Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:54:59 AM
செவ்வாய் | 7 மே 2024 | துல்ஹஜ் 1741, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:02
மறைவு18:28மறைவு17:47
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1519:41
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 22
#KOTWART0122
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 19, 2012
INNOCENCE OF MUSLIMS - இதன் பின்னணி என்ன?
இந்த பக்கம் 5614 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அது செப்டம்பர் 8 சனிக்கிழமை. எகிப்தின் ஷேக் காலித் அப்துல்லாஹ்வின் தொலைக்காட்சியான அல்-நாஸ் - அறபிய மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த 13.51 நிமிடங்கள் மட்டும் ஓடும் வீடியோவை முதன்முதலாக வெளியிட்டது. ஒரு சில மணித்தியாலங்களில் அது கணணி மூலம் அறபுலகில் வலம் வந்தது. பல்லாயிரக்கணக்கானோர் அல்லது சில லட்சம் பேர் ஓரிரு நாட்களில் அதனைப் பார்த்தனர். ஆத்திரம் அடைந்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் YOU TUBE-இலும் அது வந்ததைப் பார்த்தனர். அவ்வளவுதான்! அறபுலகம் வெடித்தது.

சேம் பெசில் (Sam Bacile) என்ற அந்த நபர் ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று Innocence of Muslim என்ற திரைப்படத்தின் முன்னோட்டத்தை (Trailer) YOU TUBEஇல் பதிவு செய்தார். தன்னை கலிபோர்னியாவின் Real Estate வர்த்தகர் என்று அறிமுகப்படுத்திய அவர், அப்படத்தின் இயக்குநரும், கதை அமைத்தவரும் தானே என்று ஊடகங்களுக்குக் கூறினார்.

இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தைத் தயாரிக்க 100 யூதர்களிடம் மொத்தமாக 50 லட்சம் டொலர் சேர்த்தாகவும் கூறிய அவர், “இஸ்லாம் ஒரு கேன்சர் - புற்றுநோய்” என்று திரும்பத் திரும்ப ஊடகங்களோடு பேசும்போது கூறினார்.

தன்னை ஒரு இஸ்ரேலி - அமெரிக்கன் என்று அவர் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால், இவரது பெயரில் எந்த இஸ்ரேல் - அமெரிக்க பிரஜையும் இருப்பதாக தங்களிடம் குறிப்பு இல்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்தது. ஆகவே, சேம் பெசில் என்பது புனைப்பெயராக இருக்கலாம் என்று ஊடகங்கள் ஊகித்தன - ஆராய்ந்தன.

இப்படத்தின் ஆலோசகராக இருந்த ஸ்டீவ் க்ளெய்ன் (Steve Klein) கூறும்போது, “சேம் பெசலி யூதனோ - இஸ்ரேலைச் சேர்ந்தவனோ அல்ல” என்றார்.

Nakoula Basseley Nakoula என்பதுதான் அவரது இயற்பெயர் என்று காவல்துறை உறுதி செய்தது. இவருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. நிகோலா பெசிலி (Nicola Bacily), எர்வின் சலமெஹ் (Erwin Salameh) என்ற பெயர்களிலும் இவர் உலாவினார். இவரது கடந்த காலம் சிறப்பானது அல்ல.

பொய்யான வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, Social Security Numbers எனப்படும் சேமலாப நிதி போன்ற அமைப்பில் உள்ள பிறர் பணத்தைக் களவாடி, தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி, பின்பு அப்பணத்தை வேறு வங்கிக்கு மீண்டும் மாற்றி, கணக்கை மூடிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, 2010இல் அவருக்கு 790,000 டொலர் பணமும், 21 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சேம் பெசலி உண்மையில் யூதர் அல்ல. எகிப்தின் Coptic Christians என்று கூறப்படும் கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்தவர். சமீப காலத்தில் இவர்கள் பெரிய அளவில் எகிப்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இம்மக்களுக்கு எதிரான எதிர்ப்பு அலை எகிப்தில் பலமாக இருக்கிறது. அவர்கள் பலவாறாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய பத்திரிக்கைகளில் வந்தன. இக்கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆதி காலத்திலேயே பிணக்குகள் உண்டு என்று கூறுவர்.

அன்றொரு நாள் கெய்ரோவின் ஆளுநராக இருந்தவரிடம் ஒரு முறைப்பாடு செய்யப்பட்டது. அதாவது, நகரின் ஒரு பகுதியில் இருந்த கிறிஸ்துவர்களின் வழிபாட்டுச் சிலையொன்றின் மூக்கு உடைக்கப்பட்டுள்ளது என்று கிறிஸ்துவர்கள் கூறினர். ஆளுநர், “ஒரு வாரம் அவகாசம் தாருங்கள், குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன்” என்றார். ஒரு வாரத்தில் ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் ஒரு வாரம் அவகாசம் கேட்டார். அப்போதும் குற்றவாளி பிடிபடவில்லை.

அடுத்த வாரம் ஆளுநர் கூறினார்: “இன்னும் ஒரு வாரம் தாருங்கள்! அதற்குள் குற்றவாளி பிடிபடாவிட்டால் நீங்கள் பதிலுக்கு எனது மூக்கை உடைக்கலாம்” என்றார். மீண்டும் தோல்வி. ஆளுநர் - மூக்குடைக்கப்பட்ட சிலையின் முன்னால் வந்து நின்றார். அவரது மூக்கை உடைக்க ஒருவர் முன்வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர், “நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!!” என்று கத்தினார். சிலையின் மூக்கை உடைத்தது தானே என்றும், இதன்மூலம் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் சண்டை உண்டாகும் என்று தான் நம்பியதாகவும் அவர் கூறினார்.

Innocence of Muslims படத்தின் முதல் காட்சி இன்றைய எகிப்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. காவல்துறை மவுனித்து நிற்க, வெள்ளை ஆடையணிந்த முஸ்லிம்களால் மருத்துவர் ஒருவரின் சிகிச்சையகம் உடைத்து நொறுக்கப்பட்டு, எரியூட்டப்படுகிறது. உயிர் தப்ப வெளியே ஓடிய மருத்துவர், அடுத்த கட்டிடத்தின் மாடியில் இருந்த தனது மகளை அழைத்து, தனது சிகிச்சையகம் தாக்கப்படுவதாகக் கூறுகிறார். வீடு சென்ற அவர், தனது மகள்களிடம், “இங்குள்ள எல்லா கிறிஸ்துவர்களையும் கொல்ல முஸ்லிம்கள் விரும்புகிறார்கள் - கொல்லுகிறார்கள்... ஆனால் அரசு அதனை மூடி மறைக்கிறது” என்கிறார். இந்தக் காட்சி முஸ்லிம்களுக்கெதிராக கிறிஸ்துவர்களின் உணர்வுகளைத் தூண்டக்கூடியதாக உள்ளது.

அடுத்து வரும் காட்சிகளில் முஹம்மது நபியின் வாழ்க்கை, அவர்களது குடும்பம், அவர்களது கூட்டத்தார் காட்டப்படுகின்றனர். பின்பு தனது மனைவி கதீஜாவுடனும், வேறு பெண்களுடனும் முஹம்மது உறவு கொள்வதாகக் காட்சிகள் வருகின்றன. ஒரு காட்சியில், சிறுமிகளோடு உறவுகொள்ள முஹம்மது அனுமதிப்பதாகவும், இன்னொரு காட்சியில், முஹம்துவின் தோழர்களில் ஒருவர் முஹம்மது ஓரினச் சேர்க்கையாளர் என்று கூறுவதாகவும் உள்ளது. எழுத்தில் வடிக்கவே முடியாத இன்னும் அறுவறுப்பான பாலியல் காட்சிகளும் அதில் உள்ளடக்கம். (நஊது பில்லாஹ்...!)

குர்ஆனை உருவாக்குவதின் பின்னணியில் கதீஜா இருந்ததாகவும், குர்ஆன் ஆனது கிறிஸ்துவ - யூத வேத நூல்களான Tora and New Testamentகளைப் பின்பற்றியதே என்றும் குறிப்பிடுகிறார். மொத்தத்தில், இஸ்லாம் என்பது வன்முறை, பிறர் வெறுப்பு ஆகியவற்றை அடையாமாகக் கொண்டது எனவும், முஹம்மது என்பவர் அறிவு குறைந்தவர் என்றும், அதிகார மோகம் மற்றும் பெண்கள் மயக்கம் கொண்டவர் என்றும் பலவாறாக Innocence of Muslims அள்ளித் தெளிக்கிறது.

ஆரம்பத்தில் இப்படத்திற்கு Desert Storm - பாலைவனப் புயல் என்று பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்ததாம். பின்பு அது Innocence of Bin Laden என்றும் மாற்றப்பட்டதாம். படத்தில் நடித்தவர்களோ, தங்களுக்கு இப்படத்தின் முழுக் கதையும் சொல்லப்படவில்லை என்றும், ஒரு மாதத்திற்கும் குறைவாக நடந்த படப்பிடிப்பில் அன்றைய தினத்திற்குரிய வசனங்கள் மட்டுமே தரப்படும் என்றும், இது இஸ்லாத்திற்கு எதிரான படம் என்று தங்களுக்கு எதுவுமே தெரியாது என்றும், படப்பிடிப்பிற்குப் பிறகு பல வசனங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முஹம்மதுவாக படத்தில் தோன்றுபவர் தனது பெயர் படத்தில் மாஸ்டர் ஜோர்ஜ் (Master George) என்பதாகவும், இப்படம் இவ்வாறான கதையைக் கொண்டுள்ளது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக இப்படத்தில் நடித்தவர்களுக்கு அசல் கதை தெரியாது. வித்தியாசமான வசனங்களையே பேசியுள்ளனர். ஆனால், சேம் பெசலி மற்றும் இவனோடு இணைந்த சில முஸ்லிம் எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமே உண்மை தெரியும் என்கின்றனர். அமெரிக்க அரசு YOU TUBE நிறுவனத்திடமும், அதன் உரிமையாளரான GOOGLE இடமும், இந்த 13.51 நிமிட குறும்படம் உங்களது சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் என்று கூறி, தடை செய்யக் கோரியபோது, GOOGLE அதை முழு அளவில் தடை செய்ய மறுத்துவிட்டதோடு, பிரச்சினைக்குரிய நாடுகளான - மத்திய கிழக்கிற்கும், இந்தியா, இந்தோனேஷியா போன்ற வேறு சில நாடுகளுக்கும் தடை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இன்றும் அதனைப் பார்க்க முடியும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹொலிவுட்டிலுள்ள Vine Theatre என்ற சிறிய திரையரங்கில் இப்படம் ஒரேயொரு காட்சியாக மட்டும் திரையிடப்பட்டது. அப்போது அப்படத்தைப் பார்த்தவர்கள் வெறும் பத்தே பேர்தான். இப்படம் திரையிடப்பட்டபோது, அதன் தயாரிப்பாளரான சேம் பெசலி - அருகிலுள்ள உணவு விடுதியில் அமர்ந்தவாறு, தன் படத்திற்கான வரவேற்பு எப்படியுள்ளது என்று பார்த்துக்கொண்டிருந்தார். தற்சமயம் அத்திரையரங்கம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தை வெறும் பத்து பேர் மட்டுமே பார்த்திருக்க, அதன் 13.51 நிமிட நேரத்தைக் கொண்ட - படத்தின் ஒரு பகுதியை மட்டும் YOU TUBEஇல் பார்த்து இவ்வளவு ஆர்ப்பாட்டங்களை முஸ்லிம்கள் செய்வது ஏன் என்று விஷமத்தனமாக கேள்வி எழுப்புகிறார் அப்படத்தின் ஆலோசகர் ஸ்டீவ் க்ளெய்ன்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற மத நிந்தனைகளை மேற்குலகம் தடை செய்ய வேண்டும். இல்லாவிடில், ஏற்கனவே கனலாக இருக்கும் மேற்கு - கிழக்கு உறவு மேலும் எரியும்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கதை அல்ல நிஜம்
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 19 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22275

ஷா ஜகான் துரை இவ்வளவு செய்திகளை தந்தது போல் இதுவரை ஆர்ப்பாட்டம் செய்யும் எந்த அமைப்புகளும் தந்ததில்லை.மிக்க நன்றி உண்மையை சொல்லப்போனால் நானும் கூட வெறும் கூட்டத்தோடு கோவிந்தா என்பார்களே அதே போல்தான் அந்த ஆர்பாட்டங்களை பார்த்தேன். இவ்வளவு தகவலையும் தந்த துரை அவர்கள் இந்தியாவில் இன்றும் கூட அதைபார்கலாம் எனபது ஆச்சரியமாக இருக்கிறது. u tube எனக்கு பார்க்க தெரியாது. தெரிந்தாலும் நீங்கள் சொல்வதை பார்த்தால் இதயம் பற்றி எறியும்.

இன்னும் இதுபோல் படங்கள் எடுப்பேன் என்று இந்த படத்தை தயாரித்தவன் சொல்லிக்கொண்டிருக்கிறான். படத்தின் முழு கதையையும் கேட்ட பிறகு தானே அதில் நடிப்பதற்கு சம்மதிப்பார்கள் எல்லோரும் கூண்டோடு ஒழிக்கப்படுவார்கள்.. சல்மான் ருஷ்டி என்ற கயவன் முஸ்லிம் என்ற போர்வையிலே sataanic verses எழுதினான். தஸ்லீமா நஸ்ரின் என்ற ஒரு விபச்சாரி இஸ்லாத்தை பற்றி எழுதினாள்.இவற்றை எல்லாம் தடுக்க முடியவில்லையே ஏன், சட்டத்தின் முன் நிறுத்தி கேள்வி கேட்க முடியவில்லையே ஏன்.

தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஏன் முளை விடாது, விரக்தி அடைந்த மனங்கள், வேதனையின் வெளிப்பாடுகள் தானே அவை. இந்த அமெரிக்காவை அழிக்க சட்டங்கள் சரிவராது. மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது. ஒரு ஒசாமா பின் லேடன். ஓர் சத்தாம் ஹுசைன்,போதாது, ஒரு அயாதுல்லா கொமெய்னி காணாது. காலப்போக்கில் அமெரிக்காவின் சர்வாதிகார தன்மை மாற வில்லை என்றால் அல்லாஹ் இந்த தீய சக்திகளை அழிக்க ஒழிக்க தினசரி அந்தமாதிரி துணிச்சல் மிக்க தலைவர்களை உலகுக்கு அடையாளம் காட்டி கொண்டே இருப்பான். ஆனால் யஹூதிகள் இருக்கும்வரை இந்த வெறியர்களின் தாகம் மாறாது,, அல்லாஹ்வின் கோபமும் தீராது. அல்லாஹு அக்பர்.

தீவிரவாதிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: shaik sinan (BANGKOK) on 19 September 2012
IP: 110.*.*.* Thailand | Comment Reference Number: 22277

இந்த படத்தை பற்றி அந்த நாய் பற்றி இவளு DETAILS தேவை இல்லை . ப்ளீஸ் REMOVE பண்ணும் மனசு கொதிக்குது ப்ளீஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: Peena Abdul Rasheed (Riyadh) on 19 September 2012
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22279

ஷாஜஹான் காக்க வாசகத்தை பார்த்து என் கண் கலகியது உடன் இறைவனிடம் இரு கையாந்தி அவர்களுக்கு எதிராக துஆ புரிந்தேன்.கண்டிப்பாக உலகம் பார்க்கிற படி தண்டனை கொடுப்பான் அமீன்.

இதுவரை விளக்கம் தெரியாமல் உங்கள் விளக்கம் அறிந்து பல பல முஸ்லிம்களும் அல்லாதவர்களும் கண்டிப்பாக மனவர்த்த படுவார்கள். நம்மவர்கள் அனைவர்களும் வன்முறைகளில் ஈடுபடாமல் இறைவனிடம் கை யாந்துங்கள் நிச்சயம் நமக்கு பலன் கிடைக்கும் அமீன். இன்னும் என் மனம் கொதிப்படைகிறது இறைவன் விரைவில் காண்பிப்பான் அமீன்.

பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. He has the blood in his hand.
posted by: Abdul Wahid S. (Kayalpatnam.) on 19 September 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 22280

"ஆரம்பத்தில் இப்படத்திற்கு Desert Storm - பாலைவனப் புயல் என்று பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்ததாம்".

Not "Desert Storm" rather "Desert Warriors" - "பாலைவனப் பேராளிகள்" அல்லது "பாலைவனப் போர் வீரர்கள்" .

-------------------------------

Nakoula Basseley Kakoula , is an Egyptian-American Coptic Christian and his intention was not to make pornographic movie. It is evident from the clip he has upload on to "YouTube". Had it been his intention, he could have turn to his holy scripture "Bible" for inspiration. The Bible is a good source for such kind of movie in which we can read stories like daughters fornicated with their own father (Genesis, Chapter 19: 30:38), brother raped his female sibling (22 Samuel 13:1-14), A daughter-in-law deceived her own father-in-law in order to have a child (Genesis, Chapter 38 1:18). The list can go on and on.....................................

Furthermore this Coptic christian could have easily got the idea of how to slay innocent people and loot their belongings from Genesis,chapter-34.

But it appears to be that, this evil man had grudge against his fellow Egyptians who happened to be Muslims and his vengeance stemmed from years of conflict between the two communities. In order to take revenge, he maligned the holy Qur-an and the Prophet (Sal). He portrayed Muslims as "blood thirsty people.

On the contrary it was their Christian Brothers (Crusaders from the North) who had bloods of innocent Muslims in their hand.

He took the wrong step and he has the blood in his hand will bear the brunt of it. Insha-Allah

-------------------------

Dear Admin.

I am well aware of the Qur-anic versus (6:108) which says, Revile not those unto whom they pray beside Allah lest they wrongfully revile Allah through ignorance. .........

I too know that the above verses can be applied to their scriptures as well. Nevertheless I have quoted the verses from the Bible lest I revile it but to highlight the stories in it.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...ஷைத்தான்கள்
posted by: Ruknudeen Sahib (China) on 19 September 2012
IP: 116.*.*.* China | Comment Reference Number: 22284

அஸ்ஸலாமு அலைக்கும் இந்த சாம் பெசில் என்ற பெரிய ஷைத்தான் மீதும் இதற்காக தெரிந்தே உழைத்த உதவி செய்த அனைத்து ஷைத்தான்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் மற்றும் கோபம் திரும்பட்டுமாக அல்லாஹ் நம்மையும் நம் மார்கத்தையும் இந்த கேடு கேட்ட ஷைதான்க்ளிட்மிருந்து பாதுகாத்து கிருபை செய்வானாகவும் ஆமீன் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: Sha Jahan (Kayalpatnam) on 19 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22285

Attention; Mr. Abdul Wahab S.

Thanks for your comment. The TIME magazine that came out first with an article said as  given below. Further it is true many news papers now mention it as Desert Warriors.

Tim Dax

Another actor in Innocence of Muslims, recognizable by his shaved head covered mostly in tattoos. Dax acknowledged to entertainment blog Joe My God that he did appear in the film but says that he was also duped — he says he auditioned for the movie Desert Storm and that his character was completely different than what was has appeared in the YouTube trailer.

Shah Jahan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re: It is amateur, but made by Professionals
posted by: M.M. Seyed Ibrahim (Chennai) on 20 September 2012
IP: 103.*.*.* India | Comment Reference Number: 22294

Here is the feedback from two Medical Professors (one of them is my Friend, the other a UK Cognitive specialist with a PhD from MIT) who saw that film:

The comments about the film that it is "low quality", "amateur" etc are true, but they miss the point. They were capable of making professional movie.It has been intentionally made to look like amateur adult movie to target to youth of all faith. The weak Muslims will get much weaker, and the non-muslims can't see anything positive about the Prophet, after seeing this movie. They have used a variety of scientific techniques available, in every frame, to achieve their aim: character assassination.

A simple murder scene doesn't stay on viewers' mind for long. It isn't character assassination. Raping a young girl, torturing her will stay afresh on viewers' mind for long. That would be a perfect character assassination. In the trailer itself, the character assassination happens.

In this movie, we hear & see and they are processed differently. In neuro-anatomy, they is something called McGurk-MacDonald effect - perceptual phenomenon that demonstrates an interaction between hearing and vision in speech perception. The illusion occurs when the auditory component of one sound is paired with the visual component of another sound, leading to the perception of a third sound. The visual information a person gets from seeing a person speak changes the way they hear the sound (Definition from Wikipedia)

The result is a chilling effect: Even when we present a good book (or a good speech) to the person who saw the movie, he has to overcome everything that got registered in his mind before the content of the book gets registered in his mind. So, Muslims need to make a high impact movie (applying all scientific principles) about the Prophet to overcome the effects of this movie [That was the opinion of Cognitive specialist]

The responses from our brothers and sisters in Kayal, Chennai and elsewhere could have been better. Please see http://wp.me/pmMJ0-jY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...
posted by: Shaik Dawood (MALDIVES) on 18 October 2012
IP: 27.*.*.* Maldives | Comment Reference Number: 22896

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த சாம் பெசில் என்ற பெரிய ஷைத்தான் மீதும் இதற்காக தெரிந்தே உழைத்த உதவி செய்த அனைத்து ஷைத்தான்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் மற்றும் கோபம் திரும்பட்டுமாக அல்லாஹ் நம்மையும் நம் மார்கத்தையும் இந்த கேடு கேட்ட ஷைதான்க்ளிட்மிருந்து பாதுகாத்து கிருபை செய்வானாகவும் ஆமீன்

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. வேண்டுகோள்
posted by: M.Fauz (Al Ain UAE) on 03 November 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23431

ஷாஜஹான் துரை அவர்களுக்கு என் அஸ்ஸலாமு அலைக்கும்.அந்த கேடுகெட்ட படத்தை கேள்வி பட்டதுமே எனக்குள் "கோலவெறி " ஏற்பட்டது.

துரை,ப்ளீஸ் மேலும் கேடுகெட்ட படத்துக்கு விமர்சனக்கள் கொடுத்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். நெருப்பென்றால் வாய் சுடதுத்தான். நமக்கு தெரியும் ரசூலின் (ஸல்) வாழ்க்கை வரலாறு. முதல் நூறு பேரில் முதலாவதாக இருக்கும் இவரை படமல்ல தாஜ்ஜாலே வந்தாலும் புகழை கெடுக்க முடியாது. M.பவுஸ்.(கண்டி.ஸ்ரீலங்கா)ALAIN UAE


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved