக்கத்தை வாசித்த பின்பாவது தங்கள் அறியாமையை திருத்திக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ்.

இன்றைய குழந்தைகள் நாளை விபரம் அறிந்த பருவத்தில் அல்குர்ஆனின் ஒளியில் கீழ் காணும் துஆ வை கேட்கும் போது (*நான் சிறு.... போல்*) என்ற வரிகளை கூர்ந்து சிந்தித்து நினைவில் வைத்தால் குழந்தைகளோடு நம் அன்பு பெறுகும்.

அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்றஜீம்.

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே!

*நான் சிறு பிள்ளையாக இருந்த போது,என்னை(ப்பரிவோடு)அவ்விருவரும் வளர்த்தது போல்,*" நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் : 17:24) .

இக்காலத்திற்கு தேவையான இந்த ஆக்கத்தை அழகிய தமிழில் செதுக்கியிருக்கும் S.I. புஹாரி காகா அவர்களுக்கும், இதை வெளியிட்டுள்ள இவ்விணையதளச் சகோதரர்களுக்கும் ஜஸாகல்லாஹு க்ஹைரா.

காயல்பட்டணத்திலிருந்து
சாளை:M.A.Kமுஹம்மத்இப்றாஹீம் ஸுஃபி.
06 ஏப்ரல் புதன்  2016.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...wappa
posted by: Hylee (Kayalpatnam ) on 07 April 2016
IP: 103.*.*.* | Comment Reference Number: 43444

அருமையான ஆக்கம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:...இந்த கருத்து என்னுடைய 1500 ஆவது கருத்து.
posted by: சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) on 07 April 2016
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43445

மாஷா அல்லாஹ்.

மிகவும் அருமையான கட்டுரை, அழகிய நடையில் ஒவ்வொருவரையும் தங்களை தாங்களே எடை போட்டு அறியக்கூடிய கட்டுரை. சபாஷ்... காக்கா.

பாராட்டுக்கள். அதிகம் எழுதுங்கள்.

இந்த கருத்து என்னுடைய 1500 ஆவது கருத்து.

இந்த கட்டுரைக்கு அதிகமாக கருத்து எழுத வேண்டும் என்ற ஆவல் உள்ளது. வேலைப் பளு அதிகம் இருப்பதால் வழமை போல அதிகம் எழுத முடியவில்லை.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved