இன்ஷாஅல்லாஹ், டிசம்பர் 19ஆம் நாள் நமது இணையதளத்திற்கு 15ஆவது பிறந்த நாள். அதாவது 5475 நாட்களில் அவர்கள் ஆற்றிய சேவைகளின்
மகுட நாள். போராட்டங்களை வென்று கடந்து வந்த நாள் - இனிய நாள் இந்த நாள். வாழ்த்திப் பாராட்டி, துஆ செய்வோம் வளர்ச்சிக்கு!
டிசம்பர் மாதத்தின் சிறப்பு தெரியுமா?
அறிஞர் முஹம்மது அலி ஜின்னா அவர்குள், மைசூர் அரசர் ஹைதர் அலி, இந்திய கணித மேதை எஸ்.ராமானுஜம், மகாகவி பாரதி, டாக்டர்
ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, முன்னாள் க்ரிக்கெட் வீரர் செய்யத் கிர்மானி, சோனியா காந்தி, ரஷ்ய அதிபதி ஸ்டாலின், செஸ் சாம்பியன்
விஸ்வநாதன் ஆனந்த், விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், லூயி பாஸ்டர் (நாய் கடி மருந்து) பிரணாப் முகர்ஜி, ஏசு கிறிஸ்து போன்ற அறிஞர்களும்,
மத போதகர்களும், அறிவாளிகளும், அறிவியல் மேதைகளும் பிறந்த புண்ணிய மாதம் டிசம்பர் மாதமே! இதில் 19ஆம் தேதியில் யாரும்
பிறக்கவில்லை. “காயல்பட்டணம்.காம் மட்டுமே பிறந்திருப்பது சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. (எனது கட்டுரை வரலாற்று செய்தி உள்ளே நல்
முத்தாக இருக்கும். அது எனது பாணி - பணியும் கூட)
குறைகாண முடியாத வளர்ச்சி
நான் கடந்த பத்து ஆண்டுகள் நமது இணையதளத்தைப் பார்வையிட்டு வருகிறேன். நான்கு ஆண்டுகளாக கட்டுரை எழுதி வருகிறேன். உங்கள்
இணையதளத்தில் என்னைக் கவர்ந்தது, சுடச்சுட செய்திகள். அடுத்து கட்டுரைப் பகுதியாகும். எனது கட்டுரையில், எனது கருத்தை எடுத்து
வைப்பேன். திணிக்க மாட்டேன். “ஊருக்கு புத்தி சொல்லும் வயது எனக்குக் கிடையாது”. மனதில் பட்டதை மசி (மை)யில் தருகின்றேன்,
அவ்வளவுதான். அறிவாளிகளை விட அறிவாளிகளை அல்லாஹ் படைத்துள்ளான் - நம் யாவருக்கும் தெரியும்.
தினசரி பத்திரிக்கை செய்திகள்
நான் சார்ந்துள்ள அமைப்புகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை முன்னணி தினசரிகளுக்கு அனுப்புவோம். அவர்கள் உடனே வெளியிடுவதில்லை. அதைப்
போக்க எங்களுக்கு உங்கள் இணையதளம் கிடைத்தது. பல அமைப்பு செய்திகளை ஆதாரத்துடன் அனுப்புவோம். உடனே வெளியிட்டு, உலகில்
வாழும் காயல் நகர மக்களுக்கு எடுத்து வைப்பீர்கள். அதனால் முன்னணி தினசரிகளை எதிர்பார்ப்பதை அவர்களுக்கு செய்தி அனுப்புவதை நிறுத்திக்
கொண்டோம். எங்கள் அமைப்புகளை நாடறியச் செய்தமைக்கு நன்றி.
சிறிய ஆலோசனை
நமது இணையதளத்தில் கட்டுரைப் பகுதியில் ஆடவர்கள் மட்டுமே எழுதுகிறார்கள். முஸ்லிம் மகளிர் கட்டுரை ஒன்றைக் கூட காணோம். நமது
பெண்கள் பட்டதாரிகளாக - ஆலிமாக்களாக - முதர்ரிஸாக்களாக வாழுகிறார்கள். அவர்கள் திறமையை நாடு உலகம் அறியச் செய்வீர்களா? அவர்கள்
எழுத மாட்டார்கள். எழுத வைக்க வேண்டும். “காயல்பட்டணம் பெண்கள் தைக்கா சேவை ஒரு பார்வை” என்ற
எனது கட்டுரையில் பெண்களின் திறமை குறித்து எழுதி வருகிறேன். (பாருங்கள். பல பெண்கள் பார்க்கட்டும்.)
கட்டுரை எழுத தட்டச்சி போட இடம் வேண்டும் - தருவீர்களா?
ஊரில் நிறைய கம்ப்யூட்டர் புரவ்ஸிங் சென்டர்கள் இருந்து என்ன பயன்? எங்கள் கட்டுரைகளை உடனுக்குடன் தட்டச்சியில் ஏற்றித் தருவார்
யாருமில்லை. உங்கள் இணையதளத்திற்கு ஓர் தட்டச்சி போட்டு தரும் இடத்தைத் தாருங்கள். வெளியாகும் கட்டுரை அனைத்துக்கும் பதில் தர
ஆசையாக உள்ளது. மூன்று பக்கத்துக்கு மேல் கட்டுரை இருந்தால் முகம் சுளிக்கிறார்கள். எழுத வேண்டிய கருத்தை விவரிக்க முடியாமல், “வாலும்
- தலையுமின்றி” எழுதிக் கொடுக்கிறேன். பிரதி ஒன்றுக்கு பக்கம் பத்து ரூபாய் கொடுத்தும் தட்டச்சி செய்து தர ஆளில்லை. இதைக்
கவனிப்பீர்களா?
கைபேசி மூலம் தகவல் தரலாமா?
உங்கள் இணையதளத்தின் ஒரு வாரம் செய்தி தலைப்பு, கட்டுரை தலைப்பு அறிய தனி கைபேசி எண் தேவை அல்லது தினந்தோறும் செய்தி கட்டுரை
தலைப்பு - யார் எழுதி உள்ளார் என்பதை அறிந்துகொண்டு, அதை பிரிண்ட் எடுத்து பார்க்க எங்களுக்கு ஓர் கைபேசி எண் தேவை. உங்கள் மூவர்
கைபேசி எண்கள் தேவையில்லை. அதில் அவசர அழைப்பு அழைத்து அழுத்துப் போன நாட்கள் உண்டு. உங்கள் பணிக்குத் தடங்கல் இல்லாத தனி
நம்பர் கைபேசி வேண்டும். அது தன்னிச்சை - ஆட்டோமாட்டிக்காக தகவல் தரும் பணி அதில் வேண்டும்.
பள்ளி - மத்ராஷா மாணவர்களுக்கு தனி பகுதி தேவை
பள்ளிக்கூடங்களில் நடக்கும் கட்டுரைப் போட்டி நாட்டுத் தலைவர்கள் பற்றியும், மத்ரஸாவில் நடக்கும் மார்க்கப் போட்டியில் நபிகளார் வாழ்க்கைச்
செய்திகளை நமது இணையதள நேயர் மூலம் ஒரு பகுதி ஆரம்பித்து, அவர்கள் தேவைக்கு அதில் போய் பார்க்கும்படி செய்யலாம். இந்தப் பகுதியில்
நூல் ஆதாரங்களுடன் எழுதி வைக்கலாம். இவை காலத்தால் பயன்படும். எங்களால் நடக்கும் கட்டுரைப் போட்டி நடந்தால் என்னிடமே எங்கள் வட்டார
பெண்கள் அனைவர்களும் வருகிறார்கள். எத்தனை பேருக்கு எழுதித் தர நேரம் இருக்கும்? அதனால், காயல் டாட் காம் போய் இந்தக் கட்டுரைகளை
எடுக்கச் சொல்லலாம். அதற்கு எங்கள் போன்றோரிடம் நிறைய தகவலை சேர்த்து வைக்கலாம். மாணவ மாணவியர்கள் மத்ரஸாவில் பயில்வோருக்கு
அந்தப் பகுதி பயனாக இருக்கும். அதை தொடங்குங்கள்.
புகார் பகுதி - கலந்துரையாடல் பகுதி
அரசு துறையுடன் கலந்து ரேஷன் கடை புகார் - இதர புகார் பகுதிகளை உடனுக்குடன் ஏற்று, அந்தப் பகுதியில் விரும்புவோரின் மனக்குறையை
எடுத்து வைக்கலாம். அதில் கலந்துரையாடல் எழுத்து மூலம் செய்யுங்கள்.
கட்டுரை பகுதிக்கு எவ்வளவு நாள்?
ஒரு கட்டுரை வெளியான தேதியிலிருந்து ஒரு மாதம் வைக்கலாம். 20 நாளில் கட்டுரை எழுதியவர்களை காணாக்கி விடுகிறீர்கள். அம்முறையை
மாற்றி அமைக்கவும். அல்லது அவரின் மறு கட்டுரை வந்தால் முன் கட்டுரை மாறிவிட்டால் சரியாகும்.
உங்கள் எண்ணம்
உங்கள் எண்ணம் பகுதி ஒன்று தேவை. தினமும் தோன்றும் மனப்போக்கு அதில் பிரதிபலிக்கலாம். நிறைய எழுத நேரமில்லை. இன்ஷாஅல்லாஹ்
தொடரும் தகவல்கள். |